Sunday, November 16, 2014

வாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட்

தமிழ் இலக்கணத்தில் ஒற்று மிகும் இடங்களை ஒழுங்காக கற்க வேண்டும் .புள்ளி வைத்த எழுத்தில் தவறு செய்தால் அர்த்தம் மாறிவிடும் . புலி கொன்ற யானை , புலிக் கொன்ற யானை இரண்டும் வெவ்வேறு அர்த்தங்கள் . குடிசை தொழில் வேறு குடிசைத் தொழில் வேறு
------------------------------------------------------------------------
சின்ன வீடு என்பது விகாரப் புணர்ச்சியா என சிலர் கேட்கிறார்கள் . இல்லை , சின்ன வீடு என்பது இயல்புதான் . சின்ன பிளஸ் வீடு சின்னவீடு . இதில் எந்த எழுத்தும் மாறவில்லை அல்லவா . எனவே இது இயல்பு புணர்ச்சி .
--------------------------------------------------------------------------------
சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து நான் வாழ வைப்பேன் என்ற படம் வெளிவந்தது . அதில் அப்போது புதிய நடிகராக இருந்த ரஜினி சிறிய ஆனால் பவர்ஃபுல் கேரக்டர் செய்திருப்பார் . படம் பார்த்த சிவாஜி தனக்கு அந்த கேரக்டர் கொடுத்திருக்கலாமே என ஆதங்கப்பட்டாராம் . கடைசியில் , ரஜினி வளரும் நடிகன் . நல்லா வந்தா சரிதான் என பெருந்தன்மையாக சொல்லி விட்டாராம் . பிற்காலத்தில் அதை சிவாஜிக்கு உரிய மரியாதை கொடுத்து படையப்பாவில் நடிக்க வைத்திருப்பார் ரஜினி .
-----------------------------------------------------------------------------------------
அந்த கால தலைவன்என் தலைவன் போருக்கு முன் விருந்து கொடுப்பான் . சுவை குறைவான கள்ளின் மேற்பகுதியை தான் பருகிவிட்டு சுவைமிக்க கீழ்பகுதியை எங்களுக்கு தருவான் . ம் .புறப்படுங்கள் என ஆணையிடமாட்டான் . அவன் முதல் ஆளாக கிளம்புவான் . நாங்கள் பின் தொடர்வோம் 
புறநானூற்று பாடல்
---------------------------------------------------------------------------------
ஒரு சொல் பல பொருள் என்ற தன்மை தமிழின் சிறப்பு .இதை பயன்படுத்தி சிலர் டபுள் மீனிங்க்கில் பேசுவது வேறு விஷயம் . ஒரு சொல் ஒரு பொருளை மட்டுமே தர வேண்டும் என பாடுபட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்தான் . இதன் காரணமாக சட்ட விஷயங்களுக்கு பொருத்தமான மொழி பிரெஞ்சுதான் என்ற புகழ் முன்பு இருந்தது . கஷ்டப்பட்டுதான் இதன் செல்வாக்கை ஒடுக்கினார்கள்
---------------------------------------------------------------------------

டிரெய்னில் ஏறுவதற்கு முன் சார்ட்டை ஆர்வமாக கவனிப்பது என் இயல்பு . கோகிலாம்பாள் ,54 என பக்கத்து சீட்டை பார்த்து சற்று வருத்தமாகவே இருந்தது . ஆனாலும் மழை இன்மை , வெயில் என பேசியபடி வந்தேன் . சாப்பாடு நேரம் வந்ததும் அவர் எனக்கு ஒரு லெமன் ரைஸ் பாக்கெட் கொடுத்தார் . சைட் டிஷ் சூப்பர் . கத்திரிக்காய் முருங்கைக்காய் காம்பினேஷன் சூப்பர் . உன் துக்கம் சந்தோஷமாக மாறும் என கர்த்தர் சொன்னதை நினைத்துக் கொண்டேன்
-----------------------------------------------------------------------------------------
தேங்காய் புணர்ச்சி என்றால் என்ன ? இது சற்று வித்தியாசமான புணர்ச்சி என்பதால் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது . நீளுதல் , உயிரும் உடலும் அழிந்து ஒன்றாதல் என இரு அம்சங்கள் உள்ளன . காய் இருந்தால்தான் இந்த விதி செல்லும் என்கிறது நன்னூல் . தெங்கு நீண்டு உயிர்மெய் கெடும் ,காய்வரின் . அதாவது தெங்கு பிளஸ் காய் . காய் வருவதால் தெங்கு என்பது தேங்கு என நீள்கிறது . கு என்ற உயிர்மெய் கெடுகிறது அதாவது அழிகிறது . தேங் பிளஸ் காய் . தேங்காய் .
----------------------------------------------------------------------------
வாழைப்பழம் என்றால் விகாரப் புணர்ச்சியா இயல்பு புணர்ச்சியா என சிலர் கேட்கிறார்கள்... கேள்வியிலேயே பதில் உள்ளது... இயல்பு என்ற வார்த்தையும் புணர்ச்சி என்ற வார்த்தையும் எந்த மாறுபாடும் இல்லாமல் சேர்வது இயல்பு புணர்ச்சி.. விகாரம் என்பதும் புணர்ச்சி என்பதும் இப்படி சேரும்போது விகாரம் என்பது விகாரப் என மாறிய பின்புதான் சேர்ந்து , விகாரப்புணர்ச்சி என மாறுகிறது... இயல்பு புணர்ச்சி , விகாரப்புணர்ச்சி என்ற வார்த்தைகளிலேயே அதற்கான இலக்கணம் இருக்கிறது.. வாழை மரம் என்பது இயல்பு புணர்ச்சி.. வாழைப்பழம் என்பது விகாரப் புணர்ச்சி
------------------------------------------------------------------------
பெரிய ஆலயங்களில் ஓர் மூலையில் ஒரு மரம் இருக்கும் . ஸ்தல விருட்சம் என்று பெயர் . சிறு தெய்வங்கள் பெரிய பெரிய மரங்களுக்கிடையில் ஓர் ஓரமாக இருக்கும் . தமிழனின் வழிபாடு இப்படி இயற்கை சார்ந்து இருந்தது . நான் பெரியாரின் பேரன் என்றாலும் தமிழ் கடவுள் முருகனை வழிபடுபவன் -அறிவுமதி
------------------------------------------------------------------------------------
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத் திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
-கல்யாண்ஜி
----------------------------------------------------------------------------------------
ஓர் உலோகத்துக்கும் இன்னொர் உலோகத்துக்கும் புரோட்டான்கள் எண்ணிக்கை மட்டுமே வித்தியாசம் . இதை மாற்றுவது அந்த காலத்தில் எளிதான தொழிலநுட்பமாக உள்ளது . சர்வசாதாரணமாக இதை குறிப்பிடுகிறார்கள் . உலோகத்தை மாற்ற க்ரியாஊக்கி தேவைப்படுவதுபோல , மனிதனை மாற்ற குருவருள் தேவை என்கிறார் ஆதிசங்கரர்
------------------------------------------------------------------------
வழவழப்பான தாளில் இருந்த ஆங்கில கில்மா புத்தகத்தை கைமாத்தாக காசு வாங்கி , அந்த காசில் வாங்கினேன் . ஆனால் டிக்ஸ்னரியை பார்த்து படிப்பதற்குள் சுருண்டு சுருங்கி போய் விட்டது மனது . காசு வேஸ்ட் . ஆனால் பூனை , சேவல் போன்றவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளை அப்படித்தான் கற்றேன்

---------------------------------------------------------------------
ஆடி மாதத்தில் இருந்து நிழல் மாதங்கள் தொடங்குகிறது . நாம் சூரியனைவிட்டு விலகி இருப்போம் . தை மாதத்தில் இருந்து ஒளி மாதங்கள் தொடங்குகிறது . அந்த காலத்தில் இந்த இணைப்பு மாதங்களை கொண்டாடினாலும் ஆடியை விட தையை கூடுதலாக கொண்டாடினார்கள் . வெயிலை வரவேற்றார்கள் . குளிர்பான , ஏசி நிறுவனங்கள் புண்ணியத்தில் வெயிலை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விட்டோம்
---------------------------------------------------------------------------------------
டிரெய்னில் யாரென்றே தெரியாதவர்களிடம் உடமைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியே போவோம் . பெரும்பாலும் ஏமாற்ற மாட்டார்கள் . நம்பிக்கைவைப்பது என்பது இயல்பான தன்மை என இப்படி விளக்குகிறார் ஓஷோ . ஆனால் அறிவு ஜீவிகள் நம்பிக்கை வைப்பதை பலவீனமாக நினைக்கிறார்கள் . ஆன்மிக பாதையில் உலகியல் அறிவுக்கு வேலையில்லை என்கிறார் ஓஷோ
----------------------------------------------------------------------
வயிற்று பசிதீர்க்க
வராதா என்று ஏங்கி
மழைக்கு அண்ணாந்து
பார்த்த கண்கள் கண்டுகொண்டன
வானம் எல்லை இல்லாதது
-பிரமிள்

-------------------------------------------------------------------------
மகாபாரதத்தில் ஒரு சுவையான காட்சி  . துரியொதனன் மேல் போர் தொடுப்பதா வேண்டாமா என பாண்டவர்களிடையே விவாதம் . கிருஷ்ணர் நடுவர் . போரை மூவர் ஆதரிக்கின்றனர் . சமாதான தூதை இருவர் ஆதரிக்கின்றனர் . பெரும்பானமை ஆதரவு போருக்கு . சபாநாயர் பெரும்பாலும் வாக்களிக்க மாட்டார் . ஆனால் சிக்கலான நேரங்களில் வாக்களிப்பார் அல்லவா . அது போல கிருஷ்ணரும் சமாதானத்துக்கு ஆதரவாக வாக்களித்து போர் என்ற தீர்மானம் வெற்றி பெறாமல் தடுக்கிறார் . லிங்கன் படத்தில் இப்படி ஒரு காட்சி வருமே ? நினைவிருக்கா
______________________________________________________________
கீழ்கண்டவர்களில் நீங்கள் யார் ?
1 கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன்
2கடவுள் இல்லை என நம்புகிறேன்
3கடவுள் இருக்கிறார் , ஆனால் வழிபாடுமுறைக்ள் தவறு என நம்புகிறேன்
4கடவுள் இருக்கிறாரா இல்லையா என தெரியாது . தெரிந்து கொள்ள விழைகிறேன்
5 கடவுள் கவலை எனக்கில்லை . இருந்தாலும் ஓகே. இல்லாவிட்டாலும் ஓகே
__________________________________________________________
சோம்பல் என்பது இனிமையானது என்பார் ஓஷோ . உலகில் எல்லோரும் சோம்பேறியாக இருந்துவிட்டால் உலகப்போருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார் அவர் . நானும் சோம்பேறிதான் . தர்ப்பூசணி வாங்க போனேன் . விலை தெரியவில்லை . சும்மா நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன் . ஓர் அம்மா வந்தார் . கஷ்டப்பட்டு பேரம் பேசி ஒரு விலையை நிர்ணயித்து பழம் வாங்கினார் . அதே விலைக்கு எனக்கும் கொடுங்கள் என கேட்டு வாங்கினேன் . எனர்ஜி சேவ் ஆகி விட்டது

________________________________________
சாருவுடன் பேசும்போது அவ்வபோது சில ரெஃபெரன்சுகள் கொடுப்பார்.. கண்கொத்தி பாம்பு போல காத்திருந்து அதை கவ்விக்கொள்பவர்களும் உண்டு.. அவர் இளையராஜாவை திட்டுகிறார், எனவே நான் அவரை திட்டுகிறேன் என டைம் பாஸ் செய்பவர்களும் உண்டு... ஓகே..அவரவர் வாழ்க்கை.. அவரவர் நேரம்.. நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை
who killed palomino molero என்ற நாவல் குறித்து சாரு அவ்வப்போது சொல்வார்.. அந்த நாவல் குறித்து நிர்மலுடன் ஓர் உரையாடல்
-------------------------------------------------------------------------------------
நேத்து வீட்ல பெரிய சண்டைப்பா . நான் பீச் போலாம்னேன் . சினிமாவுக்கு போலாம்ங்கறா மனைவி . ஒரு மணி நேரம் சண்டை என்றார் நண்பர் முல்லாவிடம் . முல்லா அமைதியாக கேட்டார் " சரி , என்ன படத்துக்கு போனீங்க ? "
---------------------------------------------------------------------------
முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர் அலறினார்
“ முல்லா.. உடனே பாடுவதை நிறுத்துங்கள்... கொடூரமாக என் காதுகளில் ஒலிக்கிறது...இன்னும் பத்து நிமிடங்கள் பாடினால் , எனக்கு பைத்தியம் பிடித்து விடும்”
முல்லா சொன்னார்
“ அடடா...ஏற்கனவே உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.. நான் பாடலை நிறுத்தி ஒரு மணி நேரம் ஆகிறது “
----------------------------------------------------------------------------
முல்லாவுக்கு பிறந்த நாள்.. ஒரு நண்பன் மலிவான மது பாட்டில் ஒன்றை அவருக்கு பரிசளித்தான்.. அடுத்த நாள் கேட்டான் “ முல்லா.. மது எப்படி இருந்தது “
“ மிக சரியான பதத்தில் இருந்தது “ என்றார் முல்லா..
“ மிக சரியான பதமா? அப்படி என்றால்? “
முல்லா சொன்னார் ... “ இதை விட நன்றாக இருந்து இருந்தால் , நீ எனக்கு அதை கொடுத்து இருக்க மாட்டாய்.. இதை விட மோசமாக இருந்து இருந்தால் , என்னால் குடித்து இருந்திருக்க முடியாது ..சரியான பதம் “
------------------------------------------------------------------------------
சோவியத் யூனியன் அதிபராக இருந்தவர் ஸ்டாலின்.. உலகபோர் கால கட்டத்தில் ஜெர்மன் படையினர் அவர் மகனை கைது செய்யவிட்டனர்... சோவியத் படையினர் பிடித்து வைத்துள்ள தமது தளபதிகளை விடுவித்தால் , அவரது பையனை விடுவிப்பதாக சொன்னார்கள்.. எப்படியாவது பையனை காப்பாற்றுங்கள்..ஒரு தந்தையாக கடமையை செய்யுங்கள் என குடும்பத்தினர் வற்புறுத்தினர்.. அவர் மறுத்து விட்டார்.. அவர் மகன் கொல்லப்ப்படார்... தான் செண்டிமெண்டாக நடந்து கொண்டால் , எல்லோரும் பலவீனம் ஆகி விடுவார்கள் என்பது அவர் கருத்து...
அது போல ராமர் சில நேரங்களில் ஓர் அரசராக கடுமையாக நடந்து கொண்டார்.. ஊழி காலத்திலும் காவலானாக இருக்க கூடியவர் அவர்...
ராவணனுக்கு எதிராக அதர்மத்துக்கு எதிராக போரிட்டவர்,,
ஏழு பிறவிகளையும் இல்லாமல் செய்யக்கூடியவர்..
அப்பேற்பட்ட ராமர் இன்றும் வாழ்கிறார் என்கிறார் சிவ வாக்கியர்.. எங்கு வாழ்கிறாராம்?
ராம ராம ராம ராம எனும் மந்திரத்தில் வாழ்கிறாராம்...
காரகார காரகார காவலூழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களேழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராமவென்னும் நாமமே.
----------------------------------------------------------------------------------
முல்லாவின் தந்தையார் மரணிக்கும் நிலையில் இருந்தார்... முல்லாவை அழைத்து அறிவுரை சொன்னார்’ முல்லா.. நான் என் வாழ் நாளெல்லாம் பெண்கள் பின் அழைந்து வீணாக்கி விட்டேன். அழகை பார்த்து மயங்காதே... அழகு என்பது வெறும் மேல்தோல் சார்ந்த விஷ்யம்... வெறும் தோலை வைத்து தவறான முடிவை எடுத்து விடாதே “ என்றார்.
முல்லா சொன்னார் “ அது போதுமே டேடி.. மேல் தோல் அழகாக இருந்தால் போதுமே... நான் என்னை அந்த பெண்ணை வெட்டி குழம்பு செய்தோ , ஃபிரை செய்தோ சாப்பிடவா போகிறேன்.. உள்ளே இருப்பது பற்றி எனக்கு என்ன கவலை. தோல் அழகாக இருந்தாலே எனக்கு போதும் “
இதைக்கேட்ட தந்தை , தன்னைபோலவே தன் மகனும் உருப்பட மாட்டான் என நினைத்தவாறு போய் சேர்ந்தார்
-------------------------------------------------------------------------------------------------------------------
புதுப்பணக்காரன் ஆகி விட்ட ஒரு நண்பன் முல்லாவிடம் சீன்போட விரும்பினான் " முல்லா . நான் இப்ப பணக்காரன் . நீச்சல் குளம் , ஜிம் , பார் ,கால்பந்து மைதானம் என எல்லாம் வச்சு இருக்கேன் " என்றான் . இதுதான் பலரிடமும் இருக்கே என்றார் முல்லா . எல்லாம் என் வீட்டிலேயே இருக்கு . அதுதான் மேட்டர் என்றான் நண்பன் . முல்லா சொன்னார் . நானும் பெரிய ஆளுதான் . வீட்டு வேலை , சமையலுக்கு என பத்து வேலைக்காரிகள் என்னிடம் பணிபுரிகிறார்கள் என்றார் . வீட்டுவேலைக்கு வேலைக்காரிகள் இருப்பது சாதாரணம்தானே என்றான் நண்பன் . பத்து வேலைக்காரிகளையும் வீட்டிலேயே வைத்து இருக்கிறேன் . அதுதான் மேட்டர் என்றார் முல்லா வெட்க சிரிப்புடன்
---------------------------------------------------------------------------------------------------------
அந்த பலான விடுதியில் இருந்து முல்லா வெளியே வருவதை பார்த்த அவரது குரு அதிர்ச்சி அடைந்தார் ." முல்லா , நீ நல்லவனாயிற்றே . இப்படி செய்யலாமா . மனதுக்குள் இருக்கும் தீய சக்திகள் நம்மை தூண்டினால் அதை கட்டுப்படுத்த வேண்டும் " என்றார் குரு . முல்லா சொன்னார் " கட்டுப்படுத்தலாம் என்றுதான் நினைத்தேன் . ஆனால் தீய சக்தி கோபித்துக்கொண்டு இன்னொரு முறை தூண்டாமல் போய்விட்டால் என்ன செய்வது ?
----------------------------------------------------------------------------
பைக் ஒன்று பஞ்சர் ஆகி விட்டது.. சில மெக்கானிக்குகள் ஸ்பாட்டுக்கு வந்து பார்க்க மறுத்து விட்டனர்.. ஒரு மெக்கானிக் வந்து சரி செய்து கொடுத்தார்.. தன் கதையை சொன்னார்.. அவர் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படித்தவர்.. பெரிய நிறுவனம் ஒன்றில் செய்து கொண்டு இருந்த பணியில் , மன நிறைவு இல்லாமல் ரிசைன் செய்தாராம்.. சொந்தமாக ஆட்டோமொபைல் வொர்க் ஷாப் வைத்து சூப்பராக நடந்து வருகிறதாம்.. வீடு கட்டி விட்டாராம்.. 
கடைசியாக சொன்னார்.. கூடவேலைபார்த்தவர்கள் , மேலதிகாரிகளை சமீபத்தில் போய் பார்த்தேன் சார்..இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள்..
-------------------------------------------
சொத்தைப் பல் - ஜிப்ரான்என் பல் சொத்தையாகி இரவும் பகலும் சித்தரவதை செய்தது . மருத்துவரிடம் சென்று அதை பிடுங்க சொன்னேன் . அதை பிடுங்கி பயனில்லை . உணவில் கவனமாக இருத்தலே சொத்தையை தடுக்கும் . இதற்கு மருந்து மட்டும் போதும் என்றார் . வீட்டுக்கு வந்தேன் . மீண்டும் வலி . இன்னொரு மருத்துவரிடம் சென்றேன் . என் வலி எனக்குதான் தெரியும் . கேள்வி கேட்காமல் பல்லை பிடுங்குங்கள் என்றேன் . சமுதாயத்திலும் சொத்த பற்கள் ஏராளம் , ஆனால் நாம் எதுவும் செய்யாமல் கதை பேசிக்கொண்டு இருக்கிறோம்
----------------------------------------------

அந்த விளக்கு ஒரு மேஜிக் விளக்கு .ஆனால் தூய்மையானது . அது நம் உள்ளேயே இருக்கிறது . அதைத்தான் தேடுகிறேன் என்கிறார் திருமூலர் . என்ன பாடல் ?any guess ?
--------------------------------------------------
என் அப்பா இறந்ததுக்கூட ஊருக்கு போகல ,பரீட்சை எழுதினேன் / க்ரிக்கெட் ஆடினேன் . இன்று சாதனையாளராக இருக்கிறேன் என சிலர் சொல்வதை கேட்டு பிரமிக்கிறோம் . ஆனால் இதைவிட டெடிகேஷன் இருப்பவர்கள் சோபிக்காதது நம் கவனத்துக்கு வருவதில்லே . வெற்றி என்பது மைண்ட் பவர் , தன்னம்பிக்கை , உழைப்பு மட்டும் சார்ந்ததல்ல . இவை வேண்டும்தான் . ஆனால் வேறு சிலகாரணிகளும் உண்டு என அற்புதமான விளக்கும் புத்தகம் outliers

-------------------2 comments:

  1. உங்கள் கருத்துகளை தொடர்ந்து படித்து வருகிறேன்,மிகவும் நன்றாக இருக்கிறது ,தலைப்பினை தமிழில் வைக்க கூடாதா ?

    ReplyDelete
  2. நிறைவான நிறைய விசயங்கள்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா