Friday, October 15, 2010

என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )

 

"ஸ்டவ் வெடிச்சு கொல்றதேல்லாம் அந்த காலம்.. கார் வெடிச்சு கொல்றதுதான் இந்த காலம.. இன்னும் சில நொடிகள்ள கார் வெடிச்சு சாக போற "

அதிர்ந்தாள் ஷாலினி..

" அவசரப்படாதீங்க.. நீங்க கேட்ட வரதட்சணை பணமும், குடும்ப சொத்தான வைரத்தையும், எடுத்துட்டுதான் நானும் என் அக்கா காமினியும் வந்துகிட்டு இருக்கோம் "

" அடி போடி,... ஒவ்வொரு முறையும் உன்னை மிரட்டி காசு வாங்க போரடிச்சு போச்சு... உன்னை கொன்னுட்டு விபத்தா காட்டிட்டு, இன்சூரன்ஸ் பணத்தோட செட்டில் ஆக போறேன் "

போன் கட் ஆனது..

படுபாவி... என்னுடன் சேர்த்து காமினியும் இறந்து விட கூடாது..

தூங்கி கொண்டு இருந்த காமினியை இழுத்து கொண்டு வெளியே பாயவும் , கார் வெடிக்கவும் சரியாக இருந்தது

***************************************************************************

" ஆ, நான் எங்கு இருக்கேன் " முனகினாள் காமினி..

" கார் விபத்து மேடம்.. உங்களை காப்பாத்தி சிகிச்சை தந்து வர்றோம்.. மருத்துவ மனை ல   இருகீங்க " நர்ஸ் சொன்னாள்..

" ஷாலினி ? "

" சாரி மேடம்.. அவுங்களை காப்பாத்த முடியல..சரி மேடம்.. பேசாம இருங்க.. டாகடர் வர்றாரு "

சொல்லி விட்டு நர்ஸ் கிளம்பினாள்..

டாகடர் அருகே வந்தார்.. ரிப்போர்ட்டுகளை சரி பார்த்து விட்டு, பரிசோதனைகளை செய்தார்..

ரிப்போர்ட் எழுதி விட்டு கிளம்பினார்...

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

**************************************************************************

'' பெரியப்பா...... அந்த பாவிதான் என் அக்காவை கொன்றவன்..   அவனை சட்டம் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்க " மூச்சிரைக்க பேசிய காமினியை அன்புடன் பார்த்தார் அவளின் பெரியப்பா பரந்தாமன்..

" அது கஷ்டம்மா.. அவன் அதை எதிரிகளின் சதி மாதிரி காமிச்சுட்டான்.. அவன் சமுதாயத்துல பெரிய ஆள்.. அவனுக்கு பல எதிரிகள் இருப்பாங்க...  அதுல ஒருத்தன்தான் இதை செஞ்சு இருப்பன்னு கதையை முடிச்சுடுவாங்க "

" பெரியப்பா,, ஊர்ல இருக்குற பெரிய லாயர்ல ஒருவர் நீங்க.. எப்படியாச்சும் அவனை மடக்குங்க "

" ஒரே வழி இருக்குமா...  அவ எடுத்துட்டு போன வைரத்தை கோர்ட்ல காமிச்சு, வைரத்துக்காக அவன் சித்திரவதை செய்ததை நிருபிக்கலாம்..  இந்நேரம் அவன் விபத்தான காரை முற்றுகை இட்டு இருப்பான்..  போலீசை மீறி அவன் எடுக்க முடியாது...  அந்த கார் போலிஸ் கட்டுப்பாட்டில் இருக்கு .. தவிர, வைரத்தின் அதீத சக்தியும் அதுக்கு காவல இருக்கும்.."

" அதீத சக்தியா ..என்ன சொல்றீங்க? "

" ஆமா.. அந்த வைரத்தை ஒருவர் எடுக்கணும்னா ஒரு நிபந்தனை இருக்கு.. அந்த நிபந்தனையை மீறி எடுத்தா , உரிய இடம் கொண்டு போய் சேர்க்க முடியாது...  இதை ஷாலினி மீறியதால்தான் அந்த வைரம் உரிய இடம் போகாம பாதில இப்படி ஆகிடுச்சுனு நினைக்றேன் '

" என்ன நிபந்தனை ? ஒன்னும் புரியல ? "

" வைரம் என்பது சாதாரணம் அல்ல.. அமானுஷ்ய தன்மை கொண்டது..  அதனால்தான் பலர் அதை வைத்து இருப்பது இல்லை.. இந்த வைரத்தின் பாதுகாப்பு கருதி, சில மந்திரம்   மூலம் நிபந்தனை ஒரு சக்தி வளையமா அதை சுற்றி போடப்பட்டு இருக்கு,,, "

அந்த நிபந்தனையை அவர் சொல்ல , அதிர்ந்தாள் காமினி... 

" இல்லை.. ஷாலினி இந்த நிபந்தனைக்கு உட்பட்டவ தான்...  அவளை தப்பா சொல்லாதீங்க...  நான் உடணே போயி , என்னை கல்யாணம் செஞ்சுக்க போற சிவாவை பார்த்து , அடுத்த நடவடிக்கை பத்தி பேசணும் "

*********************************

யாருமற்ற தனி இடம்...   பறவைகள்  சத்தம் மட்டும் லேசாக கேட்டு கொண்டு இருந்தது..

" இந்த காட்டுக்கு எதுக்கு கூட்டி வந்த ? ..என்ன உடம்பெல்லாம் காயம்...எதாவது விபத்தா  " கேட்டான் சிவா..

" ஆமா.. கார் விபத்து... அதுக்கு காரணமானவனை பழி வாங்கனும்...அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் "

" என்ன பெரிய விபத்து..  லேசான காயத்துக்கு பழியா ? "

" காயம் மட்டும் இல்லை..  என் சிஸ்டர் ஷாலினி இறந்துட்டா .." கண்ணிருடன் சொன்னால் அவள்.

" ஷாலினி இறந்துடாளா.. ஐயோ..ஷாலினி......"

அவன் அலறுவதை குழப்பமாக பார்த்தாள் காமினி..ஷாலினிக்காக இப்படி ஏன் உருகுகிறான்?

" அடி பாவி,,, நானும் ஷாலினியும் , தாலி கட்டாத கணவன் மனைவியா வாழ்ந்தோம்... அவ மேல இருக்குற ஆசைலதான் , உன்னை கட்டிக்கவே சம்மதித்தேன் ..இப்படி ஆயிடுச்சே " அழுதான்..

பரந்தாமன் பெரியப்பா சொன்ன நிபந்தனை நினைவுக்கு வந்தது...

" சிவா,,,நீ இப்படி ஒரு அயோக்கியனா..,துரோகி,,இப்பவே இதை சொல்லி கல்யாணத்தை நிறுத்துறேன்.. உன் பேரை அசிங்க படுத்த போறேன்..ஷாலினி பேர் கெட்டாலும் பரவயில்லை..."

அவனை உதறி கிளம்பினால் காமினி..

'நில்லுடி ' உறுமினான் அவன்..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

************************************************************

" ஷாலினிய இப்படி செஞ்சவனை சும்மா விட கூடாது..என்ன செலவாலும் பரவாயில்லை " கதறிய ஷாலினியின் அப்பாவை ஆதரவுடன் அணைத்து கொண்டார் பரந்தாமன்..

பார்த்து பார்த்து வளர்த்த பெண்....  அம்மா இல்லாத பெண்கள் என ஷாலினியையும் , காமினியையும் பார்த்து பார்த்து வளர்த்தானே என் தம்பி ..பரந்தாமனுக்கு கண்ணீர் பொங்கியது..

அந்த வைரம் வேண்டாம் என நான் சொல்லிப்பார்த்தேன்..

" பெரியப்பா.. பெரியப்பா...  " காமினி வேகமாக வந்தாள்..கையில் வைரம்...

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"இதை வச்சு அந்த பாவியை ஜெயில்ல தள்ளிடறேன்... ஆமா, இதை சரியான இடத்துக்கு கொண்டு வரணும்னா நிபந்தனை இருக்கே.. யார் உனக்கு ஹெல்ப் செஞ்சா ? "

" நானேதான் எடுத்துட்டு வரேன் " அமைதியாக சொன்னால் காமினி..

" உளறாதே.. இதை பத்திரமா எடுத்து கொண்டு வர ரெண்டு பேரால்தான் முடியும்...  கொலை செய்யப்பட கன்னி பெண்ணின் ஆவி அல்லது கணவனுக்கு உண்மையா இருக்கிற பெண்...  உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..சோ அந்த  நிபந்தனை உனக்கு பொருந்தாது... .. நீ ஆவியும் இல்லை... சோ இரண்டாம் நிபந்தனையும்  பொருந்தாது... உனக்கு யாரோ உதவி இருக்கணும் ..'

காமினி யோசித்தாள்.. 'சிவாவை காட்டி கொடுத்து ஷாலினியின் பெயரை கெடுக்க கூடாது ...தவிர, வேண்டும் என்றே சிவாவை கோப படுத்தியது , அவனை தூண்டியது நான்தானே '

" பெரியப்பா... எனக்கு கல்யாணம் ஆகல என்பது உண்மைதான்.. ஆனா நான் ஆவி இல்லைனு எப்படி முடிவு செஞ்சீங்க ? "

தன கண் முன் சிறிது சிறிதாக காற்றில் கரையும் காமினி யை திகிலுடன் பார்த்தார் பரந்தாமன்....

6 comments:

  1. டுவிஸ்ட் சூப்பர்

    ReplyDelete
  2. இதுவும் சூப்பர்ங்க. (ஏன் எல்லாம் ஆவி மயமாகவே இருக்கு ?)

    ReplyDelete
  3. "ஏன் எல்லாம் ஆவி மயமாகவே இருக்கு "

    காவி மயம் ஆனால்தான் சர்ச்சை :-)

    ReplyDelete
  4. கதை நன்றாக இருந்தது. வேகவேகமாக கதை நகர்ந்ததை ஒரு சிறப்பாக சொல்லமுடியவில்லை, ஏனெனில் வேகம் இருக்கும் அதே சமயம் தேவையான நேரேஷனைத் தரத் தவறக்கூடாது.

    ReplyDelete
  5. வேகவேகமாக கதை நகர்ந்ததை ஒரு சிறப்பாக சொல்லமுடியவில்லை, "

    வேகமான நடை என்ற பாராட்டு மகிழ்ச்சி அளிக்கிறது

    கண்டிப்பாக தவறுகலை கலைந்து மேம்படுத்திக்கொள்வேன்..

    கறாரான விமர்ச்னகலதான் வளர்ச்சிக்கு உதவும்..
    மிகுந்த நன்றி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா