Saturday, October 23, 2010

புனிதமான கலர் எது ? ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் – கலைஞர் துணிச்சல் பேட்டி

karu இப்போது மஞ்சள் பத்திரிக்கை ஆகி விட்ட தினமணியில் ஒரு காலத்தில் தரமான விஷயங்கள் வந்தன..

பழைய இதழ் ஒன்றை புரட்டினேன்..

அதில் அப்போது பதவியில் இல்லாத கலைஞரை பேட்டி எடுத்து இருந்தனர்..

ஒவ்வொரு கட்சியினரும் அவரது வழிகாட்டிகள் வடிவமைத்த நிறங்களை ஆடைகளில் பயன்படுத்துவார்கள்..

ஆனால் கலைஞர் யாரை பின் பற்றி ஆடை நிறத்தை தேர்ந்தெடுத்தார் என்பதை அறியும்போது ஆச்சர்யமாக இருந்த்து..

பேட்டியின் சில பகுதி- உங்கள் பார்வைக்கு

**********************************************************************************

ஏன் மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்?

ஓஷோ எழுதிய புத்தகம் படித்தேன்., நேர்மையானவர்கள்,. நல்லவர்கள் அணிவது மஞ்சள் ஆடைதான் என்கிறார் அவர்.. அவர் எழுத்து என்னை கவர்ந்த்தால் , மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தேன்..

இந்த வயதிலும் தள்ர்ச்சி இன்றி செயல்படுகிறீர்களே? எப்படி ?

கருவில் உள்ள திருனு புராணீகர்கள் சொல்கிறார்களே.. அதுதான் காரணம்னு நினைக்கிறேன். எனக்கு உறுதியாக தெரியாது

**************************************************************************************************************

ஆன்மிகம் , நாத்திகம் என்று எதை வேண்டுமானாலும் ஒருவர் பின்பற்றலாம்.. அது அவரவர் வசதி.. அல்லது என்னைபோல எதையும் பின்பற்றாலும் இருக்கலாம்..

ஒருவர் தனக்கு உண்மையாக இருக்கிறாரா என்பதே முக்கியம்..

 

அந்த வித்த்தில், சம்பிராதயங்கள் எல்லாம் தவறு என்று திராவிடர் இயக்கத்தினர் சொலவ்தை போல தான் உறுதியாக நம்பவில்லை என அவர் சொல்லி இருப்பது குறிப்பிட்த்தக்கது..

அதே போல, கம்யூனிஸ்களின் செவ்வாடை, திராவிடர் இயக்கத்தின் கறுப்பு ஆடை என்பதெல்லாம், அந்தந்த இயக்க தலைவர்கள் உருவாக்கினார்கள்.

ஆனால் ஒரு ஆன்மீக குரு சொன்னதை பின்பற்றி ஆடை அணியும் ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கும்..

ஜெய ல்லிதாவும் இப்படி யாரோ சொல்வதை பின்பற்றி ஆடை வண்ணத்தை தேர்ந்தெடுத்தாலும் , அதை வெளிப்படையாக சொலவ்தில்லை..

அந்த வகையில் கலைஞரை பாராட்டலாம்

7 comments:

 1. //ஒருவர் தனக்கு உண்மையாக இருக்கிறாரா என்பதே முக்கியம்..//

  ithuthaan mukkiyam . vaalththukkal.

  ReplyDelete
 2. அப்போ இந்த தேர்தல்லயும் அம்மா ஜெயிக்க மாட்டாங்களா?

  ReplyDelete
 3. "அப்போ இந்த தேர்தல்லயும் அம்மா ஜெயிக்க மாட்டாங்களா"

  அய்யா யாகம் எல்லாம் பண்ண போறதா வதந்தி... வாழ்க பகுத்தறிவு

  ReplyDelete
 4. ithuthaan mukkiyam . vaalththukkal.

  நன்றி

  ReplyDelete
 5. //கருவில் உள்ள திருனு புராணீகர்கள் சொல்கிறார்களே.//

  இதன் பொருள் என்னங்க?

  ReplyDelete
 6. "இதன் பொருள் என்னங்க?

  மத நம்பிக்கை இருப்பவர்கள், பூர்வ ஜன்ம புண்ணியத்தின் அடிப்படையில், சிலர் பிறக்கும்போதே மேதைகளாக பிறப்பதுண்டு என சொல்கிறார்களாம்.

  பெரியாரை கெட்டால், இதெல்லாம் பொய், வெங்காயம் என சொல்லி விடுவார்..
  கலைஞரை பொருத்தவரை, இது உன்மையா , பொய்யா .. தெரியலயேஏ ஏ ஏ,, என நாயகன் பாணியில் சோகமாக சொல்லி, அவரும் குழம்பி , கட்சியினரையும் குழப்பி, ஊரையும் குழப்பிகிறார்

  ReplyDelete
 7. //ஓஷோ எழுதிய புத்தகம் படித்தேன்., நேர்மையானவர்கள்,. நல்லவர்கள் அணிவது மஞ்சள் ஆடைதான் என்கிறார் அவர்.. அவர் எழுத்து என்னை கவர்ந்த்தால் , மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தேன்..//

  ஓஷோ ஓஷோ தான்..........

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா