Tuesday, October 5, 2010

எந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச பரபரப்பு அறிக்கை

ஆன்மீக புத்தகத்திலிருந்து , அறிவியல் புத்தகம் வரை தவறாமல் இடம் பெரும் செய்தி, எந்திரன் எந்திரன் எந்திரன் தான்..

இலக்கியம் , மருத்துவம், பொறியியல் இதழ்கள் கூட எந்திரனை பாராட்டியோ , திட்டியோ ஒரு கட்டுரை வரைந்து விடுகின்றன..

தீப்வாளிக்கு வெளியூர் செல்லும் பேருந்துகளில் கன்னா பின்ன என விலையை ஏற்றி விற்கிறார்கள்.. பயணம் என்பது அத்தியாவசிய தேவை.. எனவே இந்த கொள்ளையால் மக்கள் பாதிக்க படுகிறார்கள்.. இதை கேட்க ஆள் இல்லை.. கேட்டால் விளம்பரம் கிடைக்காது,,
ஆனால் எந்திரனை படத்தின் முலம் சன் டி வி கொள்ளை அடிக்கிறது என மக்கள் மேல் போலி அனுதாபம் காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்// படத்தை பார்த்தே ஆக வேண்டும் என யாரவது சொன்னார்களா/... படம் என்ன அத்தியாவசிய தேவையா..பிடிக்க வில்லை என்றால்பார்க்காமல் இருந்து கொள்ளலாமே ..

இப்படி எல்லோரும் விளமபர மோகம் பிடித்து இருக்கும் பொது அறிவாளிகள்சங்கம் எதுவும் செய்யவில்லை என்பது நம் கவனத்துக்கு வந்தது.. எனவே அச்சப்படாத அறிவாளிகள் சங்கம்( அ அ ச ) சார்பில் நாம் வெளியிட்ட அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு..
**************************************************************************

எந்திரனால் இந்தியாவுக்கு ஆபத்துஇந்தியா வெகு வெகு வேகமாக முன்னேறி வல்லரசு ஆக வேண்டிய நிலையில் எந்திரன் திரைப்படம் இந்தியாவை பாதித்து விட்டது..
தனி மனிதர்கள் பொது பணத்தை பயன்படுத்தி ஜாலியாக பார்த்துள்ளோம்.. இந்தியாவில் இதுதான் இயல்பு.. இதை தவறு என சொல்ல முடியாது அனால் ரசிகர்கள் தம் சொந்த காசை செலவழித்து ஜாலியாக இருப்பது எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது... வேறு எந்த நாட்டிலும் இப்படி யாரும் சந்தோஷாமாக இருக்க மாட்டர்கள் என நாங்கள் நினிக்கிறோம்..நாங்கள் வெளிநாட்டுக்கு சென்றது இல்லை .. அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் மாட்டோம்.. ஆனால் இதுதான் நிலை என நாங்கள் நினைக்கிறோம்..
பாரதியார் வறுமையில் வாடியதை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. இன்றும் பல அறிஞர்கள் கஷ்டபடுகிறார்கள் ..அதற்கும் நாங்கள் உதவவில்லை.. கஷ்டப்படும் நடிகனுக்கோ, தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பலர்களுகோ நாங்கள் எதுவு செய்யவில்லை.. அனால் இந்த நிலையற்ற தன்மை உணர்ந்து அவர்கள் சம்பாதிப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை..
நாங்களும் உதவ மாட்டோம் ,, அவர்களும் சம்பாதிக்க கூடாது.. ஒட்டு மொத்த பிச்சைகார சமுதாயமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி..

மார்க்கெட் உள்ள நடிகர் படம் எடுத்தால் மற்றவர்கள்ளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது... பல திரையரங்கில் திரையிடுவதால் லாபமும் ஏற்படலாம், நஷ்டமும் ஏற்படலாம் என்ற ரிஸ்கில்தான் திரை இடுகிறார்கள் .. ஆனலும் இது எங்களுக்கு பிடிக்க வில்லை.. அந்த காலம் மாதிரி ஒரு திரை அரங்கில் திரையிட்டு நீண்ட நாளில் சம்பாதியுங்கள்..அதற்குள் திருட்டு சி டி வந்து வசூலை பாதுயக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.. அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

சினிமா என்பது அத்தியாவசிய தேவை... எனவேதான் இதில் நாங்க்கள் தலையிடுகிறோம்.. உணவு , மருத்துவம் , போக்கு வரத்து போன்றவற்றில் நடக்கும் தவறுகள் பற்றி எங்களக்கு கவலை இல்லை ..

கீழ் கண்ட கோரிக்கைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் என அரசை கோருகிறோம்..

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்று கொண்டே இருந்தால், அடுத்த தேர்வுகளை எடுக்க அவரை அனுமதிக்க கூடாது.. படிக்காத மாணவர்கள் பாதிப்படைவத்தை தடுக்க வேண்டும்..

அதிக ஹிட் ஸ் பெரும் பதிவர்கள், மாதம் ஒரு முறை மட்டுமே பதிவிட வேண்டும்... அப்போதுதான் மற்ற பதிவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் ..

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த ஜுரத்தில் மற்ற படங்கள் தோல்வி அடையும்.. எனவே பிளாப் ஆகும் படங்கள்தான் திரை துறைக்கு நல்லது.. அரசே தன செலவில் பிளாப் படங்கள் எடுக்க வேண்டும்..

அன்புடன்,
பிச்சைக்காரன், pichaikaaran.blogspot.com
தலைவர்,
அச்சப்படாத அறிவு ஜீவிகள் சங்கம்.

5 comments:

 1. //அச்சப்படாத அறிவு ஜீவிகள் சங்கம்//

  ;))))))))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 2. அருமையான பதிவு.

  //ஒரு மாணவம் அதிக மதிப்பெண் பெற்று கொண்டே இருந்தால், அடுத்த தேர்வுகளை எடுக்க அவரை அனுமதிக்க கூடாது.. படிக்காத மாணவர்கள் பாதிப்படைவத்தை தடுக்க வேண்டும்..//

  அதுதானே, மற்ற மாணவர்கள் படிப்பிற்காக முதலிடம் பெரும் மாணவன் தனது கல்வியை தியாகம் செய்ய வேண்டும் :-)

  இவர்களுக்கு தங்களைவிட மிகுதி எல்லோருமே முட்டாள்கள் என்று நினைப்பு. நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்கின்றதென்பது அவர்களுக்கு தெரியாது போல.

  ReplyDelete
 3. yes,,, only in tamilnadu , the intelectuals are ignorant than fools

  ReplyDelete
 4. இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பூக்களை www.sinhacity.com இல் காணுங்கள்

  ReplyDelete
 5. //ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த ஜுரத்தில் மற்ற படங்கள் தோல்வி அடையும்.. எனவே பிளாப் ஆகும் படங்கள்தான் திரை துறைக்கு நல்லது.. அரசே தன செலவில் பிளாப் படங்கள் எடுக்க வேண்டும்..//

  :)

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா