Wednesday, November 19, 2014

எம் ஜி ஆரை கோபப்படுத்திய வாலி - கலவை பதிவுகள்


நான் என்பது என் மூளைதான் .மற்ற அவயங்கள் எல்லாம் அதற்கான உபகரணங்கள் மட்டுமே _ ஷெர்லக் ஹோம்ஸ்

_________________________________


கொஞ்சம் கூட பிசிறு தட்டாத , ஒரு எழுத்து கூட அதிகமாக போய்விடாத , கச்சிதமான மறக்க முடியாத நாவல் எ.பெ.ராமசேஷன்

_________________________________

ராம்சேஷன் . கர்நாடகமான ஒரு பெயர் . என் அப்பா மேல கோபம் ஏற்படுத்திய பலகாரணங்கில் இதுவும் ஒன்று - wat a start !

_________________________________________

பெரியவன் ஆன பின் யாருக்கு என்னவாங்கி கொடுப்பேன் என மாமிகளிடம் சொன்னேன் . அம்மாவுக்கு கட்டில் என்றேன் . கட்டில்தான் உங்காத்துல இருக்கேடா என்றார்கள் . அதில் அப்பாவும் படுக்கிறாரே என்றேன் . ஒரே சிரிப்பு

________________________________

வகுப்பு நீண்டு கொண்டே இருந்தது. இரண்டாவது வகுப்பு , மத்யானம் நிழலைபோல இன்னும் சற்று நீண்டிருப்பது போல இருந்தது - தி.ஜா வர்ணனை , மலர் மஞ்சம் நாவலில்

________________________________

புத்தகம் ஒன்றை தலை முழுக நினைத்தேன்..வீட்டு வாசலில் தூக்கி எறிந்தேன். “ தம்பி, உங்க புக் வெளில கிடந்துச்சு “ பக்கத்து வீட்டு பெரியவர் கொண்டு வந்து கொடுத்தார். குப்பை தொட்டியில் போட்டேன் “ சார் , மறதியா புத்தகத்தை குப்பைல போட்டுட்டீங்க” கொண்டு வந்து கொடுத்தார் மா நகராட்சி ஊழியர் . பூங்காவில் விட்டு வந்தேன். அடுத்த நாள் பொறுப்பாக என்னிடம் சேர்க்கப்பட்டது. நண்பர் ஒருவருக்கு இரவல் கொடுத்தேன். அதன் பின் அந்த புத்தகத்தையோ நண்பரையோ கண்ணிலேயே பார்க்க முடியவில்லை

_______________________________________________

வேலையில் தோல்வி, காதலில் தோல்வி. தற்கொலைக்கு முயன்றான். அதிலும் தோல்வி

_______________________________________


A Day To Remember - நிர்மல்


ஐந்து வருடம் இணையம் வழியாக தொடர்பில் இருந்தும் நேற்றுதான் சந்திக்க முடிந்தது. வெகு எளிமையான தோற்றம், ஆனால் ஒரு பரபரப்பு கலந்த பேச்சும், பேசும் முன்னும் மற்றவர்கள் பேசும் பொழுதும் மிக உண்ணிப்பாக கவனிப்பும் சிந்தனையையும் கொண்ட நண்பர் பிச்சைக்காரன்.


சாருவின் வாசகர்களிடம் பழகுவதில் எனக்கு இதுவரை எந்த தடங்கலும் இருந்ததில்லை பார்த்தவுடன் அனேக நாட்க்கள் பழகியது போல நேசத்தோடு கலந்துகொள்ள் முடியும். இதன் முன்பும் இப்படியான அனுபவங்கள்தான். அதே உணர்வு பிச்சையை பார்க்கும் பொழுதும். அவரும் என்னை உடுருவி சோதிக்கவில்லை நானும் அப்படியே. இது நான் சாருவிடம் கண்ட ஒரு குணம். He never study you , he will realise you. அது அவரது வாசகர்கள் எல்லோரிடமும் இருப்பது அசர வைக்கும் உண்மை. நம்மை ஸ்டடி செய்வது உடனே தெரிந்துவிடும், அது இதுவரை சாரு வாசக வட்ட நன்பர்களிடம் ஏற்ப்பட்டதுடில்லை. ஆனந்தின் சந்திப்பிலும் அப்படியே. எந்த வித ஐஸ் ப்ரேகிங்கும் தேவையில்லை எடுத்தவுடன் டிஸ்கவரி புக் பேலஸ். புத்தகங்களை அறிமுகபடுத்தி கொண்டே இருந்தார் அதே சமையம் எனது வெளியை எடுத்துக்கொள்ளாது ஒரு பெர்பெக்ட் கான்வர்சேசன் ஆரம்பித்தது. இதுவே வாசக பண்பு என கருதுகிறேன்


டிஸ்கவரி புக் பேலஸ் வெடியப்ப்னை சந்தித்து உரையாடினோம். எதார்த்தமாக பேசினார், உற்ச்சாகமாகவும் கூட. அங்கு ஒரு தனி தமிழ் தேசிய இயக்க எழுத்தாளரை சந்தித்து உரையாடினோம். ஈழத்தை பற்றிய எனது மாற்று கருத்தை அவரோடு சிறிது பகிர்ந்து கொண்டேன். வெடியப்பனின் புதிய முயற்ச்சிக்களுக்கு பாராட்டை தெரிவித்துக்கொண்டு பிச்சையின் பைக்கில் சென்னையின் முரட்டுத்தனமான வாகன நெரிசலை சமாளித்து ஒரு அட்டகாசமான மதிய உணவை அளித்தார். அதை பற்றிய பதிவு தனியாக எழுத வேண்டியது. ராஜ சாப்பாடு.


அடுத்து ஸ்பென்சர் அங்கு லேண்ட் மார்க்கில் அற்ப்புத சூழல், ஆள்கள் மிக குறைவாக மிக அருமையான சூழலில் புத்தகங்களை மேய்ந்தோம், அங்கு எதிர்பாரா விதமாக இரு நபர்களை சந்தித்தோம் ஒருவர் இத்தாலியில் கிறுஸ்துவ பாதிரியாராக இருப்பவர் மற்றவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். இரு ரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் அவர்களிடம் மிக சிறப்பான உரையாடலை நடத்தினோம் . ஒரு உரையாடல் இனிமையாக அமைவதில் இரு தரப்பினருக்கும் சம பங்கு உண்டு அதை அங்கு கண்டு . நாங்கள் சந்தித்த இரு நபர்களும் அவர்களது துறையில் சிறந்தவர்கள், ஆனாலும் மிக மரியாதையாகவும்அதே சமையம் இனிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைந்தது அந்த சந்திப்புகள். முன்று வித்தியாசமான நபர்களின் சந்திப்பு, பிச்சையின் ஆழமான வாசிப்பு அனுபவங்களின் பகிர்வு மற்றும் சுவையான தேனிரோடு சந்திப்பு நிறைவு பெற்றது. சிலர் சொல்லுவர் பிரிவு சோகம் என, இன்னும் சிறிது நேரம் இருந்தால் நேரம் இருந்தால் நன்றாக இருக்குமென ஒரு புறம் நினைத்தாலும் பிரிவின் போது மிகவும் உற்ச்சாகமாக இருந்தது. ஏதோ சாதித்தது போல ஒரு கொண்டாட்ட மனநிலையோடு விடைபெற்றோம்.

________________________________________________________________

குழந்தை பருவத்தில் தந்தை ஹீரோ . இருபது முதல் ஐம்பது வரை வில்லன் . அவரை மீண்டும் ஹீரோவாக நினைக்க ஆரம்பிக்கிறோம் என்றால் நம்மை வில்லனாக கருதும் அடுத்ததலைமுறை வளர்ந்துவிட்டது என்று அறிக

___________________________________

உன் தந்தை என்னவாக இருந்தார் என்பதைவிட உன் மனதில் என்னவாக இருக்கிறார் என்பதே முக்கியம்

_______________________________________

எத்தனையோ மரணங்களை பார்த்தாலும் ஒவ்வொரு மரணமும் கண்ணீர் சிந்த வைப்பது போலவே உறவு முறிதலிலும் நிகழ்கிறது


________________________________________________


ஆரம்ப கால எழுத்துசித்தர்


ஃஃஃவிடலைகள்ஃஃஃ




துள்ளித் துவண்டு

தென்றல் கடக்க

விசில் அடித்தன
மூங்கில் மரங்கள்
-பாலகுமாரன்

_______________________________________________________


உன் பிரிவில் நிகழ்வது

துயரமல்ல

எதிர்பாராத

ஒரு வெளி





சற்று முன்

காலி செய்யப்பட்ட

ஒரு வீடு போல


-மனுஷ்ய புத்திரன்


__________________________________________

தமிழுக்கு விடியல் பதிப்பகம் அளித்த கொடை என மால்கம் எக்ஸ் வாழ்க்கை வரலாற்றை சொல்லலாம் .


உன் கொள்கைகளுக்காக உயிரையும் கொடுக்கும் மன உறுதி உன்னிடம் இல்லையா? அப்படி என்றால் உன் அகராதியில் விடுதலை என்ற சொல்லை எடுத்து விடு ‪#‎மால்கம்எக்ஸ்‬




சில நேரங்களில் துப்பாக்கியை மவுனவிக்க செய்வதற்காக துப்பாக்கியை எடுக்க வேண்டியிருக்கிறது#மால்கம்எக்ஸ்


அடிமைத்தளையில் இருந்து விடுபட ஒரே வழி , உலகெங்கும் இருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுடன் நம்மை அடையாளப்படுத்திக்கொள்வதே#மால்கம்எக்ஸ்


சோகம் அழுகையை உருவாக்குகிறது . கோபம் மாற்றத்தை உருவாக்குகிறது ‪#‎மால்கம்எக்ஸ்‬




சுதந்திரம் , சமத்துவம் , சமநீதியை உனக்கு எந்த நாயும் கொடுக்காது . மனிதனாக இருப்பின் நீயேதான் அவற்றை எடுத்து கொள்ள வேண்டும் - மால்கம் எக்ஸ்

உன் மேல் ஒருவன் கை வைத்தால் , இனி யார் மேலும் அவன் கைவைக்க முடியாதபடி செய்வது உன் கடமை ‪#‎மால்கம்எக்ஸ்‬ராக்ஸ்


அன்பானவனாக , அக்கறையுள்ளவனாக , சட்டத்தை மதிப்பவனாக இரு . ஆனால் உன் இனத்தின்மேல் கைவைப்பவனை கல்லறைக்கு அனுப்ப தயங்காதே -மால்கம் எக்ஸ்

____________________________________

மதியம் நன்றாக ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டதும் லேசாக தூக்கம் வருவது போல இருக்கும். அதை இயல்பு என நினைக்கிறோம்.. ஆனால் இயற்கை உணவை உட்கொண்டால் இப்படி தூக்கம் வருவதில்லை. மாறாக சாப்பிட்டு முடித்ததுமே எனர்ஜடிக்காக ஃபீல் செய்ய முடிகிறது

________________________________________

அசோகமித்திரனின் சார் சார் சிறுகதையை படிக்க ஒரு நிமிடம்கூட ஆகவில்லை . மறக்க எவ்வளவு நேரம் ஆகும் என தெரியவில்லை . இனிய காலை

___________________________________________

நாட்டில் இருக்கும் முக்கியமானவர்கள் அனைவருக்கும் எங்கள் பத்திரிக்கை போகிறது என்றேன்

என்ன சர்குலேஷன்

சொன்னேன்

நாட்டில் முக்கியமானவர்கள் எண்ணிக்கை சிறுது குறைவாத்தான் இருந்தது

‪#‎அசோகமித்திரன்‬ ராக்ஸ்

____________________________________________


உன் பேரு என்னய்யா ?

அடைக்கல சாமி

கடன அடைச்சுட்டியா ?

அடைக்கல சாமி


உன் பேரு என்னய்யா ?

மாட சாமி

என்னய்யா தேடிக்கிட்டி இருக்க ?

மாட சாமி


_________________________________________


ஜின்னா பிரிவினையை ஒருபோதும் விரும்பவில்லை -ஆயிஷா ஜலால் , சதத் ஹசன் மண்டோவின் பேத்தி

______________________________________________




ஓர் உலோகத்தை இன்னொரு உலோகத்துடன் இணைப்பது கஷ்டம் . ஆனால் நம் ஆட்கள் மரத்தையும் இரும்பையுமேகூட வலுவாக இணைக்க வல்லவர்கள் . சாதாரணமாக தீ மூட்டி சூடாக்கி பின் குளிரச்செய்வதால் ஏற்படும் விரிதல் சுருங்கல் எஃபக்ட்டை சாமர்த்தியமாக பயன்படுத்தும் கிராமத்து விஞ்ஞானிகள் ஆச்சர்யத்துக்கு உரியவர்கள் .ஹீட் ட்ரீட்மெண்ட் , வார்ப்பு , கோட்டிங் என தொழில் நுட்ப மற்றும் கணித அறிவில் தமிழன் ஒரு காலத்தில் கலக்கியிருக்கிறான்

_____________________________________________________________________


எம் ஜி ஆர் அரசனின் ஆணையை மீறுவதாக காட்சி . வாலி பாடல் எழுதினார் . ஆண்டவன் கட்டளைக்கு முன் , உன் அரச கட்டளை என்னாகும் ? பாடலை கேட்டு எம்ஜிஆர் வாலியை கோபமாக கூப்பிட்டனுப்பினார் . காரணம் ? ஆண்டவன் கட்டளை சிவாஜி படம் , அரச கட்டளை எம்ஜிஆர் படம் அதன் பின் நடந்ததை வாலி புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்


****************************


எம் ஜி ஆருக்கு வாலி ஒரு பாடல் எழுதினார்...


நான் அரசன் என்றால் , என் ஆட்சி என்றால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்.


கேட்ட எம் ஜி ஆரே திகைத்து விட்டாராம்... அப்போது அவர் நடிகர் மட்டுமே... கடைசியில் நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என மாற்றினார்களாம்


********************************


குரங்கின் வாலில்

தீ வைத்தானே..

அது எரித்தது

அவன் தீவைத்தானே


வாலி வாலி வாலி.....


*****************************************


நிஜம் சொன்னால் ரஜினியைவிட நீயொரு வசீகரமான ஃபிகர். நாவினிக்க உன்னைப் பாடியே என் உடம்பில் ஏறிப்போனது ஷுகர்

-கருணாநிதி பற்றி வாலி


அன்று உயர்ந்த மனிதனாக சிவாஜி...இன்று சிவாஜியாக உயர்ந்த மனிதன் - ரஜினி குறித்து வாலி


*******************************


காலையில் தினமும்

கண் விழித்தால் நான்

கைதொழும் தெய்வம் அம்மா!’

- ‘நியூ’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை யில் நான் எழுதிய பாட்டு. ஒலிப்பதிவு எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் -

“வாலி சார்! எங்க மதத்துல, தெய்வத்தையும் தாயையும் ஒண்ணா சொல்லக் கூடாதும்பாங்க… ‘தெய்வம்’கிற வார்த்தைக்குப் பதிலா ஏதாவது சொல்லுங்க சார்!” என்று ரஹ்மானிடமிருந்து ஃபோன் வந்தது.
“ய்யோவ்! என்னய்யா நீ… இதெல்லாம் ஒரு தவறா எடுத்துண்டு… சரி… சரி… தெய்வம்கிறதுக்குப் பதிலா ‘தேவதை’ன்னு வெச்சுக்கோ!” என்று மாற்றிக் கொடுத்தேன்.- வாலி


************************


எம் ஜி ஆர் உடல் நலமின்றி இருந்தபோது , வாலி ஒளிவிளக்கு படத்தில் எழுதிய ஒரு பாடலைத்தான் பலரும் ஒலிக்கச்செய்து பிரார்த்தித்து வந்தனர்... அந்த பாடல்


இறைவா உன் மாளிகையில்

எத்தனையோ மணி விளக்கு

தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு


அதன் பின் எம் ஜி ஆர் குணமானார்.. ஜானகி அம்மையார் இந்த பாடலால்தான் எம் ஜி ஆர் பிழைத்தார் என சற்று உணர்ச்சிவசப்பட்டு உயர்வு நவிற்சியாக சொன்னாராம்..


அதற்கு வலி சொன்னாராம் , “ அம்மா..இது வாலி பாக்கியம் அல்ல...உங்கள் தாலி பாக்கியம் “










__________________________________________________

2 comments:

  1. Hello Brother,
    What is the name of the book about vallee sir?
    Who is the publisher and where we can buy the book in chennai?

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த நூற்றாண்டும் என்ற புத்தகம் - வாலி எழுதியது

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா