Sunday, November 16, 2014

எலி கதை ( மொண்ணை  சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )

முதலில் கத்தார் வெர்ஷன் - நிர்மல் பார்வையில்




என் வீட்டில் ஒரு எலி குடும்பம் சில நாட்களாக எங்களோடு கோ எக்ஸிஸ்ட் செய்கிறார்கள். நம்ம ஊர் வீடு என்றால் சந்து பொந்து என ஏதாச்சும் இருக்கு, இங்கு இருக்கிறதே மூனு அறைதான் இந்த குறுகிய இடத்தில் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி எலி குடும்பத்தினரை சந்திக்க வேண்டிதாகிவிடுவது வாடிக்கை ஆகிவிட்டது.


சொல்ல வந்த கதை இதல்ல, இந்த எலி குடும்பத்தின் கடை குட்டி வாரிசு ஒன்று ஒரு அட்டை பெட்டிக்குள் விழுந்துவிட்டது, ஆனால் அதனால் வெளியே செல்ல முடியவில்லை. மெதுவாக பெட்டியோடு எடுத்து வீட்டுக்கு வெளியில் விட்டுவிடுவதென திட்டம். திட்ட மேற்பார்வையாளர் என் மனைவி.

குட்டி எலி என்றாலும் மனசுக்குள்ள பயம் வந்துடிச்சி, லபக்கென நம்ம கையில் ஏறிவிட்டால், அப்படியே நம் மீது குதித்து விட்டால் என பல சிந்தனைகளில் இடையே பெட்டியை தூக்க சென்ற நான்.--- சரக்கென நிறுத்தி, போனை எடுத்து ஒரு பேட்டோ எடுக்க முனைந்தேன் எலி குட்டியை. ஃபேஸ்புக்கில் போடலாம்ல என்றேன்...

வித் கோல்டன் ரேஷியோ இன் மைண்ட், எலி குட்டியை ஃப்ரெம் செய்து போகஸ் செய்து கொண்டிருந்தேன். பல கோணங்களை முயற்சி செய்து ஒரு கட்டத்தில் போதும் இந்த எலிக் குட்டிக்கு என க்ளிக் செய்ய விரலை எடுத்து பட்டனை அமுக்கும் பொழுது.

எனது போன் அதிர ஆரம்பித்துவிட, ஏற்கனவே அதிர்வால் நிறைந்த என மனசு இந்த அதிர்வால் பீதியூற்று படபடத்து போன் கை நழுவி அட்டை பெட்டியின் விளிம்பில் மோதி பெட்டி ஒரு பக்கமா சாய, எலிக் குட்டி என் போனை தாண்டி துள்ளி அருகில் இருந்த மறைவில் சென்று மறைந்தது.

போன் அதிர்ந்த காரணம், மெசேஜ் வந்தால் அதிர்வு சமிக்சை தர வேண்டும் என நான் என் போனின் செயல்பாட்டை அமைத்திருந்தால்.

மெசேஜ் அனுப்பியது பிச்சை.

அனுப்பிய மெசேஜ் - ஹாய் ஆர் யூ ஃபிரி?

எப்படி, உன்னை போலவே உன் ஃப்ரெண்ட்சும் மொண்ணைகளாகவே இருக்கிறார்கள் என செம பழைய டையலாக்கை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் மனைவி.

நன்றி பிச்சை, உங்க சேவை தொடரட்டும்.......


**********************************************

சென்னை வெர்ஷன் - பிச்சை

எனக்கு பரிசாக வந்த மோதிரம் ஒன்று தொலைந்து போனதில் எனக்கு ரொம்ப வருத்தம். காசு மட்டும் சம்பந்தப்பட்ட்து அல்ல.. பல நினைவுகளும் சார்ந்த்து என்பதால் ஒரு ஃபீல் . அந்த பரிசை தந்தவரை ஃபீல் செய்யாமல் இழந்து விட்டு , பரிசுக்கு ஃபீல் செய்வது ஒரு பாரடக்ஸ் என நீங்கள் நினைப்பீர்கள். அது உண்மைதான். நல்ல மழை. வெளியே போக முடியாது. மின்சாரம் இல்லை. இந்த சூழலில் மோதிரம் இல்லாவிட்டால் , ஃபீல் ஆகி அமர்வதுதானே லாஜிக்கலாக கரக்டாக இருக்க்கூடிய செயல் ( மாரல்லி , பொலிடிக்கல்லி கரக்ட்டா என்பது இங்கு தேவை இல்லை ) . யாரிடமாவது மொக்கை போட்டால் ஆறுதலாக இருக்குமே என நிர்மலுக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆர் யூ ஃப்ரீ ? இப்படி அனுப்புவதே ஒரு பாரடக்ஸ். அவர் பிசியாக இருந்தால் , ரிப்ளை மாட்டார். எனவே அந்த மெசேஜுக்கு அர்த்தம் இல்லை. ஆனாலும் அனுப்பினேன். நாம் விதைப்பதைத்தான் அறுக்கிறோம் என்ற மசால்வடைக்கு ஏற்ப- மன்னிக்கவும் – சொலவடைக்கு இணங்க சரவணனிடம் இருந்து ஒரு மெசேஜ். ஆர் யூ ஃப்ரீ ?


இந்த நேரத்தில் இவன் என ஜெயகாந்தன் டைட்டில் போல ஜெர்க் ஆனேன். சாதாரணமாக பேசினால்கூட , ஸ்டீவன் ஹாக்கின்ஸ் , ஐன்ஸ்டீன் என குழப்பக்கூடியவர் அவர். ஆனாலும் பெரிய சோதனை வந்தால் , சின்ன சோதனை மறந்து விடும் என்ற லாஜிக் படி ஐ ஆம் ஆல்வேஸ் ஃப்ரீ என மெசேஜ் அனுப்பினேன். அவர் என்னைவிட ஃப்ரீ போல. உடனே போன் போட்டார். மோதிரம் தொலைந்த்தை சொன்னேன். உடனே ஆரம்பித்துவிட்டார்.

 ஃப்யூச்சர்ல இப்படி தேட வேண்டியதே இருக்காது. உண்மையில் எதுவும் நம்மை விட்டு போறது இல்லை. வேற பரிமாணத்துக்கு நகருது . அவ்வளவுதான். உங்க பக்கத்துலயேதான் அமெரிக்கா , ரஷ்யா , ஐஸ்லாந்து , அஜர்பைஜான் என எல்லாம் இருக்கு. உங்களால உணர முடியல அவ்வளவுதான். முன்று பரிமாணத்தை வச்சு ஒண்ணும் பண்ண முடியாது. என்றார். அப்ப நிர்மல் என் பக்கத்துலதான் இருக்காரா. என்றேன். ஆமா , என்ன ஒண்ணு உங்களால பார்க்க முடியல.. மோதிரமும் பக்கத்திலதான் இருக்கு… என்றார். அப்ப்போது ஒரு எலி துள்ளிக்குதிக்க , பீரோவில் ( பீரோ உள்ளே அல்ல.. பீரோ மேல் ) வைத்திருந்த மோதிரம் விழுந்த்து,.. வாவ் என மகிழ்ந்தேன். பிறகு நிர்மல் லைனுக்கு வந்தார். எலியால் அவர் சந்திந்த இன்சல்ட்டை சொன்னார். அவர் வீட்டில் எலி குதித்த அதே நேரத்தில் என் வீட்டிலும் எலி குதித்த்தே.. இதுதான் வொர்ம் ஹோலா.. அல்லது வெவ்வெறு எலிகளா? அல்லது சரவணன் சொல்வது போல வேறு பரிமாணத்தில் அதே எலி இங்கும் இருக்கா . அந்த எலியை தேடினேன்.கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா