Monday, November 10, 2014

ஆன்மீக படங்களில் நடிக்காதது ஏன்? புரட்சி தலைவர் விளக்கம் - மிக்சர் போஸ்ட்

இரண்டாம் உலக போரின்போது வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு தலைவனாக மிக சிறப்பாக செயல்பட்டார் . ஆனால் அதற்கு பின் வந்த தேர்தலில் தோற்று பதவி இழந்தார் . அவர் அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் , நான் பாடுபட்டது இதற்காகத்தான் . தாம் விரும்பாதவரை தூக்கி எறியும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என விரும்பினேன் . அது நிறைவேறி விட்டது
-----------------------------------------------------------------------------------------------------------------------
ராமன் கதாபாத்திரம் ஒற்றை பரிமாணத்துடன் நமக்கு அறிமுக ஆகி இருக்கிறது.. கிருஷ்ணர் கதாபாத்திரம் பழைய படங்கள் தயவால் கலர்ஃபுல்லாக அறிமுகம் ஆகி இருக்கிறது..
ஆனால் கம்பர் ராமனின் பல்வேறு பரிமாணங்களை காட்டுகிறார். தலைமைப்பண்பு, நட்பு , காதல் , திருவள்ளுவர் சொல்லும் கண்ணோட்டம் என ரசித்து ரசித்து எழுதுகிறார்.
இந்த பாடலை பாருங்கள் ..கடைசி இருவரிகளில் இந்த பாடல் உச்சம் பெறுவதை கவனியுங்கள்
குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை
----------------------------------------------------------------------------------------------------------
சினிமாவில் பார்த்து பார்த்து , கிருஷ்ணர் ஜாலியானவர் , சூது வாது மிக்கவர் , பெண்களுடன் ஜல்சா செய்பவர் - ராமரோ அப்பாவி என்ற இமேஜ் உருவாகி இருக்கிறது.. ராமனும் ராஜதந்திரம் மிக்கவன் , நகைச்சுவை உணர்வு கொண்டவன் என்கிறார் கம்பர்..
சூர்ப்பனகை ராமனை காதலிப்பதாக சொல்கிறாள்.. அவன் தன்னை காதலித்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகளை சொல்கிறாள்...
அதை கிண்டல் செய்து ராமன் சிரிப்பதாக இந்த பாடல்..
அடேங்கப்பா... உன் ஆட்களின் ஆசி கிடைக்கிறது.. நீ கிடைக்கிறாய்.. வாழ் நாள் முழுதும் உட்கார்ந்து சாப்பிடும் செல்வம் கிடைக்கிறது.. அயோத்தியை விட்டு வந்தது நல்லதா போச்சு போலிருக்கே.. இதுக்கெல்லாம் நான் எவ்வளவு கொடுத்து வச்சுருக்கணும்... என கிண்டலாக சொல்கிறானாம்
நிருதர்தம் அருளும் பெற்றேன்; நின் நலம் பெற்றேன்; நின்னோடு
ஒருவ அருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன்; ஒன்றோ,
திரு நகர் தீர்ந்த பின்னர், செய் தவம் பயந்தது?' என்னா,
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான்
---------------------------------------------------------------------------------------------------------
சோகத்தைக் கூட எவ்வளவு சுகமாக சொல்கிறான் கம்பன் !! பாருங்கள்...கம்பன் நமக்காக இரங்கற்பா பாடுவான் என்றால் அதற்காகவே இறக்கலாம் போலயே !!
ஆவும் அழுத; அதன் கன்று
அழுத; அன்று அலர்ந்த
பூவும் அழுத; புனல் புள்
அழுத; கள் ஒழுகும்
காவும் அழுத; களிறு அழுத;
கால் வயப் போர்
மாவும் அழுத; - அம்
மன்னவனை மானவே.
-----------------------------------------------------------------------------------------

காதல் காட்சிகளில் ரொமாண்டிக்காக இசை அமைத்து அழகு அழகு சேர்ப்பார்கள் அல்லவா.. அது போல ஒரு பெண் பேரழகியாக தோற்றம் கொண்டு வந்தால் , என்பதை எழுத்திலேயே இனிய இசையுடன் சொல்லும் இந்த பாடலை பாருங்கள்...எத்தனை எத்தனை உவமைகள்
மெல்லின எழுத்துகளால் எந்த இனிய பாடலை படைத்துள்ளார்..அவள் மெல்லியளாக வருகிறாளாம்.
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் 
பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர்,
சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம்
என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச
மகள் வந்தாள்.
-------------------------------------------------------------------------------------------
தமிழ் வாழ்க.... அதை வளர்க்கும் தமிழர்களும் வாழ்க
1. ரொம்ப நாள் கழித்து என் பெண் தோழி ஒருவரை பார்த்தேன்
( தோழி என்றாலே அவர் பெண் தானே... பெண் தோழர் என்று சொன்னாலாவது அதில் அர்த்தம் இருக்கிறது )
2. கடந்த 1980 அவர் கொல்லப்பட்டார்/
( அது என்ன கடந்த 1980 ? கடந்த வெள்ளிக்கிழமை என்று சொன்னால் அர்த்தம் இருக்கிறது. கடந்த வெள்ளியா , வரப்போகும் வெள்ளியா என்ற குழப்பம் தவிர்க்க அப்படி சொல்லலாம். 1980 என்று சொன்னாலே அது கட்ந்த 1980தானே..இனி ஒரு 1980 வரப்போகிறதா என்ன ?)
3. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டாதீர்கள், உயிரோடு வாழுங்கள்’
( அது என்ன உயிருடன் வாழ்வது? வாழ்வது என்றாலே உயிரோடு வாழ்வதுதானே... உயிர் இன்றி வாழ்வது என்பது உண்டா )

உயர்வான விஷயங்களுக்கு முயன்று , அம்முயற்சியில் தோற்பது என்பது பெரிய பிரச்னை அன்று . மலிவான விஷயங்களுக்கு முயன்று , அதில் வென்று விடுகிறோமே , அதுதான் ஆபத்து
------------------------------------------------------------------------------
செடி மென்மையாக இருக்கையில் வளர்கிறது.. மரமாக மாறி உறுதியாக மாறும்போது இறக்கிறது. வலிமையும் உறுதியும் அழிவின் கூட்டாளிகளாகும்- ஸ்டாக்கர் திரைப்படம்
--------------------------------------------------------------------------
தர்க்கோவ்ஸ்கியின் மாஸ்டர் பீஸ் ஸ்டாக்கர் படம் பார்த்தேன். இப்படி எல்லாம்கூட சினிமா எடுக்கலாமா என்ற திகைப்பு ஏற்பட்டது. கம்யூட்டரில் டைம் பாசுக்காக கேம்ஸ் ஆடுவதில் தவறில்லை. ஆனால் இண்டர்னெட் உட்பட வேறு எதற்காகவும் இன்றி , முழுக்க முழுக்க கேம்ஸ் விளையாடுவதற்கு மட்டுமே கம்ப்யூட்டரை பயன்படுத்தினால் என்னவென்பது? நாம் சினிமா எனும் அற்புதமான கண்டுபிடிப்பை அப்படித்தான் தமிழில் பயன்படுத்தி வருகிறோம் என தோன்றுகிறது
------------------------------------------------------------------------
இரு துருவங்கள்
கொல்வதற்கு முதல் நாள்வரை அன்போடு வளர்த்த கோழியை எப்படி கொன்று சாப்பிட முடிகிறது என கேட்கிறது மேலைநாட்டு மனம்.
ஒரு கோழியை பிறந்ததில் இருந்தே இறைச்சியாக பார்த்து , அன்பு காட்டாமல் , இறைச்சித்துண்டாகவே கருதி வளர்க்க எப்படி மனம் வருகிறது என குழம்புகிறது கீழைநாட்டு மனம்
----------------------------------------------------------------------------------
தலையில் வகிடெடுத்த தங்க விரல் பார்த்தேனே
தலையில எழுதி வைச்ச அந்த விரல் பார்த்தேனா
- மேத்தா இளையராஜா இசையில் வடித்த வரிகள்
-------------------------------------------------------------------------------------------------------
இந்த வரிகள் பல ஆண்டுகள் முன் எழுதப்பட்டாலும், இப்போது படித்தாலும் மனதை ஏனோ கனக்க செய்கிறது
********************************************
மூன்றாண்டு
மூன்றாண்டுகளுக்கு முன் ஓர் அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவுப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக்கொள்கிறது.
---------------------------------------------------------------------------------------------------
கோழைத்தனமாக நடந்து கொண்டு விட்டோமே என்ற , குற்ற உணர்வில் தவிக்கும் ஒருவன் கதை..” மறு நாள் விடிந்து நான் எழுந்த போது எல்லாம் சரியாகிப் போயிருந்தது “ என முடிக்கிறார் அசோகமித்தரன். இப்படி ஒரு பவர்ஃபுல்லான இறுதி வாக்கியத்தை , இவ்வளவு எளிமையாக சொல்ல அவரால்தான் முடியும்
-----------------------------------------------------------------------------------------------
கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் கொடுக்கும் பாணியை சுஜாதா பிரபலமாக்கினார். அதை பலர் மலினமாக்கி ஓவர் டோஸாக்கி விட்டனர். அந்த வகை கதைகளின் உயிர் நாடி கடைசி வரிகள்தான். அந்த சஸ்பென்ஸ்தான் கதை. ஆனால் வேறு சில வகை கதைகள் இருக்கின்றன... கதையின் முடிவில் வரும் திருப்பம் , சஸ்பென்ஸுக்காக அல்லாமல் , கதையை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள பயன்படுகிறது.. அப்படி கடைசி வரியில் இருந்து துவங்கும் ஒரு கதையை இன்று படிக்க நேர்ந்தது, கதையின் பெயர் : குதூகலம் எழுதியவர் : அசோகமித்திரன்

----------------------------------------------------------------------------------------
நான் அரைடிரவுசர் போட்ட பள்ளி மாணவனாக இருந்த போது என்னைவிட கேவலமாக படிக்க கூடிய ஒரு நண்பனுக்கு , அரைபரீட்சையில் கொஞ்சம் காப்பி அடிக்க உதவி செய்தேன். அக மகிழ்ந்து போன அவன் எனக்கு பிரதியுபகாரம் செய்ய உறுதி பூண்டு சைக்கிளில் எங்கோ ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றான்,..என்ன எழவுடா இது என குழம்பிக்கொண்டே சென்றேன். அங்கே ஒரு கைவிடப்பட்ட வீட்டில் ஒரு பகுதியை ஆக்ரமித்து அவன் வைத்து இருந்த நூலகத்தை பார்த்து அசந்து போனேன்..ங்கொய்யால டைப் டைப்பாக பல்வேறு புத்தகங்கள்,,ப்டங்கள்... சரோஜாதேவி, மருதம், விருந்து , திரைச்சித்ரா , ***க ***க இன்பம் , காமினி ** **** , என தனி நபராக அவன் சேமித்து வைத்த கலெக்‌ஷனை இப்போது நினைத்தாலும் பிரமிப்பாக இருக்கிறது.. அந்த சின்ன வயதில் அவனுக்கு ஒரு ஹீரோ அந்தஸ்து கிடைத்து விட்டது... ஆனால் இப்போதைய நெட் யுகத்தில் , எல்லாமே நெட்டில் வந்து விடுவதால் , இப்போதைய சிறுவர்கள் மத்தியில் அது போன்ற கலைஞர்களுக்கு மதிப்பு இல்லை என்பது வருந்தத்தக்கது
---------------------------------------------------------------------------------------------------
உறவுக்கு கை கொடுப்போம்.. கைத்தொழில் ஒன்றை கற்று கொள்... அத்தை மடி மெத்தையடி...தண்ணி இல்லா காட்டில் இடியுடன் மழை... என் தம்பி... இது போன்ற சாதாரண அல்லது கவித்துவ வாக்கியங்களை படிக்கும்போது உங்களுக்கு என்னவெல்லாம் நினைவெல்லாம் நினைவுக்கு வருகிறது என்பதை வைத்து உங்கள் வாசிப்பு வரலாற்றை எடைபோட்டு கொள்ளலாம்
-----------------------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் ஏன் நோபல் பரிசை நிராகரித்து விட்டீர்கள்?
சார்த்தர் : அதைப் பற்றி பேசாதிருக்கவே விரும்புகிறேன்
ஏன்?
சார்த்தர் : எனக்கும் ஓர் அகாடமிக்கும்/பரிசுக்கும் இடையில் ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எனக்கு கிடைக்கக்கூடிய மகத்தான புகழ் நான் படிக்கப்படுவதே என கருதுகிறேன்.
சார்த்தரின் இந்த பேட்டி 1965ல் , நாம் அனைவரும் அறிந்த ஓர் ஆங்கிலப்பத்திரிக்கையில் வெளிவந்தது,..அந்த பத்திரிக்கையை ஒரு முறையேனும் நாம் பார்த்து இருப்போம்... எந்த பத்திர்க்கை என யூகியுங்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------
நீங்கள் ஏன் ஆன்மீக படங்களில் நடிப்பதில்லை ?
புரட்சித் தலைவர் : மது அருந்தாமை , திருடாமை , பிறன்மனை விழையாமை , தாயை மதித்தல் போன்றவற்றை ஆன்மிகம் வலியுறுத்துகிறது . என் படங்களும் இதைத்தான் சொல்கின்றன . எனவே என் எல்லா படங்களும் ஆன்மிக படங்களே ( பழைய புத்தகத்தில் படித்தது )
----------------------------------------------------------------------------------------
ஓர் ஆன்மீக குருவிடம் ஒருவன் போய் உருப்பட வழி கேட்டான். தம்பி... உனக்கு மன வைராக்கியம் அதிகம்னா , இஸ்லாமிய கொள்கையை கடைபிடி. அன்பு , சேவை மனப்பான்மைனா கிறிஸ்துவத்த ஃபாலோ பண்ணு// யோகா. தியானம் ,தத்துவ விசாரணைல ஆர்வம்னா ஹிந்து மதத்தை ஃபாலோ பண்ணு... தன்னம்பிக்கை அதிகம்னா நாத்திக வழிமுறைகளை கடைபிடி... தினமும் வாழைப்பழம் சாப்பிடு என்றார் குரு... இவன் கேட்டான்.. சாமி... வாழைப்பழம்னு சொன்னீங்களே... என்ன பழம்... மலை வாழையா...ரஸ்தாளியா.... எதுனு சொன்னா வசதி என்றான்.
அவர் சொன்னார் ,,,தம்பி...உனக்கு உருப்பட வழி இல்லை... நான் சொன்ன முக்கியமான மேட்டரை எல்லாம் விட்டுட்டு, நான் கேஷுவலா சொன்ன சாப்பிட்ற மேட்டரை மட்டும் ஆவலா கேக்குற, ரொம்ப கஷ்டம் என்றார்...
------------------------------------------------------------------------------------------------
பைக் சர்வீஸ் விட்டுவிட்டு பேருந்தில் ஏதேனும் படித்து கொண்டு போவது நன்றாகவே இருக்கிறது . கூட்டம் மட்டுமே பிரச்னை . அன்று பயங்கர கூட்டம் . ஆனால் சீட் கிடைத்து விட்டது . பக்கத்தில் நின்றுகொண்டிருந்த கிராமத்தானின் மேல் துண்டு முகம் மேல் அவ்வப்போது புரண்டு எரிச்சலூட்டியது . சொல்லிபார்த்தேன் . ஆனால் கூட்டத்தில் வேறு வழியில்லை . துண்டு டார்ச்சர் நரக வேதனையாக இருந்தது .ஒரு மணி நேர டார்ச்சருக்கு பின் இறங்கும் தறுவாயில் அந்த துண்டு மேல் காறி துப்ப கடைசியாக ஒருமுறை பார்த்தவன் திடுக்கிட்டேன். அது துண்டு அல்ல . அந்த நபர் அப்போதே இறங்கிவிட்டார் போல . அவ்வளவு நேரம் முகத்தில் விளையாடியது ஒரு அழகான நங்கையின் அம்சமான சல்வார் சால்வை . வாழ்க்கையின் ஒரு மணி நேரம் தேவையில்லாமல் வீணாகி விட்டது.

-----------------------------------------------------------------------
எனக்கும் குழந்தைகளை பிடிக்காது

ஒரு தந்தை தன் நான்கு வயது பையன் பொம்மை டிரையினை வைத்து விளையாடுவதை பக்கத்து அறையில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் . " ஸ்டேஷன் வந்துடுச்சுடா பே. பு* **களா , சீக்கிரம் இறங்குங்கடா பு* " என்று சொல்வதை கேட்டு திடுக்கிட்டார் . அவனை அழைத்து பேசினார் .
 மகனே இப்படியெல்லாம் பேச கூடாது என்றார் . 

அவன் மீண்டும் விளையாட போனான் . பயணிகளின் கனிவாக கவனத்துக்கு . நிலையம் வந்து விட்டது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம் . எங்கள் சேவையை பயன்படுத்தியது மனப்பூர்வமான நன்றி . தாமதம் குறித்து திட்ட விரும்பினால் பக்கத்து அறையில் இருந்து கவனித்து கொண்டுருக்கும் கே. பு *யை வாய்க்கு வந்தபடி அசிங்க அசிங்கமாக திட்டிக்கொள்ளுங்கள்
---------------------------------------------------------------------------
முன்பெல்லாம் சில உறவினர் வீட்டுக்கு போனால் , வரவேற்று விட்டு , கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருங்க என சொல்லி யாரையாவது விட்டு செல்வார்கள் . அதன்பின் கொஞ்ச நேரம் டிவி பார்த்துக்கிட்டு இருங்க , வந்துடுறேன் என சொல்லும் டிரண்ட் வந்தது . நேற்று ஒருவர் வீட்டுக்கு போனேன் . கொஞ்ச நேரம் பிரவுஸ் பண்ணிக்கிட்டு இருங்க . வந்துட்றேன் என சொல்லி கம்ப்யூட்டரை ஆன் செய்து , நெட் இணைப்பு கொடுத்து விட்டு போனார் .
----------------------------------------------------------------------------------------
மழை குளிர் காற்று... மேகம் சூழ்ந்து இருண்ட வானம்.. மழைவர ஆயத்தமான இனிய கணம்... காதலிப்பதை விட , காதலை சொல்வதற்கு முந்தைய கணம் இனிது..அதே போல மழையை விட , மழைக்கு முந்தைய கணம்தான் செம அனுபவம்...
----------------------------------------------------------------------------------
இது வரை செய்தது எனக்குள் இருப்பதில் இருந்து ஒரு மயிரிழையின் சிறுதுண்டு. அவ்வளவுதான். இனிமேல் சிலவற்றை செய்ய வேண்டும் . எனக்குள் இருப்பது அந்த அளவு. வெளிப்பட்டது மிக சிறிது - இளையராஜா பேட்டி, கதைசொல்லி -4,1998

இசை ஒரு மின்சாரம்போல எனக்குள் பாய்ந்து கொண்டே இருக்கிறது. எந்த இடத்தில் அது நிறுத்தப்படுகிறதோ அங்கே வெளிச்சம் தோன்றுகிறது- இசைராஜா
---------------------------------------------------------------------------
பயங்கரமான குளிர் ..குளிர் தாங்க முடியாமல் ஒரு குருவி பறக்க முடியாமல் தரையில் கிடந்தது,,..குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது,,, இந்த சோதனை போதாது என்று, அந்த பக்கமாக வந்த ஒரு மாடு அதன் மேல் சாணி போட்டு சென்று விட்டது... குருவிக்கு மூச்சு முட்டியது.. ஆனாலும் கொஞ்ச நேரத்தில் சாணியின் இளம் சூடு குளிருக்கு இதமாக இருக்கவே , சந்தோஷமாக பாட்டு பாட ஆரம்பித்தது,,,ஆனாலும் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டது... யாராவது காப்பாற்ற மாட்டார்களா என தவித்தது.. பாட்டு சத்தம் கேட்டு அந்த பக்கம் வந்த பூனை , குருவியை சாணியில் இருந்து விடுவித்தது.. குருவி நிம்மதி பெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் குருவியை சாப்பிட்டு விட்டு நடையை கட்டியது பூனை.
நீதி
1. உன் மேல் சாணி அடிப்பதன் மூலம் சிலர் உனக்கு மறைமுகமாக நன்மை செய்து விடுகிறார்கள்.
2. உனக்கு உதவுபவர்கள் எல்லோரும் , நல்லெண்ணத்தில் உதவுகிறார்கள் என சொல்லி விட முடியாது.
3. அதிர்ஷ்டம் ஏற்பட்டால் அதை வாயை மூடிக்கொண்டுஅனுபவி..தேவை இல்லாமல் வாயை திறக்காதே
---------------------------------------------------

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா