Monday, April 5, 2010

இயற்கையை வணங்கும் பகுத்தறிவு... இறைவனை ஏற்காத இந்து மதம்- ஜெயமோகன் புத்தகம் சில சிந்தனைகள்




ஒரு மூத்த பெரியார் தொண்டர் விழவில் பேசிய முதலவர் டாகடர் கலைஞர் , " திரு ஆனைமுத்து அவர்களுக்கு , நீண்ட ஆயுள் கிடைக்க, எல்லாம் வல்ல இயற்கையை பிரார்த்திப்பதாக பேசினார்....

நமக்கு அது ஆச்சர்யமாக இருந்தது... இறைவனை பிரார்த்தித்தால், அது மூட நம்பிக்கை... இயற்கையை பிரார்த்தித்தால் அது பகுத்தறிவா?

ஆனால், இந்து மத மரபில், இயற்கையே எல்லாம் என்றும், கடவுள் என்ற விஷயம் முக்கியம் இல்லை என்றும் ஒரு பார்வை இருக்கிறது என்று அறிய ஆச்சர்யமாக இருந்தது.....

பிரார்த்தனையை நம்பும் இன்றைய பகுத்தறிவு... கடவுளை நம்பாத மதம் என்ற முரண்பாடு சுவையானதாக தோன்றவே, எழுத்தாளர் ஜெயமோகனின் , இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் என்ற நூலை புரட்டினேன்...

இன்றைய சூழலில், ஓர் இலக்கிய வாதியின் புத்தகத்தை படிப்பது, ஒரு அவமானகரமான செயலாகவே பொது மக்களால் பார்க்க படுகிறது.... அதே போல ஆன்மீகமும் , ஒரு அருவருப்பான விஷயமாக பார்க்க படுகிறது....
இலக்கியவாதியும், ஆன்மிகமும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம்....
எனவே, இந்த புத்தகத்தை, யாரும் பார்க்காத நேரத்தில் தான் படிக்க வேண்டி இருந்தது....
படித்த பின் சில விஷயங்களை உறுதியாக கூறலாம்...

1 இது ஆன்மீக புத்தகம் அல்ல
2 . இலக்கியமும் அல்ல ( அப்பாடா !!!! )
3 கடவுள் இருக்கிறாரா , இல்லையா என்ற ஆராய்ச்சி நூல் அல்ல...
4 எந்த குறிப்பிட்ட தத்துவத்தையும் , பிரசாரம் செய்யும் நூல் அல்ல...

பிறகு இந்த புத்தகம் என்னதான் சொல்கிறது.......
பார்க்கலாம்...

மார்க்கெட்டிங் யுத்தங்கள், ரூட்டை மாத்து, எச்சேலன்ட் என்று நடை முறை தமிழிலில் பல நூல்களை வெளியுட்டுள்ள, கிழக்கு தான் இதையும் வெளியுட்டுள்ளது என்பதும் ஒரு ஆச்சர்யம் தான்....
புத்தகத்தில் இருக்கும் தமிழை ( தரிசனம், உணர்மங்கள், கருத்தமைவு etc ) இங்கே பயன்படுத்தாமல், நடைமுறை தமிழில், என் எண்ணத்தை பகிர்ந்து கொள்கிறேன்....

இந்து மதம் என்று நாம் தற்போது சொல்லுவது, ஆறு வகையான வழிபாடு முறைகள்தான்... ஆனால் இவற்றை இந்து மத அடிப்படை தத்துவம் என சொல்ல முடியாது...

உண்மை என்பதை பற்றி ஒரு முழுமையான பார்வை ..அதன் வெளிப்பட்டு நிலைதான் வழி பாடு...
உதாரணமாக, இந்த பிரபஞ்சத்தை ஓங்கார வடிவமாக பார்க்கலாம்...... இந்த பார்வை, பிள்ளையார் வடிவமாக மாற்றி கொண்டால், அதுதான் வழிப்பட்டு முறை என்று மாறுகிறது... அந்த வழி பாடு முறைக்கு ஒரு பெயரும் கொடுக்க படுகிறது...
இது பார்வைகளின் தொகுப்பைத்தான், இந்து மெய் ஞான மரபு என்கிறார் ஜெயமோகன்...

இதில் ஒரு சார்வாகம் என்ற மதம் , தற்போதய குழப்பமான பகுத்தறிவை விட தெளிவாக பேசுகிறது....

இந்த உலகம், நெருப்பு, தீ, நீர் மற்றும் வாயு இவற்றால் ஆனது...இதற்கு மேல் கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை....ஜாலியாக வாழ்வதுதான் வாழ்வின் இலக்கு...நன்றாக ஜாலியாக வாழ்வதுதான் மோட்சம்... மரணத்துக்கு அப்புறம் மோட்சம், நரகம் என்பதெல்லாம் வெட்டி பேச்சு என்கிறது இந்த மதம்...மகாபாரத்திலும் கூட இந்த கருத்துக்கள் உள்ளன என்பது ஒரு ஆச்சரய்ம்...

ஆனால் இது பெரிய மதமாக வளரவில்லை..அதே போல வேறு சில பார்வைகள், சமண மதம் , புத்த மதம் என வளர்ந்து விட்டன.... இதை தவிர மற்ற ஆறு பார்வைகளை பற்றி ஜெயமோகனின் இந்த புத்தகம் விவரிக்கிறது.... இவைதான் இந்து மதத்திற்கு அடிப்படை....

1 இயற்கை வாதம்...

வெண்ணெய் என்று ஒன்று இருந்தால், பால் என்று ஒன்று இருந்தாக வேண்டும் அல்லவா... ஒன்றில் இருந்துதான், இன்னொன்று தன்ர முடியும்.... இதுதான் , இந்த பார்வையின் அடிப்படை... சரி... அப்படியே, நாம் காணும் ஒவ்வொன்றின் மூலத்தையும் ஆராய்ந்து கொண்டே சென்றால், இறுதியில் ஒரு மூல பொருள் வரும்...

அதை கடவுள் என்பார்கள், ஆன்மீக வாதிகள்.... இயற்கை என்பார்கள், நடைமுறை வாதிகள்

சாங்கியம் என்ற இயற்கை வாதம், அந்த மூல காரணம் இயற்கை என்கிறது....

சரி... அந்த மூல காரணம் எங்கிருந்து வந்தது என்று கேட்டல், வேரில் இருந்துதான் அனைத்தும் வருகின்றன... வேருக்கு வேர் இல்லை, என்று ஒரு போடு போட்டது...

சரி,,, ஆதி இயற்கையை இயக்குவது யார்? அதன் நோக்கம் என்ன போன்ற கேள்விகளுக்கு , சாங்கியம் பதில் சொல்ல முடியவில்லை...எல்லாம் சும்மா தற்செயலாக நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை...

கடைசியில், புதிதாக ஒரு தத்துவத்தை உருவாக்கி சமாளித்தது சுவையான கிளைமாக்ஸ்...

2 நித்தியானந்தா போன்றோரின் தங்க சுரங்கம்...

நம்மை நாம் தூய்மை செய்து கொண்டால், உண்மை அறிவை அறிய முடியும்..யோகா அதற்கு உதவும் என்பதே அடுத்த பார்வை... அந்த உண்மை அறிவு என்பதை, கடவுள் என்று மாற்றியதும், புது புது யோக முறைகளால், ஆன்மிகக வியாபாரிகள் ( ஓஷோ , மகேஷ் மகரிஷி ) உருவானதும், ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் உருவானதும் தனி கதை..

3 அணுவே அனைத்துக்கும் ஆதாரம்

சற்றே அறிவியல் பார்வை கொண்டது வைசேஷிகம் என்ற இந்த பார்வை...அணுக்கள் எப்ப்தும் இருக்கின்றன,.,,, அதை ஆககவோ அழிக்கவோ முடியாது....ஒன்றாக சேரும் இயல்புடையது அணு.... அப்படி செர்வ்தல்தான், இந்த உலகம் இயங்குறது ..

சரி... அணுக்கள் ஏன் ஒன்றாக இனிய வேண்டும்? அவை இணைந்து பிரபஞ்சம் உருவாக்க, எது உந்து சக்தி? என்ற கேள்விக்குதான், இறை சக்திதான் அந்த உந்து சக்தி என சொல்ல பட்டது.... ஆனால் இந்த இறை சக்தி சர்வ வல்லமை கொண்டது என சொல்ல படவில்லை..வெறும் உந்து சக்தி தான்..

4 பகுத்தறிவு

இந்த பார்வை , தற்போது வழக்கத்தில் உள்ள பகுத்தறிவு அல்ல...

பிரபஞ்ச இயக்கத்தை பற்றி புரிதல் இல்லாததுதான், மனிதனுக்கு துக்கங்கள் ஏற்படுத்துகிறது..அறியாமை துக்கத்துக்கு காரணம்.,... அறிவு துக்கத்தை அகற்றுகிறது.... நிஸ்ரேயாசம் என்ற நிலையை அடைவதுதான் நம் இல்லைக்கு என்று நியாயம் என்ற இந்த பார்வை கூறுகிறது...

5 " அவாளின்" ஆரம்பம் ?

விதி, தலை எழுத்து என்பதெல்லாம் மற்ற பார்வைகளில் இல்லை... அது அறிமுகபடுதப்,படுவது பூர்வ மீமம்சம் என்ற பார்வையில் தான்... எல்லாவற்றிகும் வேதம் தான் அடிப்படை என்றார்கள் இதை வலியுறுத்தியவர்கள்...
நமது புரட்சி தலைவி செய்யும் வேள்விகள், ஹோமங்கள் எல்லாம் இவற்றின் விளைவுதான்...

6 இன்றைய இந்து மதத்தின் மையமாக இருப்பது வேதாந்தம் என்ற இந்த ஆறாவது பார்வைதான்.. எல்லாமே பிரம்மம் என்று வலியுறுத்துகிறது வேதாந்தம்...


பல புதிய விஷயங்களை இந்த நூலில் இருந்து தெரிந்து கொள்கிறோம்....

இந்து மதத்தை ஏற்கிறோம , இல்லையா என்பது வேறு பிரச்சினை..ஆனால், நம்மில் பலர் இந்து மதம் என்றால் என்ன என்று தெரியாமலேயே , எதிர்த்தும் பாராட்டியும் வருகிறோம்...

இந்த நூலின் மிக பெரிய சிறப்பு, ஒவ்வொரு பார்வையை பற்றி சொல்லும் போதும், நடு நிலைமையுடன், அதை விவரிக்கும் நயம்தான்.. எதையும் உயர்த்தியோ , தாழ்த்தியோ சொல்லாமல், அனைத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெயமோகன்...

குறை என்று பார்த்தல், இதில் உள்ள கடினமான தமிழ் ( ? ! ) சொற்கள்தான்... படிமம் , தரிசசனம் ( கோயில் தரிசனமா) , உணர்மங்கள்- இதெல்லாம் யாருக்கும் புரியாது... பேசாமல், பின் இணைப்பாக, பொருள் அகராதி கொடுத்து இருக்கலாம்...

இன்னொன்று, புத்தகம் படிக்கும் பொது, ஒரு தத்துவ ஆசிரியரிடம், பாடம் கேப்பது போல கேட்டு கொண்டு வருகிறோம்,.,, ஜெயமோகன் என்ற எழுத்தாளர் பேசுகிறார் என்ற நினைவே வரவில்லை.... ஆனால், அவ்வபோது விஷ்ணு புறம் பற்றி விளம்பரம் கொடுப்பது இடை செருகல் போல இருக்கிறது... தவிர்த்து இருக்கலாம்...

தத்துவம் என்பதை தவிர, பல சுவையான விஷயங்கள் உண்டு... திர்வள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருக்கலாம், இந்துகளின் புனித நூல் எது ? கீதை எந்த பார்வையை பேசுகிறது என சொல்லி கொண்டே போகலாம்...

நடை முறை வாதம் , தமிழர்களால் உண்டாக்க பட்டதா? அதை ஆரியர்கள் அழித்தார்கள. என்பதை பற்றி விவாதிக்கவும், இந்த நூலில் இருந்து பல விஷயங்கள் கிடைக்கும்( இந்த நூல் வரலாற்று நூல் அல்ல..லேசாகத்தான், வரலாறு சுட்டி காட்ட பட்டுள்ளது..அதை அப்படியே ஏற்க வேண்டும் என்பது இல்லை)

சுருக்கமாக சொன்னால், இந்து மதத்தை விரும்புபவர்கள், அதன் பல புதிய பார்வைகளை தெரிந்து கொள்ளவும், திட்ட விரும்புபவர்கள், தெளிவாக திட்டவும், இந்த புத்தகத்தை படிக்கலாம்...

தத்துவ துறையில் அர்ரவம் உள்ளவர்கள் , கண்டிப்பாக படிக்க வேண்டும்.....

3 comments:

  1. அவாளின்" ஆரம்பம் ? ///
    .
    .
    முப்பது நாற்பதுகளில் யூத எதிர்ப்பு போல இன்றைய பார்ப்பன எதிர்ப்பு இருக்கிறது என சாரு சொன்னதை கூட படிக்கவில்லையா நண்பா?

    ReplyDelete
  2. நன்றி பிச்சை...கண்டிப்பாக வாசிக்கிறேன்...

    ReplyDelete
  3. திட்ட விரும்புபவர்கள், தெளிவாக திட்டவும், இந்த புத்தகத்தை படிக்கலாம்////...
    கிழக்கு தளத்தில் புத்தகத்தை வாங்கும்போது உங்கள் தள இணைப்பை பார்த்தேன்.அருமையாக எழுதுகிறீர்கள் அய்யா..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா