Thursday, October 28, 2010

காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு 

காமம்…

கடவுளுக்கு அடுத்தபடி கண்ணாமூச்சி ஆடுவதும் , வெவ்வேறு அர்த்தங்கள் தருவதும் இதுதான்..

சிலருக்கு இது ஒரு பொழுதுபோக்கு, சிலருக்கு எக்சைட்மெண்ட், சிலருக்கு ஆதிக்கம் செய்யும் , அசிங்கம் செய்யும் கருவி…பெருமைக்கு, இனவிருத்திக்கு, சும்மா மற்றவரை சீண்டலுக்கு  காதலை வெளிக்காட்டுவதற்கு  என பற்பல பரிமாணங்கள் இதற்கு உண்டு..

 

பேப்பரை பார்த்தால் , பாதிக்கு மேல் காமம் சார்ந்த குற்றங்கள்தான்.. காமம், காதல் இது பற்றிய எந்த புரிதலும் இல்லாத வாழ்க்கைதான் இங்கு நடக்கிறது..

யோசித்து பார்த்தால், காமம் இல்லாவிட்டால் நாம் யாரும் இல்லை.. என்வே காமத்தை தாண்டி நாம் செல்ல முடியாது.. 

அதே சமயம் காமத்திலேயே சிக்கி உழன்று கொண்டு இருப்பதும் அபத்தம்…

காமத்தை அடக்க நினைது அதிலேயே உழன்று கொண்டு இருபதுதான் நடக்கிரது..

காமத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் , நம்மை புரிந்து கொள்ள வேண்டும்./. நம்மை புரிந்து கொள்ள வேண்டுமானால் காமத்தை புரிந்து கொள்ள வேண்டும்..

பாலியல் கல்வி போன்றவை எல்லாம் மேலோட்டமான பலனையே தரும்.. 

காமத்தின் பல்வேறு பரிமாணங்களை காடு என்ற ஜெயமோகனின் நாவலில் பார்க்க முடிகிறது..

ஒரு பெண்ணின் அழிவுக்கே , கதை சொல்லியின் மாமாவின் காமம் காரனமாவது, காமத்தை லஞ்சமாக பயன்படுதுவது, ஜஸ்ட் ஒரு கேளிக்கையாக பயன்படுதுவது, வடிகாலாக பயன்படுதும் சிலர், என பலரை இதில் பார்க்க முடிகிறது..

கிரிதரன் ஒரு பெண் மேல் காதல்வயப்படுகிறான்..  அவள் நினைவாகவே அலைகிறான்…

இதில் உடல் கவர்ச்சி இருந்தாலும், காதலே முக்கியமாக இருக்கிறது.. காதல் அனுபவம் இருப்பவர்கள் அவனின் நிலையை நன்கு உணர முடியும்..

காதல் என்பது கடவுளின் சாயல் ..காதல் அனுபவம் என்பது கடவுள் அனுபவம் போன்ரது..

ஆனால் இத்த்கைய காதல் அமைவது மிக மிக அரிது…  வெறும் இனக்கவர்ச்சியோ , எக்சைட்மெண்டோ காதல் அல்ல.. அது நிறைவை தராது..

*************************

கிரிதரன், மாமி, மேஸ்திரி, குட்டப்பன், இரட்டையர்கள் , போத்தி, அய்யர் , புலையன், வேணி, சினேகம்மை, ரெஜினாள், நீலி  என ஒவ்வொரு கேரகடரும் மனதில் நின்று விடுகின்றன..தேவாங்கு கூட மறக்க முடியாமல் மனதில் நின்று விடுகிரது…

என்னை பொருத்தவரை, என்னை கவர்ந்தது மிளாதான்…  காட்டின் பிரதினிதியாக மனதில் பதிவது மிளா எனற மிருகம்..

மிளா (Sambar - Cervus unicolor) என்பது ஒருவகை மான்.. ( படத்தை பார்க்கவும்  )

  நாவலில் இரண்டு கேரட்கடர்கள் முக்கியம்..

 

அதை பார்க்கும் முன், ஆன்மிகம் என்பதை பற்றி ஒரு குரு சொன்னதை பார்த்து விடுவோம்..

தியானம் போன்ற முறைகள் எல்லாம், ஈகோ என்பதை அழித்து மனிதனை ஒரு குழந்தை போல ஆக்குவதற்குதான்.. மனம் என்பது அழிய வேண்டும்..

அப்படி பார்த்தால், மிருகத்திற்கு மனம் இல்லை…  அது முக்தி அடைந்து விட்டதா? குழந்தைகள் , ஈகோ வளராமல் இருக்கும்.. அது யோக நிலையா? அல்லது மனித நாகரிக வாடையே படாமால் வாழும் காட்டு  வாசிகள், போட்டி பொறாமை இல்லாமல் வாழ்கிறார்கள்.. அவர்கள் ஞானனிலை அடைந்தவர்களா?

அப்படி அல்ல…  மனதின் இயல்பான நிலையில் அப்படியே இருக்கும்போது அதை உணர முடியாது..

அதை இழந்துவிட்டு , பல அனுபவங்ளை பெற்று அலுத்து போய், மீண்டும் அந்த இயல்பான நிலையை அடையும்போதுதான், அது என்லைக்ட்மெண்ட் ..அப்போதுத்தான் அதை உணர முடியும்..

அந்த இயல்பான தன்மை இழந்தால்தான்,அதன் அருமையை உணர முடியும் என்பதால்தான், ஆதாம் ஏவாள் ஆகியோர் அந்த பழத்தை உண்டு தம் இயல்பான தன்மையை இழக்க செய்தார் கடவுள்.. உண்மையில் அவர்கள் அந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.. அவர்கள் அதை சாப்பிடகூடாது என நினைது இருந்தால், அந்த பழத்தையே அவர் அழித்து இருக்கலாமே…

ஒன்றை செய்ய கூடாது என்றால்தான் அதை நாம் செய்வோம்.. எனவே தான் அதை சாப்பிட கூடாது என்றார்.. அவர்கள் சாப்பிட்டு தம் இயல்பான தன்மையை இழந்தனர்.. மீண்டும் அந்த இயல்பை அடைவதே வாழ்வின் பயன்…  ( இது கிறிஸ்தவ மத நம்பிக்கை அல்ல… ஒரு தனிப்பட்ட குருவின் சினதனை )

 

இந்த நாவலில் வரு முக்கியாமான இருவர்..குட்டப்பன், அய்யர்…

 

குட்டப்பன் காட்டிலேயெ இருப்பவர், காட்டை நேசிப்பவர்.. தெய்வமாகவே காட்டை நினைக்க கூடியவர்.. தவறை தட்டி கேட்பவர்… 

அய்யரும் அப்படித்தான். காட்டின் அழகை ரசிக்கிறார்… வாழ்வின் இன்பங்களை யாரையும் கஷ்டபடுத்தாமல் அனுபவிக்கிறார்… எதையும் லைட்டாக எடுது கொள்கிரார்.. அக்கிரமத்துக்கு உடன்பட மறுது, பணியை இழந்து காட்டிலேயெ இருந்து விடுகிறார்..

இருவரும் ஒரே மாதிரி இருந்தாலும், அய்யர் கேரக்டர் சிறப்பானது…  ஒரு நல்ல இடத்தை நோக்கி பரிணாம வளர்ச்சி அடைவது இவர்தான்.. குட்டப்பன் மும்பு எப்படி இருந்தானோ அப்படியேதான் சாகிறான்..

நல்லவன் தான்… ஆனால் சிறப்பானவர் இந்த அய்யர்தான்…

 

” காமம் , சுய நலம் தவிர மனித உறவுகளுக்கு வேறு அர்த்தம் உண்டா “ என்ற கிரியின் கேள்வி , நம் கேள்வியாகவே மாறும், நவலை படித்து முடிக்கும்போது…

 

****************

ஒரு சாமியார்…  பிரபல எழுத்தாள்ர்கள் முதல் நடிகர்கள் வரை அவர் சீடர்கள்..  எவ்வளவு பெரிய ஆள் வந்தாலும்,  சாமியாரை பார்ப்பது அவ்வளவு  எளிதல்ல.. கெட் அவுட் என சொல்லிவிடுவார்..

அப்படிப்பட்ட சாமியாரை, கூட இருந்தவர்கள், ஒரு மாபெரும் கோயில் கட்ட வேண்டும் என உசுப்பேத்தினர்…

அதற்கு டொனேஷன் வாங்க அவரை அழைத்து சென்றனர்..

அவரை பார்க்க ஒரு முறை நான் நீண்ட நேரம் காத்து இருந்தும் முடியவில்லை..

இப்போது, அவர் மேல் நம்பிக்கையோ , மரியதையோ இல்லாத ஒரு நன்பனின் தந்தையை ( அவர் பெரிய பணக்காரர் ) டொனேஷன் வாங்க , பார்ப்பதற்கு, நன்பன் வீட்டு வரவேற்பு அறையில் சாமியார் காத்து இருந்தார்..

எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.. சோகமாகவும் இருந்தது..

அந்த அதிர்ச்சியை இந்த நாவலின் முடிவு ஏற்படுத்தியது…

 

ஒரு முக்கிய கதாபாதிரமாக வரும் யானையின் தலை , பாடம் செய்யப்பட்டு வீடில் மாட்ட்டப்ட்டு இருப்பது , மேட்ரிக்ஸ் படத்தின் ஒரு வசனத்தை நினைவு படுத்தியது..

“ ஒரு காட்டில் சிங்கம் மானை வேட்டையாடும் என்றாலும், மான் இனத்தை சிங்கம் அழித்து விடாது.. சம நிலை இருக்கும்..  அதே போல பூனை, எலியும் சமனிலையில் இருக்கும்..

வைரஸ் மட்டும் அப்படி அல்ல.. கொடூரமானது..  ஒரு இடத்தில் அது நுழைந்தால் , அதை முழுக்க வைரஸ் ஆக்கிரமித்து விடும்., காலபோக்கில் சமனிலை குலைந்து வைரஸ் மட்டுமே இருக்கும்..

இது போன்ற அழிவு சக்தி ஒரே ஒரு உயிரிக்குத்தான் உண்டு.. அந்த உயிரி மனிதந்தான் “

காடு , மலை எல்லாம் அழிந்து வருகின்றன.. எத்தனையோ அபூர்வ உயிரின்ங்கள் அழிந்து வருகின்றன…

மனிதனின் சுய நலம் அவனின் எல்லா உறவுகளியும் பாதிப்பதுபோல இயற்கையையும் பாதிக்கிரது என்பதை சுட்டி காட்டுகிரது காடு..

life is relationship என்றார் ஜெ கே…  ச்க மனிதர்களுடன், இயற்கையுடன் நாம் கொள்ளும் தொடர்பை அருமையாக சித்தரிக்கும் நாவல்தான் காடு..

கண்டிப்பாக படிக்க வேண்டும்

பின் குறிப்பு : விரவில், சென்னை கடற்கரையும் அழிக்கப்பட இருக்கிறது என்பது சென்னை வாசிகள் பலருக்கு தெரியாது..

 

*********************************

 

நாவலின் ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்கலாம்..என்றாலும் என்னை கவர்ந்த சில வரிகலை , இங்கு தருகிறேன்..

 

 

அதன் அடியில் சிமிட்டி சுவரில் கிரிதரன் என்ற என் பெயர் எழுதப்பட்டுள்ளது.. இதனருகே மிளாவின் கொம்பு தடங்களும் உள்ளன.

ஓடைக்குள் இறங்கி கைகால் கழுவும் சிலர் என் பெயரை பார்திருக்க கூடும். மிளாவின் குளம்புதடமும் கண்ணில் பட்டு இருக்கும். ஒருவேளை யாராவது சிறுவன் , மிளா தன் கொம்பால் அப்பெயரை எழுதி இருக்கும் என கறபனை செய்து இருப்பான், அல்லது அப்பெயரை எழுதிய எனக்கு குளம்புகள் இருந்திருக்கும் என நினைத்து இருப்பான்..

வரலாறு பலவிதமாக படிக்கப்பட்டும் விளக்கப்படும் வருகிரது

 

மாமா மாமியின் காலடியில் நாய்மாதிரி வாலாட்டி கிடந்தார் என்றால் நாணம்மை.. “ சும்மா சொல்ல கூடாது.. பூலோக சுந்தரி .. கண்ணாடி மாதிரி சரீரம் :”

மாமியின் ஒரு தொடை மறு தொடையில் பிரதிபலித்ததாம்,,

 

  குட்டப்பன் சொன்னான் “ அவனும் அவன் வாசிப்பும்.. ஒரு தாளை காட்டி , இது என்ன எழுத்துனு கேட்டான். அவன் காட்டிய எழுத்தை , சுரண்டி கைய்ல கொடுத்தேன். கொசு செத்து ஒட்டி இருக்கு “

 

“ தீ சிவன்னா, சாம்பல் சக்தி.. தீ கூடிப்போனா சாம்பல் ”

வனத்தடாகத்தில் பூப்பறிது மலைகட்டி அனீது காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறிய மாட்டாள்.. தூங்கும் யானைபோல பெருமூச்சு விட்டு என் மனம் அவள் நினைவை தொடர்வதை “- குறுந்தொகை

அய்யர் கேட்டார் “ நீர் படிச்சது யாரோட உரை ?

நான் படித்தது வேறு .. இருந்தாலும் “ அனந்தராம அய்யர் “ என்றேன்

 

செம்பரத்தி பூ அழகுதான்.. பன்னியின் **** ? பார்க்க ரெண்டும் ஒரே நிறம். ஷேப்பு.. அழகுங்குறது நம் மனசு..பிடிச்சா அழகு .இல்லைனா அசிங்கம்”

அவரில் ஒருபோதும் நான் பார்திராத சலிப்பு சோர்வும் எனக்கு மன நிறைவையும் , உத்வேகத்தையும் அளித்தது

 

அஸ்தமனம் பார்த்தேன் “

“ எப்படி இருந்தது ?”

“திருனடைவாசல் சாத்தற மாதிரி “

“ அடடா/. கவிஞன்யா நீ “

 

----பூவில் தேனும் மதமும் இருக்குற மாதிரி யானையில் மதம் இருக்கு அது சாமிகளின் வரம்..

13 comments:

 1. //காதல் என்பது கடவுளின் சாயல் ..காதல் அனுபவம் என்பது கடவுள் அனுபவம் போன்ரது..

  ஆனால் இத்த்கைய காதல் அமைவது மிக மிக அரிது… வெறும் இனக்கவர்ச்சியோ , எக்சைட்மெண்டோ காதல் அல்ல.. அது நிறைவை தராது.. //

  I Love சுனைனா ......சுனைனா என் கடவுளின் சாயல் ... :))

  ReplyDelete
 2. சுனைனா என் கடவுளின் சாயல் ... :))”

  உங்க கமெண்ட் மிகவும் ராயல் :-)

  ReplyDelete
 3. //கண்டிப்பாக படிக்க வேண்டும்//

  படிக்க வேண்டும்!

  //பின் குறிப்பு : விரவில், சென்னை கடற்கரையும் அழிக்கப்பட இருக்கிறது என்பது சென்னை வாசிகள் பலருக்கு தெரியாது..//

  why/how?

  ReplyDelete
 4. ஆம். கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு விட்டு, கடற்காற்று வாங்கும் அனுபவம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது...
  விரிவாக தனி பதிவு இட இருக்கிறேன்..
  இந்த யாரை அழிவை தடுக்க நம்மால் ஆன முயற்ச்சிகளை செய்தே ஆக வேண்டும்

  ReplyDelete
 5. குட்டப்பன் தான் அய்யரை விடமுழுமையான பாத்திரமாக நான்கருதுகிறேன். கதை ஆரம்பிக்கும்போதுஎப்படி இருக்கிறானோ அப்படியே வாழ்நாள்முழுதும்இருக்கிறான். அவன் பாத்திரத்தை மகாபாரதக்கண்ணனின் மறுவுருவாக்கம்என்றே எனக்குதோன்ற்ன்கிறது. வாழ்க்கையை அவன்வரையரைக்கேற்பவே வாழ்தல், சலிப்பின்மை, எல்லாவற்றிலும்ஒரு தெளிவு, மற்ற மனிதர்களை புரிந்துகொள்ளல், காட்டைப்பற்றியஅவன்ஞானம், எப்போதும் மகிழ்ச்சியாய் இருத்தல், பிறர்நலனில்கொள்ளும்அக்கறை எவரையும் வெறுத்தொதுக்காத தன்மை, அநீதிக்கெதிரான சீற்றம் என முழுக்க கீதை காட்டும் இலட்சியமனிதனே குட்டப்பன். கதாசிரியர் தன்னை கிரிதரனில்காட்டுகின்றார்என்றால் தான் ஆகவேண்டிய லட்சிய மனிதனாக குட்டப்பனையே கொள்கிறார் என்றே நான்அறின்துகொள்கிறேன்.

  ReplyDelete
 6. Is this "MILA'? It is there in vandalur zoo also.

  ReplyDelete
 7. "கதை ஆரம்பிக்கும்போதுஎப்படி இருக்கிறானோ அப்படியே வாழ்நாள்முழுதும்இருக்கிறான்"

  ஆனால் அய்யர் கதாபாத்திரம் பரிணாம வளர்ச்சி அடிக்கிறதே .. அப்படி பார்த்தால் அதுதானே சிறப்பு ?

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 9. ”காடு”படித்துவிட்டு ஒரு இரண்டுநாட்கள் யாரோடும் பேசத் தோன்றவில்லை. மௌனத்துள் விழுந்து கிடந்தேன். அற்புதமான காதல் கதை. காடும் மழையும்கூட கதாபாத்திரங்களாக அமைந்திருந்தன. முடிவு... மரபான முடிவை எதிர்பார்ப்பவர்களுக்கு திடுக்கென்று முடிந்ததுபோல...

  ReplyDelete
 10. சமீபத்தில்தான் ஜெயமோகனின் காடு நாவல் வாசித்தேன். நாவல் குறித்த உங்கள் பதிவு ரொம்ப நன்றாக உள்ளது. இந்த நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள் எல்லாம் நம் மனதில் தங்கி விடுகிறார்கள்.

  குட்டப்பன், நீலி, அய்யர், கிரிதரன், ரெசாலமும் தேவாங்கும், சினேகம்மை, மிளா, கீறக்காதன் யானை என எல்லோரும் மிகவும் நெருக்கமாகிவிட்டார்கள். காட்டிற்குள் சென்று பார்க்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் நாவல்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா