Wednesday, November 12, 2014

இணைய மொண்ணைகளை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன் - அசோகமித்ரன் - மிக்சர் போஸ்ட்

டீக்கடையில் போட்டோ எடுப்பதை பார்த்து கடைக்காரர் குழம்பினார்... ஒரு வேளை ஏதாவது நடிகரா , அரசியல்வாதியா ,, நமக்குத்தான் தெரியாமல் போய் விட்டதா என குழம்பியபடி தயக்கத்துடன் என்னிடம் கேட்டார்... யார் சார் அவர்....
நான் சொன்னேன்..” அவர் பின் நவீனத்துவம் , இலக்கியம் போன்றவற்றில் கில்லாடிங்க...எழுத்தாளர் “
அவர் புரியாமல் மையமாக புன்னகைத்தார்...
உடனே நிர்மல் என்னைக்காட்டி “ இவர் முழிதான் கொஞ்சம் திருட்டு முழியாக இருக்கிறதே தவிர , இவர் பெரிய கவிஞர் ...கவிதை எல்லாம் எழுதுவார் “ என சீரியசாக சொன்னார்..
எனக்கு பயங்கர சிரிப்பு..என்னை கலாய்க்கிறாரா..கடைக்காரரை கலாய்க்கிறாரா... இருந்தாலும் சிரிப்பை காட்டிக்கொள்ளவில்லை..
நிர்மல் உடனே, செல்போனில் என் புலிக்கவிதை ஒன்றை வாசித்து காட்டினார்... டீக்கடைக்காரர் டென்ஷன் ஆகி அவர் இடத்துக்கு போய் விட்டார்.. ரெஸ்பான்சே சரியில்லையே என்றேன் நிர்மலிடம்.
நல்ல வேளை...டீ சாப்பிடும் முன் கவிதை( ? ! ) யை சொல்லி இருந்தால் . டீப்பொடிக்கு பதில் விஷப்பொடியை கலந்து இருப்பார் என்றார் நிர்மல் சிரித்துக்கொண்டே
அதன் பின் ரெண்டு மணி நேரம் அங்கேயே மொக்கை போட்டுக்கொண்டு அமர்ந்து இருந்தோம்..
கிளம்பும்போது , இன்னொரு டீ போடட்டுமா என்றார் கடை.. நிர்மல் சொன்ன விஷப்பொடி நினைவு வந்தது... ஆணியே பிடுங்க வேண்டாம் என உயிர் தப்பி ஓடி வந்து விட்டேன்
________________________________________________________________

லைசன்ஸ் ஆர் சி புக் , இன்ஸூரன்ஸ் எல்லாம் இல்லாமல் ஒரு டுபாக்கூர் பழைய கால ஸ்கூட்டர் ஓட்டிய அந்த காலத்தில் போலீஸ்காரை பார்த்தால் பயமாக இருக்கும்.. பாக்கேட்டில் இருக்கும் இருபது ரூபாயும் பறிபோய் விடுமே என்ற நியாயமான பயம்.. ப்
அவர்களிடம் தப்பிக்க ஓர் ஐடியாவை கண்டு பிடித்தேன்.. சாலையில் அவர்களை பார்த்தால் தைரியமாக அவர்களிடம் போய் வழி கேட்பேன்..வழி சொல்லும் கவனத்தில் என்னிடம் எதுவும் கேட்க மாட்டார்கள்...
ஒரு முறை அப்படி ஓர் இடத்துக்கு வழி கேட்டேன்.
“ என்ன இப்படி வந்துட்டீங்க...யூ டர்ன் எடுத்து லெஃப்ட் போய் ரைட் திரும்புங்க என்றார் போலீஸ்கார்..
ங்கொய்யால. சிக்னல் தாண்டினால் அந்த இடம் வந்து விடும்..இதில் யூ டர்னா? வெளங்கிரும் என நினைத்தபடி யூ டர்ன் எடுத்தேன்... தேவை இல்லாமல் சுற்றி ஐம்பது ரூபாய்க்கு பெட்ரொல் போட வேண்டியதாக போய் விட்டது...அத்துடன் அந்த யுக்திக்கு தலை முழுகினேன்..

______________________________________________________________
தன்னடக்கம் என்பதற்கும் முட்டாள்தனத்துக்கும் என்ன வித்தியாசம் என சாரு அழகாக விளக்கி இருப்பார்..
ஏ ஆர் ரகுமானை ஒருவர் பேட்டி எடுக்க சென்றார் நிருபர் ஒருவர்.. “ சார்.... எனக்கு இசை பற்றி சரியாக தெரியாது...எனவே கேள்விகள் தப்பா இருந்தா மன்னிச்சுடுங்க “ என்றார் நிருபர்..
ரகுமான் சொன்னார் “ எனக்கும் இசை பற்றி சரியாக தெரியாது...தினமும் கற்கிறேன்...எனவே தைரியமா கேளுங்கள்... “
இது தன்னடக்கம்...
இசை பற்றி ஒன்றும் தெரியாமல் சும்மா உதார் விட்டு ஒருவர் எழுதுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள்....எப்போதாவது தவறு செய்து மாட்டிக்கொள்ளும்போது எனக்கு இசை தெரியாது என சொன்னால் அது தன்னடக்கம் அல்ல.. முட்டாள்தனம்..
அவரவவர் துறையில் தொடர்ச்சியான கற்றுக்கொள்ளல் மிக அவசியம்
________________________________________________________________________

எழுதியது யார் என்பது முக்கியம் இல்லை.... விஷயத்தை கவனியுங்கள்
தந்தையின் பாதங்களில் அமர்ந்து வேதவேதாங்கங்களைக் கற்றேன். ஆனால் என்னை என் தோழர்கள் புறக்கணித்தனர். மீனவச்சிறுவனாகவே நான் நடத்தப்பட்டேன். ஒவ்வொருநாளும் முழுமையான தனிமையிலேயே வாழ்ந்தேன். கங்கையில் நீரில்குதித்து நூறுமுறை இருகரையும் தொட்டு நீராடுவது மட்டுமே எனக்கு இன்பமளிப்பதாக இருந்தது. கங்கையில் ஒருமுறைகூட நீர்கடக்கமுடியாத என் தோழர்கள் அதனாலேயே என்னை மீன்குஞ்சு என்று இழித்துரைப்பதை நான் அறிந்திருந்தேன்.

___________________________________________________

கர்மா என்பதை ஜே கிருஷ்ணமூர்த்தி அணுகுவது சுவாரஸ்யமானது... நமது இறந்த காலம் , நம் நிகழ் காலத்தை பாதிக்கும் என்பது கர்மா கான்சப்ட்.... ஆனால் இறந்த காலம் என தனியாக எதுவும் இல்லை என்கிறார் அவர்...இந்த போஸ்ட்டை நிகழ்காலத்தில் அடிக்க ஆரம்பித்தேன்,... போஸ்ட் ஆகும்போது அது இறந்த காலம் ஆகி விடும் என எதிர்காலத்தை அறிந்தே தான் இதை டைப் செய்கிறேன்.. ஆக நிகழ்காலம் , இறந்த காலம் , எதிர்காலம் எல்லாமே இந்த கணத்தில் இருக்கிறது....எங்கோ நிலையாக ஒரு இறந்த காலம் கர்மா என்ற பெயரில் இருப்பது கொஞ்சம் சந்தேகத்துக்கு உரியது

_________________________________________________________

சில நண்பர்களை சந்திக்க போனால் அவர்களை நாம் எண்டர்டெயின் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள் அல்லது நம்மை எண்டெர்டெய்ன் செய்ய முயல்வார்கள் . இவர்களை எல்லாம் நல்ல மனநிலையில் இருந்தால்மட்டுமே சந்திக்க முடியும் . சில நண்பர்களிடம் நாம் இயல்பாக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் . சும்மாவே கூட இருந்துவிட்டு வரலாம் . இவர்களை எப்போதும் சந்திக்கலாம்

____________________________________________________________

ஓ போலீஸ்கார் !!!!!!
புலியை கொன்றீர் !!!
எலியை
ஒழிக்க மறுக்கிறீர் !!!!!!!!!!!
மான்களை கொல்கிறீர் !!!!!!!
ஊரில் இருக்கும்
நீதிமான்களை கொல்ல மறுக்கிறீர் !!!!!!!!
கழுதைகளை போற்றுகிறீர் !!!!!!
பிச்சை எழுதும்
கலக்கல் கவிதைகளை போற்ற மறுக்கிறீர் !!!
இதுவா நீதீ !!!!!!!
ஓ தமிழா !!!!!!!!!!!!!!!!
இனி நீ “தீ “
- கவி இளவரசு பிச்சை

____________________________________________________
நண்பர் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்,.. லோன் வாங்க சொல்லி கால் வந்தது,, நான் எதுவும் பேசாமல் கேட்டுக்கொண்டு கட் செய்தேன்...எல்லோரும் யார் இது என்பது போல பார்த்தார்கள்..
டெல்லியில் இருந்து கால்...எம் பி யாலயே முடிக்க முடியலையாம்... என்னை முடிக்க சொல்லி கால் செய்கிறான்,,, என்றேன்..
எல்லோரும் குபீர் என சிரித்து விட்டார்கள்..
ச்சே.. ஓர் இண்டக்சுவல் இமேஜ் க்ரியேட் செய்ய நினைத்து சொதப்பி விட்டேனே

________________________________________________
இணைய மொண்ணைகள் குறித்து அசோகமித்திரன்

இன்றைக்கு உத்வேகம் எடுத்துள்ள இணைய எழுத்துகளைப் பற்றி உங்கள் கருத்து?
அதில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. படைப்புக்கு எடிட்டர் ரொம்ப அவசியம். எடிட்டர்கள் ரொம்பச் சிறிய மாற்றத்தில் அந்தக் கதையைச் சிறப்பாக்கிவிடுவார்கள். கணையாழியில் இருந்தவரை ஒரு கதையை இரண்டு முறை படிக்காமல் வெளியிட்டதில்லை. உடனே உடனே எப்படி எழுதுகிறார்கள் என ப்ளாக்கில் எழுதுபவர்களைப் பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
__________________________________________________________________________
கண்ணீர் அஞ்சலி கவிதை !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புளி என்று பேர்படைத்தாய் குழம்பில் போடும்போது
இணைய மொண்ணை என பெயர் பெற்றாய் முக நூலில் எழுதும்போது
இலக்கின்றி சுட்ட குண்டு உன் மீது பாய்ந்து இறந்ததும் 
புலி என்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே
- கவி இளவரசு பிச்சை

_________________________________________
டீக்கடையில் வேலை செய்பவர்கள் , மற்ற கடைகளில் வேலை செய்பவர்கள் போன்றவர்களில் சிலரை நண்பர்களாக வைத்துக்கொண்டு அவ்வப்போது அவர்களிடன் புத்தகங்கள் குறித்து பேசி சீன் போடுவது என் இயல்பு..
ராம நாதபுரம் புத்தக கண்காட்சி , திருப்பூர் புத்தக கண்காட்சி என நான் ரொம்ப பிசிப்பா என ஒருவனிடம் கதை அளந்து கொண்டு இருந்தேன்.
“ அண்ணே , திருப்பூர் போனீங்கனா , ஒரு மெஷின் செகண்ட் ஹாண்ட்ல கிடைக்குமானு விசாரிச்சுட்டு வாங்கனே “ என்றான் ஒருவன்..
“ அண்ணன் கிட்டதான் கேட்கிற..சும்மா கேளு..என்ன மெஷின் “ கேட்டேன்.
“ ஷேவிங் மெஷின் “ என்றான்..
திடுக்கிட்டேன்..
கிண்டல் செய்றானா... ஷேவிங் மெஷின் புதுசா வாங்கினாலே சீப்தானே...செகண்ட் வாங்கி நல்லா ஓடுமா.. அறுத்து விட்ருச்சுனா... ஒரு வேளை பார்பர் ஷாப் வைக்க நவீனமான கருவியா...அதில் இவனுக்கு அனுபவம் இல்லையே.. அப்படியே இருந்தாலும் திருப்பூருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
“ என்ன மெஷின் டா “ மீண்டும் கேட்டேன்..
“ ஷேவிங் மெஷின் அண்ணே “ என்றான் தெளிவாக...
என்ன எழவுடா இது என பயங்கர குழப்பம்..
“ என்னனே , படிச்ச ஆளா இருந்துக்கிட்டு முழுக்கிறீங்க... வேற யார்கிட்டயாவது கேட்டு விசாரிக்க சொல்லுங்க “ என சொல்லி பேப்பரில் எழுதி கொடுத்தான்..
பார்த்தேன்... ஆங்கிலத்தில் எழுதி இருந்தான்.
SEWING MACHINE
அடப்பாவி...இதுவாடா ஷேவிங் மெஷின்... ஆண்டவா...என்னை ஏன் இந்த மாதிரி ஆளுங்களோட கூட்டு சேர்க்குற என மனதில் புலம்பிய்வாறு கிளம்பினேன்...
படிச்சு ஒண்ணும் பயன் இல்லை என அவன் யாரிடமோ என்னைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தது காதில் விழுந்தது

_______________________________________________________
வ உ சி கப்பல் கம்பெனி வேலையில் இருந்து விலகினார்.. பிறகு மீண்டும் சேர்த்துகொண்டு ஏஜண்டாக நியமித்தார்கள்..இதை அவர் தன் சுயசரிதையில் எப்படி எழுதுகிறார் என பாருங்கள்..
“ அவனையாம் நீக்கிலேம் ; அவனே நீங்கினன்:
அவனை திருப்பி அழைத்துக் கொள்வோம் “
என்றெனை அழைத்து “ நீஏஜண்ட்” என்றார்
நன்றென மொழிந்தேன் நாணம் விடுத்தே.
இப்படி மிக எளிமையாக அழகான அகவற்பாக்கள் மூலம் தன் வரலாற்றை எழுது இருக்கிறார் வ உ சி... பெயர் : வ உ சி சுயசரிதை
_________________________________________________________________
நானும் திருந்தி விட்டேன் . இனி சமூக நல கருத்துகளை எழுத உள்ளேன் . இதோ , விழிப்புணர்வு கவிதை


இளைஞனே ! !
புலியை அடித்தார்கள்
நீயோ ஃபுல்லை அடித்துக்கொண்டுருக்கிறாய் ! 
இப்படி வாளாவிருந்தால் ,
நாளை நீ ஹாஃப் அடிக்கும்போது ,
ஆப்பு அடித்துவிடுவார்கள் ! !
- கவிஇளவரசு பிச்சை

_______________________________________________
அவர் சொல்வதை காது கொடுத்து கேட்டால் , அவரை அனுமதித்தால் , அவருக்காக கதவை திறந்து வைத்தால் , அவர் ஒரு தூய்மையான நெருப்பாக இருப்பார்... உங்களுக்குள் இருக்கும் பழைய குப்பைகளை எரித்து , புது மனிதனாக உங்களை உருவாக்குவார். ஆனால் நெருப்பை அனுமதிப்பது அபாயகரமானது...அவரை பார்த்ததுமே கதவுகளை மூடிக் கொள்வீர்கள்
- ஜேகே இறந்த போது ஓஷோ பகிர்ந்து கொண்டது
_______________________________________________________________
புலியை
கொன்றீர் !!!!!!!
தோலுக்காக
சிலர் மகிழ்ந்தீர் !!!!!!!!!!!!!
மான்களுக்காக
சிலர் மகிழ்ந்தீர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இங்கே ஒரு சக புலியின்
கண்ணீரை ஏன் மறந்தீர் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
- நம்மையும் கொன்று விடுவார்களோ என பதுங்கி இருக்கும் கவிஞர் பிச்சை !!

_________________________________________________________



1 comment:

  1. செம ரகளையான பதிவு.... ஒஷோவின் பகிர்வு யோசிக்கவைத்தது. கவி இளவரசுவின் கவிதைகளும் சூப்பர். :))))

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா