Wednesday, April 21, 2010

நான் பேச நினைப்பதெல்லாம் , நீ பேச வேண்டும்" அவ கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு தெரியலைமா.. ஆனா நானே சொல்லிகறேன்...." என்று அம்மாவை , உறவினர் வீட்டில் தங்க வைத்து விட்டு, நான் மட்டும் தீபிகா வீடு சென்றேன்... ஆனால் எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை..

திருமணம் நிச்சயம் ஆன நாளில் இருந்து எதனை முறை பேசி இருப்போம்.,,,, என்னவெல்லாம் பேசி இருப்போம்.... அனால், இன்று?

" ஹாய்.. என்ன திடீர்னு வீட்டுக்கு வந்து இருக்கீங்க... வீட்ல யாரும் இல்லைங்கறது அப்படி தெரியும்" குறுப்புடன் கேட்டால்..

" ஒரு முக்கியமான விஷயம் பேசணும் " அவள் சொன்னதை ரசிக்காமல் சொன்னேன்...

" டீ சாப்பிடிகிட்டே பேசலாம் "

" அதெல்லாம் வேண்டாம் "

எப்படி ஆரம்பிப்பது....?

அவள் என் பைலை புரட்டினால்..உள்ளே ஒரு மெடிக்கல் ரிபோர்ட்... என்ன இது.... புரட்டினால்..

சட் என அதை பிடிங்கினேன்..அதற்குள் லேசக படித்து விட்டால்...

" ஒஹ்... கான்சர்... யாருக்கு " அதிசுயுடன் கேட்டாள்..

சற்று யோசித்த பின் சொன்னேன்..

" எனக்குத்தான்... குணமாக வாய்ப்பு இருக்காம்...ஆன நிறைய செலவ்கும்,,, என் பிசினசை தொடர முடியாது ..அதான் கல்யாணத்தை நிறுத்த சொல்ல வந்தேன்... உங்க அப்பா இருந்தா அவர் கிட்டே சொல்லலாம் நு வந்தேன்... வேறு யாராவது கல்யாண செஞ்சுக்கோ...சாரி..செஞ்சுக்கோங்க... வர்றேன் "

திடுகிட்டல் அவள்...

" லூசு மாதிரி பேசாதீங்க.... உங்க நல்ல மனசு, நல்ல குடும்பம் , இதை எல்லாம் பார்த்துதான் , கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்... உங்களை கணவாணவே மன்சவில் எதுகிட்டேன்... இனி எப்படி பிரியறது "

" பிரக்டிகல பேசு ... கல்யாணம் பண்றது சந்தோஷமா இருப்பதர்காததன்... என்னை கட்டி கிட்ட, போராட்ட தான்... வேண்டாம்..."

" இலிங்க...கல்யாணம் என்பது, சந்தோசம் , துக்கம் ரெண்டையும் பகிர்ந்து கொள்ரதுக்குதான்... ஒரு வேளை, நீங்க இதை சொல்லாம ஏமாத்தி இருந்து, நான் கண்டு பிடிச்சு இருந்தா, கல்யாணத்தை, உடனே நிறுத்தி இருப்பேன்... இப்ப உங்களை மதிக்றேன்..காதளிக்றேன்..இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும்..சரி..எனக்கு வேளை இருக்கு.... நான் கிளம்புறேன்..."என் பதிலை எதிரபாராமல், மின்னல் என தன அறைக்கு சென்றாள்..

***********

உறவினர் வீடு சென்றேன்.... அம்மாவுடன், அப்பாவும் இருந்தார்..

" என்னப்பா.... நீங்க எப்படி இங்கே ? " -அவர் உடல் நலம் பதிகப்படவ்ர் என்பதால், இங்கு வருவதையோ, எதற்கு வந்து இருக்றோம் என்பதையோ அவரிடம் சொல்லவில்லை.... இனிமேல் சொல்லலாம்...
அம்மா சொல்ல ஆரம்பித்தல்...

" தீபிகாவை நம்ம எல்லோருக்கும் பிடிச்சு போச்சு... நல்ல வசதியான குடும்பம்..நல்ல பொண்ணு.... நேத்து திடீர்னு அவுங்க அப்பா , போன் செஞ்சார்... அவர் பிசினசல, எதிர்பாராத நஷ்டமாம்... மீண்டு வர வாய்ப்பே இல்லயம்... இப்ப என் பொண்ணு கலயந்த்தை நான் சொன்ன மாதிரி, பிரமாண்டம பண்ண முடியாது... நகை எதுவும் போட முடியாது... அதுன்னால , இந்த கலயாந்தை நிறுத்திடலாம்... வேற பொண்ணு பார்த்துகொக நு சொன்னாரு "

அப்பா அதிர்ந்த்கார்... " நீங்க என்ன சொன்னிங்க .என் கிட்ட ஏன் டிஸ்கஸ் பண்ணல.. "

" இந்த விஷயம் அவரு பொண்ணுக்கு கூட தெரியாதாம்... அவ கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல..கலயனம்னு ரொம்ப சந்தோஷ பட்ட... உங்களை அவளுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.அவ கனவை கலைக்க என்னக்கு தைர்யம் இல்ல... நீங்களே சொல்லிடுங்க ..அம்மா இல்லாத பொண்ணு சொன்னாரு " அம்மாசொன்னால்...

" என்ன முடிவு எடுக்கனும்னு சரியா தெரியலைப்பா... அவளோட நேர்ல பேசலாம்னு , நான் மட்டும் அவ வீட்டுக்கு போனேன் ..அதெல்லாம் சரி..இந்த மெடிக்கல் ரிபோர்ட், என் பைல எப்படி வந்தது "

" இது என் நண்பநோடதுட... கை தவறி உன் கிட்ட வந்துச்சு..சரி அதை விடு..அதை பத்தி இப்ப என்ன ...சொல்லு... அவ என்ன சொன்ன.. நி என்ன முடிவு எடுத்த ? "

" நான் பேச நினைத்தை அவளே பேசிட்டா.. நான் பேசுறதுக்கு ஒன்னும் இல்லை.. "
என் புன்னகை அவர்கள்களுக்கு என் முடிவை உணர்த்தி விட்டது என்பதை அவர்கள் புன்னகை உணர்த்தியது

****************************************

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா