Saturday, April 17, 2010

காதல் இல்லை என்று சொன்னால் , பூமியும் இங்கில்லை




பாரில் அமர்ந்து கொண்டு , ஹிந்தி நண்பரின் ஜோக்கிற்காக விழுந்து ஜிழுந்து சிரித்து கொண்டிருந்த பொது தான், சௌம்யா நினைப்பு வந்தது....
டில்லி வந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன,,, இன்னும் ஒரு மாத வேலை இருக்கிறது.... சென்னையில் இருந்து கிளம்பும்போது, இருவருக்மே, மிகவும் கஷ்டமாக இருந்தது... மூன்று மாத பிரிவு என்பதை கொஞ்சம் கூட தாங்க முடியவில்லை.... அனால் வேறு வழியில்லை...

டில்ல்லி வந்த புதிதில், சிறிது கஷ்டமாக இருந்தாலும், புது இடம், புது நண்பர்கள் என வாழ்கை சுவையானது... சென்னையை விட இதை அதிகமாக ரசிக்க ஆரம்பித்தேன்.... சென்னையில் சைட் அடித்தாலும், இங்கு சைட் அடிப்பது சற்று வித்தியாசமாக இருந்தது... இந்த வாய்ப்பு மும்பே கிடைக்காமல் பொய் விட்டதே என ஏங்கினேன்...

இப்போது சௌம்யா என்ன செய்து கொண்டு இருப்பாள் ? இலக்கியம் தான் எங்களை இணைத்தது.... இலக்கிய கூட சந்திப்பு, சுவையான விவாதங்கள் - பின் நாம கல்யாணம் செஞ்சுகிட்ட நல்ல இருக்கும்லே - இதுதான் எண்கள் சுருக்கமான பிளாஷ் பேக் ..
பிருவு துயரம் என்ற திருகுரல் அதிகாரத்தை எத்தனை முறை விவாதித்து இருப்போம்.. பாவம் அவள்,,,, அவிடம் பேசுவோம் என போன் போட்டேன்... ரெண்டு நாளாக பேசவில்லை...

" ஹெலோ " எதிர் முனையில் வீணை ஒலித்தத்து...
" என்னடி பண்ற "

" திடீர்நு எங்க ஆபீஸ் ல , கொடைக்கானல் புரோக்ராம் போட்டு, எல்லோரும் போயிட்டு வந்தோம்...எவ்வளவு சூப்பரா இருந்துச்சு தெரியுமா... அழகளான பூக்கள், இனிய காற்று , தொட்டு செல்லும் மேகங்கள்.... நாம ஒரு நாள் போகணும் " அவள் பேசி கொண்டே போனாள்..

எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது... என்னை நினித்து ஏங்கி கொண்டு இருப்பாள் என நினைத்தேன்... அனால் இவள் படு ஜாலியாக இருக்கிறாளே...

****************************
சென்னை திரும்பினேன்.. நானும் அவளும் ஓர் உயர் ரக உணவகத்தில் அமர்ந்து இருந்தோம்...
" டில்லில இருந்து நீங்க வாங்கிட்டு வந்த பொருட்களை பர்ர்ப்பதை விட, உங்களை மீண்டும் பார்ப்பது தான் எனக்கு சந்தோஷமாக இருக்கு " காதலுடன் பேசினால் அவள்...

அவளை பார்ப்பதே ஒரு சந்தோசம்... அவளுக்கு வாங்கிய ஆடைகளை கொடுத்து மகிழ்ந்தேன்..

இந்த டிரெஸ்ஸை போடு..இந்த டிரஸ் க்கு எல்லாம் ஒரு புது அழகு வரட்டும் "

என் பேச்சுக்கு அவள் தத்து அவளுக்கே உரிய புன்னகை ....

" உங்க டிரஸ் செலெக்ஷன் சுப்பர் பா.. உங்க ஷர்ட் , பான்ட் ஆளை அசத்துது...எல்லா பொண்ணுகளும் உங்களைதான் பார்க்குறாங்க... " எனக்கு பெருமையாக இருந்தது...

சாப்பிடும் பொது புரை ஏறியது... " நான் சொல்லல... ? பல பொண்ணுங்க உங்களைத்தான் நினைக்கிறாங்க... ஏன் பா, இப்படி எல்லோரையும் மயக்குறேங்க.. நீங்க ரொம்ப மோசம் " செல்லமாக சிணுங்கினாள்...

அவள் சிநுங்களை ரசித்தபடி, அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினேன்...

********************

" நீங்க எடுத்து கொடுத்த சேலை சுப்பர் பா... எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு "

" really u look like angel "

" இப்படித்தான் எங்க சீனியரும் சொன்னாரு... இருபது வருஷத்துக்கு முன்னாடி , இப்படி என்னை பார்த்து இருந்தா, என்னை தான் கல்யாணம் செஞ்சு இருப்பேன்னு சொன்னாரு "

என் முகம் லேசாக மாறியது...

" ஹே... அவர் எனக்கு அப்பா மாதிரி பா.. ஜஸ்ட் ஜோக்,, "

உன் கூட வேலை பார்க்குற ரவிய பத்தி அடிக்கடி சொல்லுவியே... அவன் என்ன சொன்னான்...

சற்று கவலையுடன் என்னை பார்த்தாள்.. அவன் ஒரு நல்ல நண்பன் பா.. அவனை பத்தி இப்ப என்ன பேச்சு...

சற்று குழப்பத்துடன் விடை பெற்றேன்..

****************************

" ஹே... அரை மணி நேரமா, உனக்கு போன் ட்ரை பண்றேன்..பிசி டோன் வருது.. எவன் கூட பேசிகிட்டு இருந்த....

" ப்ளிஸ்... நிதானமா பேசுங்க... நம்ம கல்யாணத்துக்கு அப்பா ஒத்துக்கல... வேற பையன் பார்துட்டராம்... அவர் கூட தான் சண்டை போட்டுட்டு இருந்தேன்... ஆனா, ஒரு சந்தேக பேர்வழிக்காக நான் ஏன் சண்டை போடணும் நு தோணுது...
நமக்கு சரி பாடு வராது... அவர் இஷ்டப்படியே நான் வேற யாரையாவது கலைய்னம் பணிகிட்டு சந்தோஷமா இருக்கேன்... குட bye


*****************************************

உனக்கு இவ்வளவு திமிர... என் மனம் எரிந்தது... என் கூட சுத்திட்டு , எவனையோ கல்யாணம் பண்ணிக்க போறியா... விட மாட்டேன்....
நாம ஒண்ணா சுத்துனதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கு..அதை காட்டி , உன் கலயனத்தை நிருதுறேண்டி... ஈஎலோர் முன்னாடியும் உன்னை அசிங்க படுத்தறேன்.. எல்லா ஆதாரமும் என் கிட்ட இருக்கு....அவ்வளவு சுலபமா என்னை கழட்டி விட முடியாது...

என் இதயம கர்ஜித்தது..

*************************88

" நிறுத்தி என்னடா பண்ண போற ? " நிதானமாக கேட்டார் அப்பா.. அவரிடம் நான் எதையும் மறைப்பதில்லை,,, என் முதல் நண்பர் அவர்தான்...

" அவளை நானே கல்யாணம் செஞ்சுக்குவேன் "

" ஏன் ? "

" என்ன அவளை நான் காதலிக்கிறேன் "

" நீ காதலிகிற ஒருத்தரை , நீ எப்படி காய படுத்த முடியும்? அப்படீன உண்மையில் அவளை நீ காதல்லிகவே இல்ல... உன் உடமையாத்தான் அவளை பார்த்து இருக்க.... "

" என்ன சொல்றீங்க ? அப்ப காதல்ன என்ன ? "

" காதல் நா, புரிந்து கொள்ளுதல்... விட்டு கொடுத்தல். மதித்தல்... .எதிர் பார்ப்பின்றி இருத்தல்... உன் விருப்பம் போல , உன் எதிர்பாப்பு போல ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தால், அது காதலே அல்ல... உன் விருப்பத்தை நிறைவேற்றும் ஒரு கருவியாகத்தான் அவரை நினைக்கிறாய்.. அவரை அப்படியே ஏற்பதுதான் காதல்... "

எனக்கு லேசாக புரித்து..

" சௌம்யா ...உன்னை உண்மையிலேயே காதலிக்கிறேன்... உன் ரசனைகளை, நட்புகளை, உன் முடிவெடுக்கும் திறனை மதிக்கிறேன்...

நான் இல்லாத வாழ்வுதான் உனக்கு சிறந்தது என நீ முடிவெடுத்தால், அந்த முடிவை நான் மனதார ஆதரிக்கிறேன்... உன் திருமணத்துக்கு எதாவது உதவி தேவை பட்டால் , எனக்கு சொல்.. செய்கிறேன்.. அதே போல என்னுடன் வாழ்வதுதான் சிறந்தது என முடிவெடித்ததால், அந்த முடிவையும் நான் மகிழ்வோடு ஏற்பேன்... எந்த போராட்டம் வந்தாலும் சமாளித்து உன் கை பிடிப்பேன் ... "


கொல்லை புறத்தில் மூட்டிய நெருப்பில், நானும் அவளும் சேர்ந்து எடுத்த புகை படங்கள், எழுதிய கடிதங்கள் எல்லாம் எரிந்து கொண்டு இருந்தன... அவளை இப்போதுதான் உண்மையாக காதலிப்பது போல தோன்றியது.....

" டேய்... சௌம்யா அபபா , அவரு பொண்ணோட ஆசையா மதிச்சு , கல்யாணத்துக்கு ஒதுகிட்டாராம்... உன்னை பார்க்க வீட்டுக்கு வந்து இருக்கார்..நீ சின்ன பையனாட்டம், தீ மூட்டி விளையாண்டுகிட்டு இருக்க... " அப்பாவின் குரல் , இன்ப தேன் வந்து காதில் பாய்ந்தது போல இருந்தது.....

4 comments:

  1. என்ன சார், எழுத்து பிழை பற்றி அவ்வளவு பேசிட்டு உங்களோட பதிவில் இவ்வளவு எழுத்து பிழை இருக்கே... சும்மா சொல்ல கூடாது நல்ல தான் இருக்கு போஸ்ட் ஆனால் படிச்சு முடிக்கறதுக்குள்ள என்னோட தமிழ் சுத்தம்மா மறந்திடும் போல இருக்கே . நீங்க கொஞ்சம் proof பார்த்தா பரவா இல்லை

    ReplyDelete
  2. தமில் ஒழிக

    தமிழ் வாழ்க ...

    ஹி ஹி

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா