Wednesday, April 7, 2010

அவாள் ஆதிக்கம் , அடங்கி விட்டதா? - கேஸ் study


ஒரு காலத்தில், ஒரு வகுப்பினரை தவிர மற்றவர்கள் வேதம் ஓதினால், நாக்கில் சூடு வை... மந்திரம் கேட்டால், காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்றனர்... இன்று அப்படி யாரும் சொல்ல முடியாது.... அனால் ஜாதி வெறி ஒழிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை... அது வேறு வைகையில் தந்திரமாக வேலை செய்கிறது... இதோ, ஒரு கேஸ் study .

********************************************************************************

என் நண்பன் ஒருவர்.. மிகவும் நல்லவர்.. நல்ல பதவியில் இருப்பவர்... யாரோ ஒருவர் , விஷ்ணு சஹஸ்ரநாமம் சொன்னால் நல்லது என சொல்ல, நண்பருக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டது...

தினமும் சொல்ல ஆரம்பித்தார்... முதலில் கஷடமாக இருந்தாலும், பிறகு பழகி விட்டது.... '' என்ன சார்... மந்திரம் சொல்ல ஆரம்பித்ததும் , சாமி தரிசனம் கொடுக்கிறாரா ? '' என நான் கேட்டால், '' சாமி தெரிகிறாரோ..இல்லையோ..மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது என்பார்...

இவர் இப்படி மந்திரம் சொல்வது , அவருடன் பணியாற்றும் ''அவாள் '' இனத்தை சேர்ந்த, ஒருவர்க்கு தெரிய வந்தது....

அவருக்கு , அவாளை தவிர மற்றவர்கள் மந்திரம் சொல்வது பிடிக்க வில்லை... அனால், முன்பு போல , ஈயத்தை காய்ச்சி ஊற்ற்வோம் என சொல்லவும் முடியாது....

ஒரு நாள் நண்பரை அழைத்து பேசினர்.. '' சார், நீங்க மந்திரம் சொல்வது நல்லதுதான்... ஆனால் அதில் சில வழி முறைகளை பின்பற்ற வேண்டும்.. இல்லை என்றால், பயங்கரமான பின் விளைவுகள் ஏற்படும் ''

பயந்து போன நண்பர் '' என்ன சார் வழி முறைகள் '' என கேட்டார்..

அவாள் ஆரம்பித்தார்

1 . ''முறையான ஒருவர்'' மூலம் தான் சொல்ல கற்று கொள்ள வேண்டும் ( முறையான ஒருவர் - யார் அவர் ? புரிகிறதா ? )

2 சும்மா புத்தகம் படித்து சொல்ல கூடாது

3 ஆம்பல் மலர், மவ்வல் மலர், ஊதல் மலர் போன்ற மலர்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் ...அந்த மலர்கள் வண்டு மொய்க்காததாக இருக்க வேண்டும் ( அதெல்லாம் எங்கு கிடைக்கும் ? )

4 சுத்தமான பசுவின் நெய்யை பயன்படுத்தி விளக்கு ஏற்ற வேண்டும் ...அந்த பசு ''நல்ல மனிதரால்'' வளர்க்கப்பட்டு இருக்க வேண்டும் ( நல்ல மனிதர் - புரிகிறதா )
( அதாவது, மந்திரம் எல்லாம் கண்டவனும் சொல்ல கூடாது என்பதை சொல்லாமல் சொன்னார், அவாள் இன சக ஊழியர் )

இதைகேட்ட நண்பர் வெலவெலத்து போனார்... மந்திரமும் வேண்டாம் , தந்திரமும் வேண்டாம் என சஹஸ்ரநாம புத்தகத்தை அவாள் சக ஊழியரிடமே கொடுத்து விட்டார்...

அவாள் நபர் மகிழ்ச்சியுடன் விடை பெற்றார்...

இது ஒரு உதாரணம்தான்... ஒவ்வொரு துறையுளும் அவாளின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் முன்பு போல வெளிப்படையாக இல்லை என்பதுதான் உண்மை....

அதற்காக அந்த வகுப்பில், எல்லோரும் கெட்டவர்கள் என சொல்லவில்லை... ஆதிக்க மனப்பான்மை எப்படி தந்திரமாக வேலை செய்கறது என்பதை பகிர்ந்து கொண்டேன்... அவ்வளவுதான்

4 comments:

 1. ஹும்.. அந்த அவாளுக்கு, விஷ்ணு சகஸ்ரநாமத்தை உலகிற்கு உரைத்த பீஷ்மரோ, அதனைக் கேட்ட க்ருஷ்ணரோ, பாண்டவர்களோ அவாள் கிடையாதுன்னு தெரியாது போலும்.. இன்னொன்று விஷ்ணு சகஸ்ரநாமம் மந்திரம் கிடையாது... சமஸ்க்ருதத்தில் இருக்கும் எல்லாமே மந்திரம் என்று நினைக்கும் அதி புத்திசாலி அவர்(?)னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 2. நச் னு சொன்னீங்க

  ReplyDelete
 3. //ஒவ்வொரு துறையுளும் அவாளின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்கிறது..ஆனால் முன்பு போல வெளிப்படையாக இல்லை என்பதுதான் உண்மை....// ஒருவேளை இன்னும் சில தலை முறைகள் கழித்து திருந்தினாலும் திருந்தலாம்.

  ReplyDelete
 4. இதை ஆதிக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால் தாங்கள்தான் உசத்தி திமிர், தொலைகிறார்கள் என்று நம் வேலையைப் பார்க்கவேண்டியதுதான்.
  சகஸ்ரநாமம் என்றால் ஆயிரம் பெயர்கள் என்று அருத்தம். அந்தப் பேர்களுக்கு பின்னால், ”பல துதி” என்று அதைப் படிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று பக்கம் பக்கமாக இருக்கும். ஏமாந்தவர்கள்தான் அவற்றைப் படிக்கிறார்கள்.


  இதை மனப்பாடமாக சொன்ன ஒரு குடும்பத்துக்கு நேர்ந்த கதியை பார்த்த காரணத்தாலும், பதிவுகள் மூலம் பெரியாரின் கருத்துக்களையும், தமிழ் ஆய்வுக் கட்டுரைகளையும் படித்தபின், அவற்றின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போய்விட்டது. இப்போது சுக்தங்கள், தோத்திரங்கள் என எல்லாக் குப்பைகளும் மூலையில் கிடக்கின்றன - உசாத்துணைக்காக வைத்திருக்கிறேன்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா