Wednesday, October 20, 2010

பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில்

சிலருடன் போணில் பேசினால், மனதை ரீ சார்ஜ் செய்தது போல , புத்துணர்வு கிடைக்கும்..
ஆனால் பேசுவதன் மூலம் செல் போன் சார்ஜ் ஏறுமா ?

ஏறும் என்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள்..

இவர்கள் சொல்வது போல நடந்தால், நம் செல்போனின் சார்ஜ் இறங்கி விட்டால் , யாருக்காகவது போன் செய்து எந்திரன் படம் பற்றியோ, அல்லது நகுலனின் கவிதைகளில் காணப்படும் தொன்மங்கள் பற்றியோ, ஒரு பத்து நிமிஷம் பேசினால் போதும்.. சார்ஜ் ஏறி விடும்..

" ஸ்பீக்கர் என்ன செய்கிறது? எலக்ட்ரிக் சிக்னலை , ஒலி அலையாக மாற்றுகிறது... எனவே ஒலி அலை , எலக்ட்ரிக் சிக்னலாக மாறுவதும் சாத்தியம்தான்" என்கிறார்கல் டாக்டர் யங் ஜூன் பார்க், ( சாமங் உயர் தொழில் நுட்ப கழகம் ) மற்றும் சாங் வூ கிம் ஆகியோர் .. அட்வான்ஸ் மேட்டிரியல்ஸ் என்ற பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இவ்வாறு தெரிவித்து இருகின்றனர்..

" பேசுவதால் மட்டும் அல்ல.. சத்த அலைகளை எங்கு இருந்தும் பயன்படுத்தலாம்.. டிராபிக் மிகுந்த இடங்கள், வாகன இரைச்சல் என எதையும் பயன் படுத்தலாம் " என்கிறார்கள் இவர்கள்..

அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டுமானால், piezoelectricity என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
சில திட பொருட்களுக்கு பீசோ எலக்ட்ரிசிட்டி என்ற இந்த பண்பு இருக்கும்..
என்ன இந்த பண்பு ?
ஒரு பொருளை வளைக்கவோ, அழுத்தவோ செய்தால் அதில் மின்சாரம் உண்டாகும் என்பதே இந்த பண்பு.. உதாரனமாக ஒரு இடத்தில் எவ்வளவு சத்தம் இருக்கிறது என்பதை இதை பயன்படுத்தி அறியலாம்.. சத்த்சம் ஏற்படும்போது , அந்த பொருளில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது அல்லவோ.. அதற்கேற்றபடி மின்சாரம் உண்டாகும்.. அந்த மின்சாரப்பை அளப்பது எளிது..அதன் மூலம் சத்தம் எவ்வளவு கண்டு பிட்க்கலாம். இது போல பல பயன்பாடுகள் உள்ளன..
அதே போல, ரிவர்ஸ் பண்பும் இதற்கு உண்டு.. மின்சாரத்தை செலுத்தினால், அதன் வடிவ அமைப்பு மாறும்..
அதாவது, வடிவமைப்பை மாற்றினால் மின்சாரம், மின்சாரம் செலுத்தினால் வடிவ அமைப்பு மாற்றம்..

இந்த பண்புதான், மின் அலைகளை , ஒலி அலைகளாக மாற்ற பல இடங்களில் பயன் பட்டு வருகிறது..இத எதிர்பன்பில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்..
நடப்பது, ஓடுவது, ஹோட்டல்களில் நடனம், சாலை போக்குவரத்து மூலம் ஏற்படும் அதிர்வுகளால் மின்சாரம் உண்டாக்க முயன்று வருகிறார்கள்..
கொரிய விஞஞானிகள் சற்று வித்தியாசமாக யோசித்து செல் போனை சார்ஜ் செய்ய முயல்கிறார்கள்..

சின்க் ஆக்சைடை இரண்டு எலக்ராடுகள் மத்தியில் வைத்து , ஒலி எழுப்ப பட்டது.. நுறு டெசிபல் அளவில் ஒலி எழுந்த போது , மின்சாரம் உண்டானது..ஐம்பது மில்லி வோல்ட் மின்சாரம் கிடைத்து..

செல் போனுக்கு இதை விட பல மடங்கு அதிக மின்சாரம் தேவை ..
இன்னொரு பிரச்சினை ..
நாம் சாதாரமாக பேசும்போது .,ஐம்பது அல்லது அறுபது டெசிபல் அளவில்தான் ஒலி இருக்கும்... எனவே சார்ஜ் செய்ய வேண்டுமானால், காட்டு கத்து கத்தினால்தான் முடியும்..
இந்த பிரச்சினைகளை நீக்கி, சாதாரண பேச்சு சத்தத்தில் சார்ஜ் செய்யும் கருவியை கண்டு பிடிக்க முயன்று வருகிறார்கள்..

இது விரைவில் விற்பனைக்கு வரும்...

பைக் ஓட்டும்போது பேசினால் , போலீஸ்காரர் பிடித்தால், நான் பேசவில்லை, சும்மா சார்ஜ் செய்கிறேன் என சொல்லி தப்பிக்கலாம்..

வீட்டில், எத்தனை பேர் இது போல சார்ஜ் செய்கிறேன் என சொல்லி விட்டு கடலை வறுக்க போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்...

5 comments:

 1. ///பைக் ஓட்டும்போது பேசினால் , போலீஸ்காரர் பிடித்தால், நான் பேசவில்லை, சும்மா சார்ஜ் செய்கிறேன் என சொல்லி தப்பிக்கலாம்..////


  ......ஆஹா.... இது என்ன கலாட்டா?

  ReplyDelete
 2. அப்படியே பேசினால் பேலன்ஸ் ஏறும் புது தொழில்நுட்பத்தை யாரவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 3. //வீட்டில், எத்தனை பேர் இது போல சார்ஜ் செய்கிறேன் என சொல்லி விட்டு கடலை வறுக்க போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்...//

  :))

  ReplyDelete
 4. "பேலன்ஸ் ஏறும் புது தொழில்நுட்பத்தை யாரவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்.."

  . பேலன்ஸ் தவறாமல் , ஒரு கையில் போனை பிடித்து கொண்டே பைக் ஓட்டும் தொழில் நுட்பத்தை நம் ஆட்கள் கண்டுபிடித்து விட்டார்களே

  ReplyDelete
 5. ya nice technology... visit http://hari11888.blogspot.com

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா