Sunday, October 31, 2010

சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத மேனேஜ்மெண்ட் குரு

 

ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட் உலகையும் , மேனேஜ்மெண்ட் துறை நிபுணர்களையும் முட்டாளாக்கிய புத்தகமான இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ் பற்றி பார்த்தோம்..

முட்டாளாக்கப்பட்டது தெரிந்ததும் பலரும் கொதித்து எழுந்தனர்.. ஒரு படி மேலே போய், அவர்கள் ஆராய்ச்சி எல்லாம் நடத்தவில்லை.. சில நிறுவனங்க்ளிடம் காசு வாங்கி விட்டு , அவற்றை எக்சலண்ட் நிறுவனங்களாக பட்டியலிட்டு விட்டார்கள் என விமர்சித்தனர்..

ஆம்,, அது ஓரளவு உண்மைதான் என்பது போல பிற்காலத்தில் , வாட்டர்மேன் பேட்டியளித்தார்.. ஆனால் அது அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை..

ஏன் அப்படி சொன்னார்,.. ஏன் அது பரபரப்பு ஏற்படுத்தவில்லை என்பதை அறிய சற்று ஃபிளாஷ்பேக்கிற்கு செல்ல வேண்டும்..

எக்சலண்ட் நிறுவனங்கள் , ஊத்தி மூடிகொண்ட பின்னும், வாட்டர்மேன் தாம் சொன்னது சரிதான் என்று நம்பி கொண்டு இருந்தார்.. முன் வேலை பார்த்த வேலையையே தொடர்ந்தார்..

எக்சலண்ட் நிறுவனங்களின் எட்டு பண்பை கண்டு பிடித்தது வாட்டர்மேன் என்றாலும், அதை எழுத்தில் கொண்டு வந்தது , மார்க்கெட்டிங் செய்தது எல்லாம் டாம் பீட்டர்ஸ்தான்..

அவர் எழுதியதை சுருக்கி, புத்தக வடிவுக்குள் கொண்டு வருவதே பெரும்பணியாகி விட்டது.. அந்த அளவுக்கு விரிவாக, பல உதாரனங்கள் , கேஸ் ஸ்டடி என அமர்க்களப்படுத்தி இருந்தார்..

புத்தகம் வரும் முன்பே, நிறைய செமினார்கள் நடத்தினார்.. சினிமா டிரைலர் மாதிரி, புத்தகத்துக்கும் டிரைலர் மாதிரி புக்லட் வெளியிட்டார்… எனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது…

தந்திரமாக , தன் வேலையை ராஜினாமா செய்து, ராயல்டி பணம் தனக்கு வருமாறு செய்து கொண்டார்..

இந்த நெளிவு சுளிவு தெரியாத வாட்டர்மேன் , பெரிய பலன் எதுவும் பெறவில்லை…

பிற்காலத்தில் , ஏன் சேம் சைட் கோல் போட்டார் என்பது இப்போது புரிந்து இருக்கும்…

 

டாம் எப்படி பிரச்சினையை கையாண்டார் என பார்ப்பதற்கு முன், அந்த புத்தகதின் தவறு என்ன என பார்க்கலாம்..

எக்சலண்ட் நிறுவனங்களின் பண்புகளாக அவர்கள் சொன்ன அம்சங்களை பாருங்கள்..

 

  • விரைவாக முடிவெடு- விரைவாக செயல்படு
  • குறைந்த பட்ச ஆட்களை வைத்து அதிக பட்ச வேலைகளை முடி
  • வாடிக்கையாளருடன் தொடர்பில் இரு
  • ஊழியரின் செய்லதிறனை அதிகரி
  • ஊழியரை சுதந்திரமாக வேலை செய்ய விடு
  • கொள்கை அடிப்படையில், ஒரு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்
  • என்ன தெரியுமோ அதை உருப்படியாக செய்
  • அடிப்படைபன்புகளை உறுதியாக கடை பிடி.. அன்ராட வேலையை சுதந்திரமாக விடு

 

 

இதை சற்று ஆழ்ந்து பார்த்தால் , ஒரு விஷயம் தெரியும்…

ஒரு தொழில் என்றால் , லாபம் என்பதுதான் முக்கியம்.. வியாபாரம் முக்கியம்.. காசு முக்கியம்… இதை சார்ந்த பொது பண்பு எதையும் புத்தகம் சொல்லவே இல்லை..

உதாரண்மாக, எக்சண்ட் நிருவனங்கள், ஆண்டுக்கு 20% லாபத்தை அதிகரித்தன…  மொத்த வியாபாரம் , ஒரு சராசரி நிருவனத்தை விட , இத்தனை சதவிகிதம் அதிகம் என்றெல்லாம் சொல்லி இருந்தால் அதில் அர்த்தம் உண்டு..

வேலை உருப்படியாக சொன்னால் வெற்றி நிச்சயம் என பொத்தாம்பொதுவாக சொன்னால் அதில் அர்த்தம் இல்லை..

 

அ என்ற நிறுவனம் விரைவாக முடிவெடிக்கிறது. எனவே அது எக்சலண்ட் நிருவனம்… ஆ என்ற நிறுவனம் மெதுவாக செய்லப்டுகிறது,, எனவே அது எக்சலண்ட் நிறுவனம் அல்ல என்று எப்படி நிரூபிக்க முடியும்…?

ஆகவே எக்சலண்ட் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க பயன்படுதிய அளவுகோலே தவறு..

 

ஒரு நிறுவனதின் வெற்றிக்கு இந்த பண்புகள் அவசியம்தான்.. ஆனால் போதுமானது அல்ல…

சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுத்தல் போன்றவை அவசியம்.. வாடிக்கையாளர் திருப்தி அதை விட முக்கியம்..  ஆனால் வாடிக்கையாளர் பற்றி ஒரே ஒரு அம்சம்தான் சொல்லி இருக்கிறார்கள் அவர்கள்…

 

குத்து மதிப்பாக சில அம்சங்களை நிர்ணயம் செய்த அவர்கள் , அட்லீஸ்ட் அந்த அம்சமாவது , எக்சலண்ட் நிறுவனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா என ஆராய்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை…

சும்மா காதில் விழுந்த விஷ்யங்கள்தான் இவர்களின் ஆதாரம்..

ஆக, ஒரு குப்பையை காட்டி மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என முடிவுக்கு வர கூடாது..

அவர்கள் சொல்வது நல்ல விஷ்யங்கள்தான்.. ஆனால் அவை இவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது அல்ல… முன்பே உள்ளதுதான்..

தவிர,  இவை இருந்தால் எக்சலண்ட் நிறுவனமாகி விடலாம் என நினைக்க கூடாது..  இவை எல்லாம் அடிப்படை பண்புகள்தான்…

 

ஆனால் டாம் இந்த பிரச்சினைக்கே போகவில்லை..

என் அடுத்த புத்தகத்தில் இதற்கு விடை சொல்கிறேன் என உதார் விட்டு எதிர்பார்ப்பை அதிகபடுத்தினார்..

வாட்டர்மேனை கழட்டி விட்டு, எ பாஷன் ஃபார் எக்சனஸ் என்ற அடுத்த புத்தகத்தை இன்னொருவருடன் சேர்ந்து வெளியிட்டார்.அதன் பின் அவரையும் கழட்டி விட்டு , thriving on chaos என்ற புத்தகத்தை வெளியிட்டார்..

 

எக்ச்லண்ட் நிறுவனம் என்றெல்லாம் எதுவும் இல்லை… காலம் மாறிவிட்டது.. மாறிக்கொண்டே இருக்கிறது.. அதற்கேற்ப மாறாவிட்டால் , காணாமால் போய்விட வேண்டியதுதான் என ஒரு போடு போட்டார்..

கீழே விழுந்தும் மீசையில்  மண் ஒட்டவில்லை என்பது போல , புத்தகம் சரியான விஷ்யத்தைதான் சொன்னது.. காலம்தான் மாறிவிட்டது என்றார் அவர்..

அது உடையவில்லை என்றால் , அதை பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது பழைய சித்தாந்தம்…

அது உடையவில்லை என்றால் ,. நீ சரியாக செக் செய்யவில்லை.. இன்னொரு முறை சோத்திது உடைந்த இடத்தை கண்டுபிடி..பழுது பார் என்பது புது சித்தாந்த்ம்..

இப்படி கவனமாக இல்லாவிட்டால் , எக்சலண்ட் நிறுவனங்களின் கதிதான் உங்களுக்கு” என்றார் அவர்

சில வெற்றிகரமான நிறுவனங்களை உதாரணமாக காட்டினார்..பழைய எக்சலண்ட் நிறுவனங்களை கைகழுவி விட்டார் என்பதை சொல்ல தேவையில்லை..

இதில் ஒரு காமெடி… தம்மை எக்சலண்ட் நிறுவனமாக எழுத சொல்லி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முன்பு பேசப்பட்டதல்லவா..

இப்போது, தம்மை சிறந்த கம்பெனி என எழுதி விடுவாரோ என அனைவரும் நடுங்க தொடங்கினர்..

அந்த அச்சம் சரியாக போய் விட்டது..

அவர் சிறந்த கம்பெனி.. இவர்களை போல இருக்க வேண்டும் என உதாரனம் காட்டிய ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் விரைவிலேயே தன் முதல் இடத்தை இழந்தது… நல்ல வேளையாக , இழுத்து மூடப்படவில்லை..

நல்ல எதிர்காலம் இருப்பதாக இவர் கணித்த பியூப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற விமான போக்கு வரத்து நிறுவனம் கூடிய விரைவில் மூடு விழாவை நோக்கி சென்றது..

 

இவர் கணிப்பு , சிந்தனை என எதுவும் சரியில்லாமல் போனாலும், இவரை இன்னும் இந்த ஊர் நம்புகிறது என்றால், அந்த திறமையை மதித்துதான் ஆக வேண்டும்..

சந்தர்ப்பவாதியாக இருங்கள் என்பதுதான் இவரது தற்போதைய உபதேசம்.. அவரும் அதையே பின்பற்றி வருகிறார்…

வாடிக்கையாளர் ஒரே நிறுவனத்திடம் விசுவாசமாக இருத்தல், ஊழியர்கள் ஒரே நிறுவனதில் வேலை செய்தல், ஒரு நிறுவனம் தம் ஊழியரை அக்கறையாக கவனித்து கொள்ளுதல் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது,,

மாற்றத்திற்கேற்ப யார் மாறுகிறாரோ அவர்தாம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற இவர் கொள்கை , இந்த காலத்திற்கு பொறுத்தமாக இருப்பதால், வெற்றிகரமான மேனேஜ்மெண்ட் குருவாகவும், அதிகம் விற்பனை ஆகும் நூல் ஆசிரியராகவும் திகழ்கிறார் இவர் ..

10 comments:

  1. அருமையான அலசல். சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி உள்ளீர்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. தலைவரே இவர மாதிரி சந்தர்ப்பனகளை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளக் கூடிய கில்லாடிகள் வெகு சொற்பமே. வியாபார உலகில் பின்னாளில் இதுவும் ஒரு யுக்தியாகதான் பார்க்கப்படும். இன்றைய தேதிக்கு வெற்றிகரமாக பணம் பண்ணா தெரிந்தவனே புத்திசாலி ..

    ReplyDelete
  3. வியாபார உலகில் பின்னாளில் இதுவும் ஒரு யுக்தியாகதான் பார்க்கப்படும். இன்றைய தேதிக்கு வெற்றிகரமாக பணம் பண்ணா தெரிந்தவனே புத்திசாலி "

    நண்பரே.. ந்ங்கள் வாழ்க்கையையே புத்தக்மாக படித்து உண்மைகளை உணர்ந்தவர்

    ReplyDelete
  4. சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி உள்ளீர்கள்”

    நன்றி .

    ReplyDelete
  5. மாற்றத்திற்கேற்ப யார் மாறுகிறாரோ அவர்தாம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற இவர் கொள்கை ,

    .....சுவாரசியமான டாபிக். நல்லா அலசி எழுதி இருக்கீங்க.... பாராட்டுக்கள்!

    ReplyDelete
  6. மிகவும் தெளிவான அலசல். பகி்ர்வுக்கு நன்றி நண்பரே..!

    ReplyDelete
  7. thank u madam... thank u praveenkumar

    ReplyDelete
  8. நீங்க புத்தகம் ஏதும் எழுதுவது இல்லையா தல :)
    ப்ளாக் -யோட சரியா :))

    ReplyDelete
  9. நீங்க புத்தகம் ஏதும் எழுதுவது இல்லையா தல :)"

    என் புத்த்கம் வெளியானா , வெளியீட்டு விழாவுக்கு முதல் அழைப்பிதழ் உங்களுக்குத்தான்..ஓகே வா ?

    ReplyDelete
  10. நல்ல அலசல்...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா