Friday, April 9, 2010

ராணுவ "வீரர்களின் " வெறித்தனம்


ஒரு செய்தி....

புனே யில், ஒரு பெண் தான் விரும்பும் ஒரு ஆணுடன் , இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்...

வழியில், எரிபொருள் பிரச்சினை காரணமாக , வண்டி நின்று விட்டது.. அந்த நேரம் அந்த பக்கமாக வந்த, தேசத்தை காக்கும், ராணுவ வீர்கள்வீரர்கள் ( ! ? ) , யாரும் இல்லாத இடத்தில் ஒரு பெண்ணும் , ஒரு ஆணும் தனியாக இருப்பதை பார்த்து விட்டனர்..அவர்களுக்குள் இருந்த மிருகம் விழித்தது... அந்த ஆணை அடித்து சாய்த்து விட்டு அந்த பெண்ணிடம் மிருகத்தனத்தை காட்டினர்...
தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்....

*********************************************
ஒழுக்கமின்மை எல்லா இடத்திலும் இருக்கிறது... அனால் , எல்லோரும் சமுகத்தை மாற்ற வேண்டும் என விரும்பிக்றோம்....நாம் எல்லோரும் சேர்ந்தது தானே சமுகம்... ? நாம் மாறாமல் இருந்து கொண்டு, சமுகத்தை மாற்ற வேண்டும் என்றால், சமுகம் என்று தனியாக எதாவது இருக்கிறதா என்ன?

சமுக புரட்சி பேசும் , வலை பதிவர்களாகிய நாம், பெண்ணை கவர்ச்சி பொருளாக , நம் பதிவில் வெளியிடவில்லையா.... நடிகையும் இடுப்பை கிள்ள வேண்டும் போல் இருந்தது என எழுதவில்லையா... ? நாம் மனதவில் செய்வதை , அந்த ராணுவ " வீரர்கள் " , உண்மையில் செய்தனர்.. நமக்கும் , அவர்களுக்கும் அடிப்படையில் என்ன வித்தியாசம்....?

இந்த செய்தியை , ஆணாதிக்க மனப்பான்மையுடன் , ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது.... பெண்ணின் கற்பை அழித்து விட்டார்களாம்... அந்த வார்த்தையே ஒரு ஆண் ஆதிக்க வார்த்தை... கற்பு என்பது மனம் சார்ந்தது..ஆண் , பெண் என இருவருக்கும் பொதுவானது...
பெண்ணை இழிவு படுத்துவதில், மத வேறுபாடு, கடவுளை நம்புவது - இல்லை என நம்புவது, வேலை வேறுப்பாடு என்றெல்லாம் எதுவும் இல்லை.... எல்லோரும் இப்படித்தான் இருக்கிறோம்..சமுகம் மாற வேண்டும் என போலியாக பேசுகிறோம்... சமுகம் என்பது நாம் தான் ...

இது போன்ற வழக்குகள், உடனடியாக விசாரிக்கப்பட்டு, ஒரு மாதத்துக்குள் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்...

************************************************************************************

ஒரு பாடல்

எத்துனை ஆற்றுள் இடுமணல் நீர்த்துளி
புற்பனு உக்க மரத்து இலை நுண்மயிர்
அத்துனையும் பிறர் அம்சொளினார் மனம்
புக்கனம் என்று பொதி அறையப்பட்டார்..

அணுக்கும் கற்பு நிலை வேண்டும் என என்றே வலியுறுத்திய தமிழ் பாடல் இது... " வளையாபதி " யில் உள்ளது...
மனதளவிலும் கூட , உனக்கு உரிமை இல்லாத பெண்ணை தவறாக பார்கதே... என்று கூறும் இப்ப்பாடல், ஆற்று மணல், புல்லின் பனித்துளி, மரத்தின் இலைகள், உடலில் உள்ள மயிர்கால்கள் எப்படி எண்ணில் அடங்காத அளவில் உள்ளதோ, அதே போல, கற்பில ஆண்களும் எண்ணில் அடங்காத அளவில் உள்ளனர் என ஆண்களுக்கு சூடுவைக்கிறது

3 comments:

 1. அந்த இடத்துல அவங்க ரெண்டு பெரும் (பெண்ணும் பையனும்) என்ன செஞ்சிட்டு இருந்தாங்க என்கிற கேள்வி வரும்... அப்புறம் அதுவே அந்த கொடுமையை நியாயப்படுத்த உதவும் (உதாரணத்துக்கு குஷ்பு என்னமோ தப்பா சொல்லிட்டாங்கன்னு அவங்களைப் பத்தி என்ன என்ன அசிங்கமா பேச முடியுமோ அதை எல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எத்தனை பேரு சொன்னாங்க- சொல்றாங்க. கற்பு ங்கற பேர்ல பெண்களோட உரிமை எப்படியும் சூரையாடப்படுது.)

  நீங்க சொல்ற மாதிரி நம்ம மனசில பரவலா உள்ள ஒரு உணர்வு இவங்க மூலமா வெளிப்பட்டிருக்கு: அது கெட்டுப் போன பெண்ணை யாரும் என்ன வேணாம் பேசலாம், செய்யலாம் என்கிற திமிருதான்.

  எல்லாரும் அந்த ராணுவத்துல வேலை செய்யற ரெண்டு பேரையும் திட்டுவாங்க: ஆனா அவ கெட்டுப் போயிட்டா, இவ மோசம் போயிட்டான்னு வககணை பேசும்போது, வெட்டி நாயத்துல நம்ம தவிப்பைத் தணிச்சுக்கும்போது - அவங்க செஞ்சதையே நாமளும் நாக்கால செய்யறோம்கறது நம்மல்ல எத்தனை பேருக்கு தெரியும்?

  ReplyDelete
 2. .

  ஒழுக்கமா இருப்பது, இரு பாலருக்கும் நல்லது...

  ஒருவர் ஒழுக்கத்தை, இன்னொருவர் அழித்து விட்டார் என பொருள் படும் தமிழ் பத்திரிக்கை சொல்லாட்சியே தவறு...

  "அவங்க செஞ்சதையே நாமளும் நாக்கால செய்யறோம்கறது நம்மல்ல எத்தனை பேருக்கு தெரியும்
  சரியா சொன்னிங்க சார்.
  நித்யா விஷயத்துல, நித்தியை விட, ரஞ்சிதவுக்குதான் பாதிப்பு அதிகம்...

  ReplyDelete
 3. //நாம் எல்லோரும் சேர்ந்தது தானே சமுகம்... ? நாம் மாறாமல் இருந்து கொண்டு, சமுகத்தை மாற்ற வேண்டும் என்றால், சமுகம் என்று தனியாக எதாவது இருக்கிறதா என்ன?//

  சத்தியமான வார்த்தைகள்.. மாற்றங்கள் யாவையும் நம்முள்ளிருந்தே தொடங்குகின்றன என்பதை முழுமையாக நம்புபவன் நான்..

  என் பதிவில் பல இவற்றைப் பிரதிபலிப்பதைப் போன்றே அமைந்திருக்கும்..

  நன்றி..

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா