Saturday, April 10, 2010

சானியாவும், எலிசபத் டைலரும்


செய்தி.... பழம்பெரும் நடிகை , எலிசபத் டைலர் அடுத்த திருமணத்துக்கு தயாராகிறார்... இது இவரது ஒன்பதாவது திருமணம் ஆகும்...

செய்தி...... சானியா , ஏகனவே திருமணம ஆன ஒருவரை, மணந்து கொள்ள முடிவு செய்திருப்பது, சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துயுள்ளது.... இஸ்லாம் மதத்தில் , பல தார வழக்கம் என்பது இயல்புதான் என்று பரவலான கருத்து இருந்தாலும், இந்து மதத்தை சேர்த்த ஆண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட திருமனகளை செய்து கொள்வது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.....

*************************************

எதிர் பாலரை ரசிப்பது என்பது இயல்பான ஒன்று.... எல்லை மீறாமலும், அடுத்தவரை கஷ்டபடுத்தாமலும் , எதிர்பாளர் ரசிப்பது மனித இயல்பு, மனித உரிமை...

அதே போல , திருமண உறவு பிடிக்காவிட்டால், அல்லது காதல் சரி படாது என தோன்றினால், அதை முறித்து கொவதுதான், அறிவு பூர்வமான செய்கை.. சட்ட சிக்கல் இல்லாவிட்டால், யாருக்கும் பாதிப்பு இல்லாவிட்டால், பல தார மணம் என்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பம்..அவரது உரிமை....

ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரை, இந்த உரிமைகள எல்லாவற்றையும், ஆண்கள் மட்டுமே எடுத்து கொள்வதுதான் நடக்கிறது....

பலரை சைட் அடிப்பதை ஒரு ஆண் பெருமையாக சொல்லிகொள்ளலாம்... தன சகோதரியோ, மனைவியோ அப்படி சொல்லி கொள்வதை அனுமதிப்பான, என்பது சற்று சங்கடமான கேள்வி

ஒரு பெண் பலரை மணந்து கொண்டு, ஒரு ஆண் போல பெருமையாக , தமிழ்நாட்டில் வாழ முடியுமா?

***************************************************************************************************************************************

ஒரு பாடல்....

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு...


நேத்து நானும் , என் மனிவியும் வெளியே போனோம்.... ஊர்ல எல்லா பொண்ணுங்களும் என்னை சைட் அடிச்சாங்க...... அதுனால என் மனைவுக்கு என் மேல செல்ல கோபம் ..என் கூட பேச மாட்டேனுட்டா ... அப்புறம் , சினிமாவுக்கு கூட்டிகிட்டு பொய் சமாதான படுத்தினேன்... என்று பெருமையாக தன் அழகை , கவர்ச்சியை ஒரு ஆண் கூறிகொள்வது போல இந்த குறள் அமைந்துள்ளது....

தன் மனைவி , சாதரணமாக மற்றவருடன் பேசுவதை கூட அனுமதிக்காத, இன்றைய ஆண் வர்க்கம், இதே போல தன் மனைவி பெருமை அடித்து கொண்டால் , என்ன செய்யும் என்று தெரியவில்லை....

மேலே சொன்ன குரலை தொடன்ர்தந்து வரும், மற்ற குறள்களும் அன்றைய ஆணாதிக்க மனப்பான்மையை படம் பிடித்து காட்டுகிறது..செல்ல சிணுங்கலுடன் சமாதானம் ஆகும் மனைவி, பலரை சைட் அடிப்பதை பெருமையாக நினைக்கும் ஆண் என குறள் பட்டையை கிளப்புகிறது....

ஆனால், உலகம் மாறி கொண்டு இருக்கிறது.... பெண்களும் பொருளாதார சுதந்திரம் அடைந்து வருகின்றனர்.....

இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து, வெளி நாடு பாணியில், விளையாட்டு வீராங்கனை , ஏழாவது திருமணம் என செய்தி வரலாம்...

யாரை நினச்சுடி தும்முற என கணவன் செல்லமாக சண்டை போடும் நிலை வரலாம் ( இப்போது போல சீரியாசாக கேட்க முடியாது)

3 comments:

 1. அனோனி நபர் கேட்கிறார் " ஒரு பெண் பலரை மணப்பதுதான் , பெண் உரிமையா "

  அப்படி சொல்லவில்லலை நண்பரே.... ஒருவரை மணந்து , அவருக்கு உண்மையாக வாழ்வதுதான் நல்லது... ஆனால், ஆண்களாகிய நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம்.. பெண்களுக்கு மட்டும் தான் , அடக்கம் என்று ஏமாற்றி வருகிறோம் அல்லவா ..அதுதான் தவறு....

  ReplyDelete
 2. செல்ல சிணுங்கலுடன் சமாதானம் ஆகும் மனைவி, பலரை சைட் அடிப்பதை பெருமையாக நினைக்கும் ஆண் என குறள் பட்டையை கிளப்புகிறது....//

  இன்னொரு விஷயம் பாருங்க, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண் கவனிக்கும் அளவு பெண் சைட் அடித்திருக்கிறாள்

  ReplyDelete
 3. இது போன்ற நுணுக்கமான பார்வை , நம் இல்க்கியங்களில் இருக்கு..... அதை கவனிக்கும் பார்வை சிலருக்கே இருக்கு

  நீங்க கவனிச்சு இருக்கீங்க... சூப்பர் ...

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா