Friday, April 16, 2010

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே


" என்னம்மா... சாமிக்கு பூ கட்டி முடிச்சுட்டியா ? "
அப்பாவின் குரலை கேட்டதும் வேகமாக பூ தொடுக்க ஆரம்பித்தாள் ரேவதி....

தினமும், சாமிக்கு பூ மாலை சாத்தி, பூஜை செய்ய வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத விதி...

தினமும் சாமி கும்பிடுவதா, அல்லது அதிர்ஷ்டமா, அல்லது உழைப்பா, என்றெலாம் தெரியவில்லை...அந்த குடும்பம் நன்றாக இருப்பது என்னவோ நிஜம்...

" உன்னை ஒரு நல்ல இடத்துல கட்டி கொடுதுட்ட, பகவான் நினைப்பிலேயே என் காலத்தை ஓட்டிடுவேன் " என அடிகடி சொல்லுவார்....

***
அன்று நல்ல மழை... ரேவதியும் அம்மாவும் மட்டும் இருந்தார்கள்... அப்பா கோயில் சென்றி இருந்தார்....

வெளியே ஏதோ முனகல் சத்தம்... ரேவதி எட்டி பார்த்தாள்.. யாரோ ஒரு முதியவர்... குளிரில் நடுங்கி கொண்டு இருந்தார்.... ரேவதிக்கு பாவமாக இருந்தது... வீட்டில் அப்பா வேறு இல்லை... எப்படி உதவுவது...

சரி ...பரவயில்லை என நினிதவள், ' அய்யா..கொஞ்சம் அந்த பைக் பக்கத்துல வந்து உட்காருங்க... மழை மேலே படாது என்று, பைக் நிறுத்தும் இடத்தில் உட்கார வைத்தாள்"

" பாவம் டீ ..மழை நிற்கும் வரை இருந்துட்டு போகட்டும்,," அம்மாவும் ஆதரவு கரம் நீட்டினாள்....

அதற்குள் அப்பாவும் வந்து விட்டார்... " ஒரே மழை..எப்படியோ வந்துட்டேன் ... அது யாரு ? ":

" மழைல யாரோ கஸ்த்ட பட்டங்க... அதன் வெளியிலேயே, உட்கார வச்சேன் "

" சரிம்மா... யாரையும் நம்ப முடியாது.... எச்சரிக்கைய இருக்கணும் ..சரி மழை நின்னுடுச்சு... அவரையும் கூப்பிடு ..சாபிடிடு கிளம்பட்டும் "

அனைவரும் சாப்பிட அமர்ந்தோம்.... அம்மா பரிமாறினாள்..

" அய்யா பெரியவரே..உங்களுக்கு பிடிச்ச சாமியை, ரெண்டு நிமிஷம் பிரார்த்தனை பண்ணுங்க..இல்லேன்னா, நான் சொல்ற ஸ்லோகம் சொல்லுங்க... சாப்பிடலாம் "

பெரியவர் சிரித்தார்... " நன்றிங்க... ஆனா , நான் சாமி எல்லாம் கும்பிடுவது இல்லை... எம்பது வருஷமா இப்படித்தான் இருக்கேன்... கடவுள் இல்லைனு உறுதியா நம்புறேன் "

ரேவதிக்கு குழப்பமாக இருந்தது... " பார்க்காத கடவுளை, இல்லை என்றோ இருக்கிறார் என்றோ நம்புவது பைத்திய கார தனம் அல்லவா... எந்த நம்பிக்கையும் இல்லாமல் இருந்தால்தானே உண்மை தெரியும் ?"

அப்பாவுக்கு பெரியவர் சொன்ன பதில் எரிச்சல் மூட்டியது....
" நான் பல வருஷமா சாமி கும்டிட்றேன்..வீட்ல சில விதிகளை கடை பிடிக்றேன்... நான் கும்புட்ற சாமிய தான் கும்பிடனும்னு சொல்லல... ஏதோ ஒரு சாமிய . கும்பிடுங்க... சாப்பிடலாம் "

பெரியவர் புன்னகைத்தார்... " எனக்கு அதுல எல்லாம் நம்பிக்கை இல்லை"

"அப்படீனா, நீங்க கிளம்பலாம்... போயிட்டு வாங்க...." கண்டிப்பாக சொன்னார் அப்பா....

பசியுடன் உட்கார்ந்து இருந்த முதியவர், ஏக்கத்துடன் சாப்பாட்டு தட்டை பார்த்தபடி எழுந்தார்...

திடீரென பூஜை அறையில் இருந்து குரல் கேட்டது....

உள்ளே யாரும் இல்லையே... எப்படி குரல் வருகிறது? கடவுளா...?

" அருமை பக்தா.... நான் இருப்பதை நம்பாதவனுக்கு, என்னை தூற்றுபவனுக்கு, எம்பது வருடங்களாக நான் உணவு கொடுத்து வருகிறேன்.... ஒரே ஒரு நாள் அவனுக்கு நீ உணவிட மாட்டாயா ? அப்படிஎன்றால், நீ என்னை பற்றி என்னதான் புரிந்து கொண்டாய் ?"

அப்பாவுக்கு புரியவில்லை..ரேவதிக்கு புரிந்தது போல இருந்தது.

*************************************************

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா