Thursday, April 8, 2010

தொடரும் அலட்சியம்... தொடரும் விபத்துகள்


ஒரு செய்தி _

சரியான அறிவுப்பு பலகை இல்லாமல், சாலைகள் இருப்பதால் , நடக்கும் விபத்துகளை பற்றி இப்போதுதான் எழுதினேன்..

அதே பாணியில் பல்லாவரத்தில் ஒரு விபத்து... கட்டி முடிக்கபடத பாலம்.... உள்ளூர் மக்களுக்கு அது தெர்யும்... தெரியாத ஒருவர் , அதில் ஏறி சென்றால் என்ன ஆகும்... பாதியில் தொங்கும் பாலத்தில், அதி வேகமாக செல்லும் பொது திடீரென நிறத்த முடியாது....
இப்படி ஒரு விபத்து நடந்து இருக்கிறது... ஒரு அறிவிப்பு பலகை, இதை தடுத்து இருக்கும்...

ஒரு பாடல்...

சிறு வயதில், மற்றவர் சைக்கிள் ஓட்டும்போது, நமக்கும் ஒரு சைக்கிள் வேண்டும் என ஏக்கமாக இருக்கும், .. உலகத்தில் நாம்தான் பரிதாபமான ஆள் என தோன்றும்..ஒரு வழியாக சைக்கிள் கிடைத்தவுடன், " சைக்கிள் எல்லாம் இப்ப சாதரணமா ஆகி போச்சு.... யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என நினைப்போம்...
நமக்கு ஒன்று கிடைத்தவுடன், எல்லோருக்கும் அது கிடைத்து விடுகிறது..என்பதுதான் நம் நினைப்பு..அப்படி சிலருக்கு கிடைக்கவில்லை,என்றால், அவர்கள் அதை பெரும் அளவுக்கு உழைக்காதவர்கள், திறமை இல்லாதவர்கள், சோம்பேறிகள் என்றுதான் நினைப்போம்...
இந்தியாதான் வல்லரசு ஆகி விட்டதே... இன்னும் ஏன் கஷ்டம் , ஏழ்மை என்றெல்லாம் சொல்கிறார்கள் என ஒரு சராசரி மனதுக்கு புரியாது...
நாம் நாளை, கஷ்ட நிலைக்கு சென்றால் நம் நிலையும் இதுதான் .. நம்மை யாரும் பொருட்படுத்த போவதில்லை, என்ற உண்மையை இந்த பாடல் விளக்குகிறது...

கெட்டேம் இது எம் நிலை என்று சார்தற்கண்
நட்டார் அல்லார் நனிமிகுபவர் சுற்றம்
பெட்டது சொல்லி பெரிது இகழ்ந்து ஆற்றவும்
எட்ட வந்து ஓரிடத்து ஏகி நிற்பவே


ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான , வளையாபதியில் இது இடம் பெற்றுள்ளது


ஒருவர் கஷ்டபட்டலோ, ஒருவர் விபத்தில் சிக்கினாலோ, அந்த இடத்தில் நாம் இருந்திருக்கவும் வாயப்பு இருந்தது என்பதை நாம் உணர்வதில்லை என்பது ஒரு வினோதம்

5 comments:

  1. These accidents shows that Indian Officials never learn anything from other countries ex: singapore

    ReplyDelete
  2. http://timesofindia.indiatimes.com/city/chennai/Car-flies-off-unfinished-flyover/articleshow/5776328.cms

    இந்த செய்தியைப் படிச்சதும் உங்க பதிவுதான் நினைவுக்கு வந்தது: பல்லாவரத்துல ஒரு கார் முற்றுப் பெறாத ப்ளை ஓவருல இருந்து ரயில் தண்டவாளத்துல விழுந்திருக்கு: அங்கயும் அந்த ப்ளை ஓவருல மேல போகக் கூடாதுங்கறதுக்கு எந்த அறிவிப்பும் வைக்கப்படல... இதுக்கெல்லாம் அரசாங்கத்தைத் திட்டி பிரயோசனமில்ல. நம்ம மக்களே ரொம்ப மந்தமா நாம செய்யற/ செய்யாம விட்ட வேளை யாரை எப்படி பாதிக்குதுன்னு அக்கறை இல்லாம வீணாப் போயிட்டாங்க.

    ReplyDelete
  3. மன்னிக்கணும்- அந்த கமெண்ட் இந்த பதிவுல வந்திருக்கணும்: http://pichaikaaran.blogspot.com/2010/04/blog-post_06.html

    ReplyDelete
  4. "நம்ம மக்களே ரொம்ப மந்தமா நாம செய்யற/ செய்யாம விட்ட வேளை யாரை எப்படி பாதிக்குதுன்னு அக்கறை இல்லாம வீணாப் போயிட்டாங்க"

    சரியா சொன்னிங்க சார்... மந்தமா இருந்துட்டு, அரசு சரியில்லை , சமுகம் சரி இல்லைன்னு சொல்றாங்க... அரசு, சமுகம் என்றெல்லாம் தனியா எதுவும் இல்லை... நாம் தான் சமுதாயம் என்பது புரியவில்லை...

    சும்மா, சமுதாய புரட்சி , மாற்றம்னு கனவு காண்றாங்க

    ReplyDelete
  5. people's also should get alert. ayya avarukkaha dhaniya road pottu irukkangannu ninaichu poyittaru bola.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா