Saturday, April 10, 2010

விலை மாதுடன் , ஓர் இரவு


* இந்தியா வல்லரசு ஆகி விட்டது... எல்லோரும் செழிப்பாக இருக்கிறார்கள்...
* கஷ்டம் என்பது எப்போதாவதுதான் வரும்... ஒரு மனிதனுக்கு அடுத்தடுத்து கஷ்டம் வருகிறது என்று சொல்வதெல்லாம் செயற்கை தனம்....
* ஒரு புத்தகம் சினிமா என்றால், சோகமான விஷயங்களை சொல்ல கூடாது.... சைகோ மனநிலை கொண்டவர்களுக்கு மட்டும் தான் சோகமான விஷயங்கள்... சும்மா பொழுது போக்கு விஷய்னகளுடந்தான், புத்தகமோ சினிமாவோ இருக்க வேண்டும்....
* மற்றவர் சோகத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும் ? உணர வேண்டும்.. ? அபச்சாரம் அபச்சாரம்... கல் நெஞ்சு கொண்டவர்கள் தான் மற்றவர் கஷ்டத்தை தெரிந்து கொள்ள ஆசை படுவார்கள்...


அங்காடி தெரு பட விமர்சனத்தில் , அறிவு ஜீவிகள் கருத்தை படித்து , நானும் ஒரு கட்டத்தில் இதை எல்லாம் ஏற்கும் நிலைக்கு வந்து சேர்ந்தேன்...

இந்நிலையில், கலைவாணி என்ற பெண்ணின் ( பாலியல் அடிமையாக இருந்தவர் ) புத்தகத்தை நேற்று இரவு படித்தேன்.... எதார்த்தம் என்பது , நாம் கற்பனை செய்து வைத்து இருப்பதை விட கொடூரமானது, ந்த ஒரு சினிமாவிலும் இந்த கொடுமைகளை , விளக்க முடியாது.....

நிம்மதியாக , ஒரு கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருந்த இளம் பெண்.... அவளுக்கு திருமணம்.... கணவனின் கொடுமை... துரோகம்... அக்கா கணவனின் பாலியல் தொந்தரவு, .... இதற்கிடையில் மண முறிவு... இன்னொரு திருமணம்.... அத்தானின், தொடரும் பாலியல் தொந்தரவு, குழந்தை பிறப்பு, இந்த கணவனும் பிரிதல், சினக்ப்பூர் செல்லுதல், பாலியல் " தொழிலில்" தள்ள படுத்தல், மீண்டும் இந்தியா வந்த பின்னும், அதே தொழில் செய்ய நிர்பந்தம், ... இதில் கூட காசு கொடுக்க ஏமாற்றும் கயவர்கள், மீண்டும் திருமணம், ஏமாற்றம், மகன் இறப்பு என்று சோகங்களை மட்டுமே பார்த்த பெண் தான் கலைவாணி...

இதை திரைப்படமாக எடுத்து இருந்தால், இப்படி எல்லாம் உண்மையில் நடக்காது என்பார்கள் அறி வி ஜீவிகளும் , வசதியான நிலையில் இருக்கும் வலை பதிவர்களும்...

அனால், வழக்கை என்பது , arivu ஜீவியும் அல்ல ..வலை பதிவரும் அல்ல.... சில சமயம் இனிமையாகவும், சில சமயம் கொடூரமாகவும் இருக்கும் ஒரு புதிர்...

அவர் கஷ்டங்களை நாம் உணரும் போது , நாம் காணும் பாலியல் தொழிலாளிகள் எல்லாம், எவ்வளவு கஷ்ட்டபடிகிரர்கள் என்ற கோணத்தில் சிந்திக்க முடிகிறது..... அவர்களை, இலக்காரமாகவோ, கவர்ச்சி பொருளாகவோ இனி பார்க்க கூடாது என தோன்ற வைகிறது இந்த புத்தகம்....

பாலியல் பற்றி புத்தகம் இருந்தாலும், ஆபாச வர்ணனைகளோ , கிளர்ச்சி ஊட்டும் படங்களோ இல்லாதது சிறப்பு .....
அதே போல , நல்லவர்களும் , அவர் வாழ்கையில் உண்டு என்று காட்டி இருப்பதும் சிறப்பு


படிக்க எளிமையான , சீரான நடையை தேர்ந்து எடுத்துள்ளார் , எழுத்து வடிவம் கொடுத்துள்ள ஜோதி நரசிம்மன்..
அவரை பற்றி குறிப்பு எதிவும் கொடுக்காதது ஒரு குறை....

நாவல் போல , எழுதி இருப்பது படிக்க எளிதாக இருந்தாலும், இந்த நடை, ஒரு பாலியல் தொழிலாளியின் நேரடியான உணர்வை நீர்த்து போக செய்துள்ளது என்றும் தோன்றுகிறது... ஆனால், பரவாயில்லை.... அவர்களின் கஷ்டத்தை மக்களிடம் கொண்டு பொய் சேர்ப்பதுதான் , நூலின் நோக்கம் என்றால் , அதில் வெற்றி பெற இந்த நடை உதவி இருக்கிறது...

புத்தகம் என்பது, அறிவை வளர்க்க, பொழு போக்க, கற்று கொள்ள என்றெல்லாம் இருந்தாலும், சக உயிர்களின் கஷ்டங்களை உணர்த்தவும் பயன் பட முடியும் என்று இப்புத்தகம் உணர்த்துகிறது....


*******************************************

பாலியல் தொழிலாளி என்ற சொல் சரியா ? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது... மென் பொருள் தொழில், ஓட்டுனர் தொழில் என்பது போல எந்த பெண்ணும இதை ஆர்வமாக கற்று கொண்டு செய்வதில்லை.... சில ஆண்கள் , அவர்களை பயன் படுத்துகிறார்கள் .. அவ்வளவுதான்... ஏதோ , பெண்கள் , ஆரவமாக் இந்த தொழில் செய்வது போன்ற தொனி , இந்த சொல்லில் இருக்கிறது...

விலை மாது என்பதும் தவறு தான்... வேறு சொல் தெரியாததால் இதே சொல்லை பயன் படுத்தி இருக்கிறேன்...
எந்த பெண்ணையாவது , அல்லது பெண்மை நேசிக்கும் எந்த ஆணையாவது இந்த சொற்கள் புண் படுத்தி இருந்தால் மன்னிக்கவும் ...


********************

7 comments:

 1. "புத்தகம் என்பது, அறிவை வளர்க்க, பொழு போக்க, கற்று கொள்ள என்றெல்லாம் இருந்தாலும், சக உயிர்களின் கஷ்டங்களை உணர்த்தவும் பயன் பட முடியும் என்று இப்புத்தகம் உணர்த்துகிறது...."

  Brilliant.

  ReplyDelete
 2. நண்பரே வாழ்க்கை என்பது அறுபது ஆண்டுகள் வாழ்ந்து மடிவது. ஆனால் ஒரு திரைப்படம் அறுபது ஆண்டுகள் ஓடுவதாக எடுத்தால் எப்படி இருக்கும். ஒரு விபசாரியின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிக்கிறேன் என்று சொல்லி ஒரு ஹேண்டி கேமை அவள் அறைக்குள் ஒரு நாள் இரவு பொருத்தி அதை எடிட் செய்து திரைப்படமாகவோ குறும்படமாகவோ வெளியிடமுடியுமா. திரைப்படம் என்பது வேறொரு ஊடகம். அங்காடித்தெருவோ விபசாரியோ கஷ்டங்களை சினிமாவுக்கான சாத்தியங்களோடு காட்சிபடுத்தவில்லை என்பது தானே எங்களின் ஆதங்கமே தவிர அ.தெருவ் கொடுமைகள் நடக்கவே இல்லை என்பதல்ல. அந்த திரைப்படத்தில் ஞாயம் இல்லை....

  ReplyDelete
 3. http://ungalnanbansarath.blogspot.com/2009/10/vibachaaram-sariyaa.html

  பெண்களை தன்னைப் போல் மதித்தால் விலை பேசும் எண்ணம் வராது.

  ReplyDelete
 4. குப்பை படங்கள் வந்துக்கொண்டிருக்கும் பொழுது தமிழில் அவ்வப்போது சில நல்லப் படங்களும் வருகின்றன. அதில் அங்காடித் தெருவும் ஒன்று. அங்காடித் தெரு படத்தில் கூறப்பட்டுள்ள பல விசயங்களும் உண்மையானவை. தொடர்ந்து நடந்துக்கொண்டும் இருக்கின்றன. ஒரு விபச்சாரியின் வாழ்க்கையை அரங்கேற்றம் என பாலச்சந்தர் 70களிலேயே எடுத்திருந்தார். அதில் வரும் பல காட்சிகள் அப்பொழுதே பேசப்பட்டவை.

  ReplyDelete
 5. நல்ல நூல் விமர்சனம்.

  ReplyDelete
 6. good sharing. thank u. life is more than what v imagine.

  ReplyDelete
 7. thank you for sharing.. fact is like fire which would burn sometimes, lights sometimes.. the one who can able to feel the pain of others is really a human being...! good keep it up..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா