Monday, October 25, 2010

கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இறை தூதர் - புத்தக அறிமுகம்

ஒரு குறப்பிட்ட கடவுளை நம்புபவர்களுக்கு எது நடந்தாலும் அது கடவுள் செய்வதாக தோன்றும்..
கடவுள் இல்லை என நம்புபவர்களுக்கு , அற்புதங்கள் என சொல்லப்படுவதெல்லாம் ஏமாற்று வேலை என தோன்றும்..
எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஒரு பார்வையாலானாக உலகை கவனிப்பவருக்கு, உலகம் புது புது தகவ்ள்ககளை வாரி வழங்க காத்து இருக்கிறது...
என்னை பொறுத்தவரை, பைபிள் , குரான் , கீதை, மூலதனம் , பெண் ஏன் அடிமை ஆனாள் , தம்மபதம், என எல்ல்லாவற்றையும் ஆழ்ந்து படித்து அதன் சாரத்தை உறிய முயல்வது வழக்கம்..

அந்த வகையில், ஒரு வித்த்தியாசமான புத்தகம் படிக்க நேர்ந்தது...

அல்லா என்பவர் அனைவருக்கும் இறைவன்... அந்தந்த நாடுகளுக்கு ஏற்றபடி பல நபிமார்களை அனுப்பி மக்காளை நல்வழி படுத்துகிறார் அல்லா..

அப்படி அவர் அனுப்பிய நபிமார்களில் ஒருவர்தான் கிருஷ்ணர் என சொல்லி , ஆச்சர்யபடுதியது புத்தகம். (இயேசுவும் கூட நபிமார்களில் ஒருவரே என்பது ஒரு நம்பிக்கை )

அட, என்னாதான் சொல்ல வருகிறார்கள்,,, வித்தியாசமான பார்வையாக இருக்கிறதே என படிக்க ஆரம்பித்தால், அடுத்தடுத்து பல ஆசாரியங்கள்..

குர்ஆனில் சில நபிம்மார்கள் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.. இதில் குறிப்பிட படாத நபிமார்களை ஏற்க கூடாது என கருத இடமில்லை..
" நிச்சயமாக நாம் உமக்கு ( நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களுக்கு ) முன்னர் பல தூதர்களை அனுப்பி உள்ளோம்..சிலரை பற்றி கூறி உள்ளோம்.. உமக்கு கூறாதவர்கள் சிலரும் உள்ளனர் ( 40 : 79 )
என குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது...

ஹஸ்ரத் தலைமி அவர்களின் நபி மொழி ஒன்றில் இப்படி இருக்கிறது...

கான பில் ஹிந்தி நபிய்யுன் அச்வதுள் லாவணி இச்முஹூ காஹினா
" இந்தியாவில் ஒரு நபி தோன்றினார்.. அவர் கருமை நிறத்தவர் .. அவர் பெயர் காஹினா "

இது போல பல கருத்துக்களை இஸ்லாமிய சான்றோர்கள் நூல்களில் இருந்து எடுத்து காட்டுகிறது புத்தகம்...

இந்துக்கள் கிருஷ்ணரை கடவுளாக வணங்கினாலும், அவர் கடவுள் அல்ல... இறை தூதரே என சுவையாக வாதாடுகிறது இந்த நூல்..

இந்துக்கள் கிருஷ்ணரை பார்க்கும் விதம், அவரை பற்றிய வரலாறுகள், சம்பவங்கள் போன்றவற்றை வேறு ஒரு கோணத்தில் ஆய்கிறது நூல்..

இன்னும் ஒருபடி மேலே போய், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் ) வருகையை பற்றி மகரிஷி வியாச பகவானின் பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறார் நூல் ஆசிரியர்..

இன்னும் நிறைய சுவையான தகவல்கல் இருகின்றன...

கண்டிப்பாக படித்து பாருங்கள்.... புத்தகம் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்க வேண்டாம்.. எனாதன் சொல்கிறார்களே என பாருங்கள்..

நமது கிருஷ்ணர் எழுதியவர் : கலீல் அகமது

25 comments:

 1. உண்மை என்று தான் தோன்றுகிறது தல ....
  கிருஷ்ணர் கடவுள் அல்ல .....இயேசு கடவுள் அல்ல ...புத்தர் கடவுள் அல்ல .....தனி காட்டு ராஜா கடவுள் அல்ல ...அனைவரும் தூதர்கள் தான் ......
  அல்லா,ஈஸ்வர் என்று சொல்ல படுவது ...இந்த பிரபஞ்ச சக்தியைத்தான் .........இந்த பிரபஞ்ச முழுமைதான் .....

  கரெட்டா பேசுறனா தல ?

  ReplyDelete
 2. நான் எந்தத் தூதரையும் இதுவரை அனுப்பவில்லை.!?

  இப்படிக்கு
  கடவுள்

  ReplyDelete
 3. எல்லா குப்பைகளும் `இப்படி உளறி வைக்கப்பட்டவைதான்..

  ReplyDelete
 4. "கரெட்டா பேசுறனா தல"

  நீங்களும் என்னை மாதிரிதானா? சொல்லவே இல்ல !!

  ReplyDelete
 5. நான் எந்தத் தூதரையும் இதுவரை அனுப்பவில்லை.!”

  ஹா ஹா

  ReplyDelete
 6. நான் எந்தத் தூதரையும் இதுவரை அனுப்பவில்லை.!?”

  ஹா ஹா

  ReplyDelete
 7. எல்லா குப்பைகளும் `இப்படி உளறி வைக்கப்பட்டவைதான்.”

  எல்லாதரப்பு வாதங்களையும் கேட்பதுதானே நல்லது

  ReplyDelete
 8. அன்பரசன் said...
  :)

  :)

  ReplyDelete
 9. நித்யானந்தாவை அனுப்பியது யார்?

  ReplyDelete
 10. It would be interesting to see how the author of the book and its supporters would respond if someone writes a book stating Allah is not God, and Mohammed is not a prophet. If they can take it without making fuss, then they can write these kind of rubbish.

  ReplyDelete
 11. ”If they can take it without making fuss, then they can write these kind of rubbish”

  அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு... கடவுளே இல்லை என்ற நம்பிக்கைகூட இருக்கிறது அல்லவா

  ReplyDelete
 12. ஆஹா, நண்பா!
  எந்திரனில் புகுந்து இந்திரனை (இப் பதிவை) அறிந்தேன். இது பற்றி நானும் பிறகு எழுதலாம் என்றிருந்தேன். கிருஷ்ணன் கதை மோசஸின் கதையோடு ஒத்துப் போகும்.

  'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'

  உங்கள் அறிவுத் தேடல் நல்வழிக்கு இட்டுச் செல்லட்டும்.ஆமீன்.

  ReplyDelete
 13. "இது பற்றி நானும் பிறகு எழுதலாம் என்றிருந்தேன். கிருஷ்ணன் கதை மோசஸின் கதையோடு ஒத்துப் போகும்"

  You can write detaily, I belive..pleasse write more on this topic

  ReplyDelete
 14. //தனி காட்டு ராஜா கடவுள் அல்ல ...அனைவரும் தூதர்கள் தான் ......//

  நான் தனிக்காட்டு ராஜாவிடம் சிஷ்யனாகப் போகிறேன்.

  ReplyDelete
 15. //நான் தனிக்காட்டு ராஜாவிடம் சிஷ்யனாகப் போகிறேன்.//

  நாகராஜா ......என் சிஷ்ய பெருந்தகையே ......வள்ளல் திலகமே .....தீக்க்ஷை தருகிறேன் வா ....நம் ஆட்டத்தை துவக்குவோம் ......

  ReplyDelete
 16. நாகராஜா ......என் சிஷ்ய பெருந்தகையே ......வள்ளல் திலகமே .....தீக்க்ஷை தருகிறேன் வா ....நம் ஆட்டத்தை துவக்குவோம் ...////

  தீக்‌ஷை பெரும் மாபெரும் விழாவை சென்னையில் நடத்தலாமா அல்லது கோவையிலா ?

  ReplyDelete
 17. //தீக்‌ஷை பெரும் மாபெரும் விழாவை சென்னையில் நடத்தலாமா அல்லது கோவையிலா ? //

  எங்கெல்லாம் மக்களுக்கு பக்தி பரவசம் பொங்குகிறதோ ....அங்கெல்லாம் நாம் மக்களுக்கு தீக்க்ஷை வழங்குவோம்...
  சென்னை ,கோவை ...நமக்கேது எல்லை..?
  மதுரை ,திருநெல்வேலி ...நமக்கேது வேலி..? :))

  ReplyDelete
 18. கடவுள் இல்லை என்பவன் முட்டாள் கடவுளை கொச்சை படுத்துவன் சாத்தான்

  ReplyDelete
 19. thampi kannan enttum kannan mattum thaan.avanukku eedu ethum illai appadi irukka oru nabiya?........ eraivanai mattavargaludan compare pannathe..... ok vaaaaaaaaaa.... thangamattai.. purinchikkaaaaaaa...

  ReplyDelete
 20. GALIL AHMED THAN KADAVUL

  ReplyDelete
 21. IYA UN KADAVUL UANAKKU. EN KADAVUL ENAKKU.NEEUM IRAIVANAI KANDATHILLAI, NAANUM IRAIVANAI KANDATHILLAI.APPADIRUKKA IRAIVAN ALLA ENRO, ILLAI YESU ENRO, ILLAI KRISHNAN ENRO EPPADI SOLLA MUDIUM.PLEASE IRAIVANAI VELIYE TAEDAATHE.UNAKKUL THEDU.ENTHA ORU IRAIVANUM SARI, MATHAMUM SARI,ADUTHA AANMAAVAI NOGADITHU THAN MATHATHAI PARAPPA SOLLAVILLAI.ELLA MATHAMUM ELLORIDAMUM ANBU SELUTHUNGAL ENRU THAN SOLLUKIRATHU. INGU IRAIVAN SARIYAAGATHAN IRUKKIRAN.NAAMTHAN SARIYAAGA ILLAI.PLEASE EPPOTHUM ADUTHA MATHAMUM SARI,AANMAAUM SARI,IRAIVANAIUM SARI NOGADIKKUM MUNBHU SATRU YOSIPPOM.INRU ALLA EPOTHUM IYA UN KADVUL UNAKKU,EN KADAVUL ENAKKU.

  ReplyDelete
 22. ஹதீசுகள் 8ம் 9ம் நூற்றாண்டுகளில் சேர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டன. இவற்றில் 'சஹீஹ் சித்தாஹ்' என்று அழைக்கப்படுகின்ற புஹாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத் ஆகிய கிரந்தங்கள் பிரபலமானவையாகக் கொள்ளப்படுகின்றன. நபிமொழிகள் அல்லாஹ் கூறுகின்றான் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிவையாகும். ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு செய்தி என்று பொருள். முகம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முகம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.

  நான்கு லட்சம் ஹதீஸ்களை திரட்டிய இமாம் புகாரி(ரஹ்) அவர்கள், அதில் நான்காயிரத்துக்கு சற்று அதிகமான ஹதிஸை மட்டும்தான் பதியவைத்தார்கள். தவறான ஹதீஸை எந்த ஒரு பெரிய அறிஞர் தன் புத்தகத்தில் எழுதினாலும் அக்குறிப்பிட்ட விஷயம் பெரும்பான்மையான முஸ்லிம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

  எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம்.
  1, ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
  2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
  3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
  4. ளயீப் (பலவீனமானது)
  எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை) என்கிறவகையை சார்த்தவைகள் மட்டுமே முஸ்லீம் அறிஞர்கள ஏற்பவைகள். பிற நபிமொழிகள் போலிகள் என்கிறார்கள்.

  எனவே, முஸ்லிம்களின் இந்த நபிமொழிகள் என்பது சந்தேகத்திற்கு உரியவை. இவைகளை ஆதாரமாக ஏற்பது சந்தேகத்திற்குரியதே! ஏனெனில், இதில் உண்மை தன்மையை அறிவது கடினம்.

  அதாவது ஒரு ஆதரமுள்ள ஹதீஸ் என்பது, தமக்கு அறிவித்தவர் யார்? என்பதை மட்டும் கூறினால் போதாது. மாறாக தமக்கு அறிவித்தவர் யாரிடம் கேட்டார்? அவர் யாரிடம் இச்செய்தியைக் கேட்டார்? என்று சங்கிலித் தொடராகக் கூறிக் கொண்டே நபிகள் நாயகம் வரை செல்ல வேண்டும். இதுவே ஒரு உண்மையான ஹதீஸ் இருக்கமுடியும்.

  குர்ஆனில் சில நபிம்மார்கள் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.. இதில் குறிப்பிட படாத நபிமார்களை ஏற்க கூடாது.

  ஹஸ்ரத் தலைமி அவர்களின் நபி மொழி ...
  கான பில் ஹிந்தி நபிய்யுன் அச்வதுள் லாவணி இச்முஹூ காஹினா
  " இந்தியாவில் ஒரு நபி தோன்றினார்.. அவர் கருமை நிறத்தவர் .. அவர் பெயர் காஹினா ".

  ஆனால்,நாம் ஏற்கனவே மேலே சொல்லியபடி இல்லாதததால், இது ஒரு ஆதாரமில்லாத ஹதீஸ் என்பதால் எந்த முஸ்லிம்களும் இதை ஏற்கமாட்டார்கள்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா