Saturday, October 16, 2010

கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழில் நுட்பம் !

கொடி அசைந்த்தும் காற்று வந்த்தா,,, காற்று வந்த்தால் கொடி அசைந்த்தா என்பது ஒருபக்கம் இருந்தாலும் , கொடி அசைவதால் மின்சாரம் உருவாக்க முடியும் என்கிறது ஒரு அமெரிக்க் நிறுவனம்..

இது இயற்கையான கொடி அல்ல... மின்சாரம் தயாரிப்பதற்கென்றே உருவாக்கப்படும், 180 அடி உயரமுள்ள கார்பன் ஃபைபர் தண்டுகள்... உரமான புல் போல இருக்கும்.. காற்றில் இவை அசையும்போது மின்சாரம் உருவாகும்..

காற்றாலைகளை பார்த்து இருப்பீர்கள்.. பெரிய மின்விசிறி போல இருக்கும்.. காற்றில் இது சுற்றும்போது மின்சாரம் உருவாகும்... இது நல்ல முறைதான் என்ராலும், உராய்வால் ஏற்படும் மின் இழப்பு , சத்தம், மெயிண்டன்ன்ஸ் வேலைகள் என சில பிரச்சினைகளும் உள்ள்ன.. ( தென் மாவட்டங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம்.. )

windstalk-825x525 

1 புதிய தொழில் நுட்பம்..

 

windstalk-park-825x425

2 சுற்ற வேண்டாம்.   அசைந்தால் போதும்

 

 

 windmill

3 . தற்போதுள்ள காற்றாலை

இந்த பிரச்சினைகள் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க இந்த புதிய முறை உதவும்..

கிட்ட்த்தட்ட 60 அடி அகலமுள்ள கான்கிரீட் அடித்தளத்தில் இந்த மாபெரும் உயரமுள்ள கார்பன ஃபைபர் “ புல் “ நடப்படும் .. 180 அடி உயரமுள்ள , இது போன்ற 1200 புல்கள் தேவை ..

காற்றினால் அசையும்போது மின்சாரம் உண்டாகும்... இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஜெனரேட்டர்கள் ஒவ்வொரு புல்லின் அடியிலும் பொருத்தப்பட்டு இருக்கும்..

சத்தம் இல்லாமல் மின்சாரம் உருவாகும், புல்லின் எண்ணிக்கையை , அடர்த்தியை அதிகரித்து , அவுட்புட்டை அதிகரித்து கொள்ளலாம் போன்று பல அனுகூலங்கள் உள்ளன..

இதே போன்ற அமைப்பை கடலுக்கு அடியில் பொருத்தி , நீரோட்ட்த்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது..

சோதனை நிலையில் இருக்கும் இந்த ஆய்வுகள் நடைமுறைக்கு வரும்போது , மின்சார தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிரது..

அதுவரை, மின் தடையை சகித்து கொள்ள வேண்டியதுதான்...

9 comments:

 1. இயற்கையின் சுற்றுச் சூழல் பாதிக்காவண்ணம் மின்சார உற்பத்தி பெருக்குவதற்கு என்றுமே உலகளவில் ஆதரவு உண்டு. தங்களுடைய இச்செய்தி கண்டு ஒரு இயற்கை ஆர்வலனாக மனம் மகிழ்கின்றேன். இது போன்ற செய்திகளை வெளியிடும் போது இதற்கான மூல ஆதார தகவலையினையும் தருவீர்களேயானால் மிகவும் உதவிகரமாக இருக்கும். நெல்லி. மூர்த்தி.

  ReplyDelete
 2. "இயற்கை ஆர்வலனாக மனம் மகிழ்கின்றேன்"

  .தொழில் நுட்ப அடிப்படையில் இந்த செய்தியை ரசித்தேன்..
  நீங்கள் இதை வேறொரு கோணத்தில் பார்ப்பதை அறியும் போது, அட, என ஆச்சர்யப்பட்டேன்..
  இயற்கையின் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத மின்சக்தி உற்பத்தி என்பதுதான் இதன் முக்கிய பிளஸ் பாய்ண்ட்... இதை சுட்டி காட்டியதற்கு நன்றி..
  இனி எழுதும்போது மூலத்தையும் கொடுத்து விடுகிறேன்.. தொடர்புள்ள பல மேலதிக தகவல்களை அறிய அது உதவியாக இருக்கும்.

  ReplyDelete
 3. நல்லதொரு விஷயத்தை எழுதி இருக்கிறீர்கள். அணு உலைகளைப் பெருக்குகிறேன் பேர்வழி என்று திரிவதைவிட இம்மாதிரி இயற்கையோடு இயைந்த இம்மாதிரி தொழில்நுட்பங்களை வரவேற்க வேண்டும்! இன்னும் நன்கு விரிவாக எழுதி இருக்கலாமே!

  ReplyDelete
 4. நல்ல விஞ்ஞான முன்னேற்றம்

  ReplyDelete
 5. நல்லதொரு விஷயத்தை எழுதி இருக்கிறீர்கள்

  ReplyDelete
 6. //அதுவரை, மின் தடையை சகித்து கொள்ள வேண்டியதுதான்... //

  இதுதான் நம்ம பஞ்ச்!

  ReplyDelete
 7. "இதுதான் நம்ம பஞ்ச்"

  low voltage problem,இலவச இணைப்பு

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா