Wednesday, October 6, 2010

எந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்

எந்திரன் படம் பார்க்கும்போது , சக்தி வாய்ந்த எந்திரன் தமிழ் பண்பாட்டை கட்டி காப்பது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது .. ராவணனுக்கும் எந்திரனுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு ..அதே போல இந்த படத்துக்கும் ராமாயணத்துக்கும் சில ஒறுமைகள் உண்டு..

1 கதா நாயகன் ராமன், சினிமாவின் சைண்டிஸ்ட் - இருவரும் அறிவாளிகள் .. ஆனால் சண்டைக்கு தயங்குபவர்கள்.. வேறு வழி இல்லாவிட்டால்தான் சண்டை..

2 கதா நாயகன் ஏக பத்தினி விரதன்.. செகண்ட் ஹிரோயின் கிடையாது...

3 உரிய ராஜ்ஜியத்தை, உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் சிலர் செய்யும் சூழ்ச்சியால் பாதிக்கபடுகிறார்கள்..

4 கதாநாயகி , இன்னொருவனால் கடத்தபடுவதை நாயகனால் தடுக்க முடியவில்லை...

5 நாயகனைவிட, கடத்துபவனை நாயகிக்கு பிடிக்கிறது..அனால் அவனை முழுதும் ஏற்க சில விஷயங்கள் தடையாக உள்ளன...

6 அதுவரை நல்லவனாக இருந்த எதிரி, நாயகியால் மனம் மாறி கெட்டவன் ஆகிறான்..

7 சர்வ வல்லமை படைத்த அவன், நாயகியை எந்த கஷ்டமும் இல்லாமல் காக்கிறான்.. அவள் சம்மதம்தான் முக்கியம் என நினைத்து தமிழ் பண்பாட்டை காக்கிறான்..

8 அதில் பத்து தலை..இதில் பல நூறு தலை...
9 அதி மோதிரம் அடையாள சின்னம்... இதில் ரத்தம் அடையாள சின்னம்...
10 இந்த கதையை ராவணன் என்ற பெயரில் எடுத்த போது பிளாப்... எந்திரன் என்ற பெயரில் சூப்பர் ஹிட்

4 comments:

  1. நானும் ராவணன் தான் ;)

    ReplyDelete
  2. நானும் ராவணன் தான் ;)

    ha ha .. dangerous

    ReplyDelete
  3. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா