Friday, November 21, 2014

தனுஷ் யார் மாதிரியும் இல்லாத தனித்துவ நடிகர்- ஹிந்தி இயக்குனர் புகழாரம்

பா , சீனி கம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் பால்கி இப்போது அமிதாப் , தனுஷ் நடிப்பில் ஷமிதாப் எனும் படத்தை இயக்கி வருகிறார். அவருடன் பேட்டி

__________________________________

இந்த படம் எப்படி நிகழ்ந்தது?

 அமிதாப் பச்சனின் 69ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல காரில் பயணித்துக்கொண்டு இருந்தேன் . பயங்கர டிராபிக்.. கார் நகரவில்லை. அவருக்கு என்ன பரிசு அளிப்பது என யோசிக்கலானேன். வைன் அளிக்கலாமா என்றால் அவர் மது அருந்த மாட்டார். பூங்கொத்து சரிப்படாது.. என்ன செய்வது என யோசிக்கும்முன் அவர் வீடு வந்து விட்டது. அப்போதுதான் இந்த படத்தின் கதையை அவருக்கு சொன்னேன். அவருக்கும் பிடித்துப்போய் நடிக்க ஒத்துக்கொண்டார். அந்த கதையே அவர் பிறந்த நாள் பரிசாக அமைந்து விட்டது. அப்போது வேறு யாரெல்லாம் நடிப்பது என தீர்மானித்து இருக்கவில்லை

இந்த படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத , காது கேளாத கேரக்டரில் நடிக்கிறாராமே?

நான் சொல்லும்வரை இது போன்ற செய்திகளை நம்பாதீர்கள். நான் தனுஷின் பெரிய ரசிகன் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிகொள்கிறேன். காதல் கொண்டேன் படத்தில் இருந்தே அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். யார் மாதிரியும் இல்லாத , தனித்துவமான நடிகர் அவர். படம் பார்த்தபின் , அவரை ஏன் தேர்ந்தெடுத்தேன் என உங்களுக்கு புரியும். படம் எடுப்பது என்பது கடினமான வேலை. சுவையான கருவோ , கதாபாத்திரமோ அமையாமல் படத்தை ஆரம்பிக்க மாட்டேன்.

படத்தை பற்றி ஏதாவது பேசி விளம்பரப்படுத்துவதுதானே பாலிவுட் ஸ்டைல்? நீங்களோ எதுவும் சொல்ல மறுக்கிறீர்களே?

தியேட்டர் செல்லும் ரசிகனுக்கு படம் ஆச்சர்யம் அளிக்க வேண்டும். இப்போதே எல்லாம் சொல்லிவிட்டால் ஆச்சர்யம் என்ன இருக்கப்போகிறது? படத்தின் சுவாரஸ்யத்தன்மைதான் ரசிகனை ஈர்க்க வேண்டும் , விளம்பரம் அன்று. யாரையும் வற்புறுத்தி படம் பார்க்க வைக்கக்கூடாது.

கமலின் மகள் என்பதால் அவர் பெயரை காப்பாற்ற வேண்டுமே என அக்‌ஷரா பதட்டமாக இருந்தாரா?

 நான் பார்த்தவர்களிலேயே அமைதியான நடிகர் என்றால் அவர் அக்‌ஷராதான். 150 படம் நடித்து முடித்தவர் போல அமைதியாக காணப்பட்டார். துளியும் பதட்டம் இல்லை. அவர் அம்மா சரிகா சில நாட்கள் துணைக்கு வந்தார். அக்‌ஷராவின் துணிச்சலைப்பார்த்து இனி தான் வர வேண்டியதில்லை என தீர்மானித்து விட்டார்.  இந்த படத்தில் மூன்று கதாநாயகன்கள். அவர்களில் அக்‌ஷராவும் ஒருவர்

இளையராஜாவுடன் உங்கள் உறவு குறித்து ?

அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். அவர் விரும்பும்வரை , அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். என் படங்களில் பின்னணி இசைக்கு முக்கிய இடம் இருக்கும்.  அந்த வகையில் என் படத்துக்கு ஒரு அர்த்தத்தை அளிக்கிறது அவர் இசை..

தனுஷ் , இளையராஜா, பிசி ஸ்ரீராம் , அபினயா என ஏராளமான தமிழர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள்.. இது தமிழர்கள் பற்றிய படமா?

இல்லை.. இது ஹிந்தி படம். தமிழர்கள் பணியாற்றுகிறார்கள்.. அவ்வளவுதான்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா