Sunday, April 11, 2010

சங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், சிரிப்பினில் குறைவதுண்டோ




"தமன்னா இடுப்புக்கு மயங்குனது, தகிக்ற அடுப்புல விழ வச்சுருச்சே " மங்குனி மருதப்பன் , தூக்கத்தில் இருந்து என்னை எழுப்பி சொன்னதை கேட்டு இப்படித்தான் நினைத்து கொண்டேன்... ஞாயிற்று கிழமை தூக்கம் போச்சே என்ற கவலையும் சேர்ந்தது..

வழக்கமாக, ரூமில் இருக்கும் கணிப்பொறியை நான் சீண்டுவதில்லை... பையா படம் பார்த்ததில் இருந்து, மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கும் ஆர்வம் எழுந்தது...
எனக்கு படம் பிடித்து இருந்த்யது.... அனால் மங்குனி " இதெல்லாம் படமா ' என கிண்டல் செய்தான்....

கூகுல் சென்று பையா என தட்டச்சினேன்... பல விமர்சங்கள் தோன்றி அசத்தின... பெரும்பாலும் படத்தை திட்டி இருந்தார்.. சிலர் மட்டும் பாராட்டி இருந்தனர்... அதிலும் ஒருவர் தமன்னா இடுப்பை புகழ்ந்து இருந்தது எனக்கு பிடித்து இருந்தது.... சூப்பர் விமர்சனம் என பின்னூட்டம் இட விரும்பினேன்... அது, பெயர் , கடவு சொல் எல்லாம் கேட்டது... தமன்னாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற வெறியில், பிதிதாக , கணக்கு தொடங்கி, முதல் பின்னூட்டமாக, உங்கள் விமர்சனம் அள்ளி கொள்ள தூண்டியது ..தமன்னா இடுப்பு , கிள்ளி கொள்ள தூண்டியது என எழுதி , அத்துடன் அதை மறந்தேன்...

இன்று ஞாயிறு என்பதால் , நிம்மதியாக தூங்கி கொண்டு இருந்தேன்.... அப்போதுதான், மங்குனி என்னை எழுப்பினான்... "என்னனே , பொறுப்பு இல்லாம தூங்குரஈங்க... சங்க கூட்டத்துக்கு நேரம் ஆச்சு "

" என்னடா சங்கம் ..என்ன கூட்டம் "

" பதிவர்கள் சங்க கூட்டம்னே "

" அதுக்கும் , எனக்கும் என்னடா சம்பந்தம் "

" அன்னிக்கு நீங்க , அண்ணி இடுப்பு சூப்பர்னு பின்னஊடம் போட்டீங்கள் ல .. இப்ப நீங்களும் பதிவர்னே... உங்களையும் invite செஞ்சு இருக்காய்ங்க .. போகலேன்னா பிரச்சினை ஆயிடும் "

தூக்கம் போனது எரிச்சலாக இருந்தாலும், அவன் அண்ணி என்று சொன்னது கொஞ்சம் ஆறுதாலக இருந்தது... இப்படி அவன் சொல்லுவது ஓசி டீக்குதான் என்றாலும், சந்தோஷமாக இருந்தது...

" சாப்பாடு வாங்கி தருவாய்ங்க லாடா "

" அதெல்லாம் தெரியல... வாங்க ..போகலாம் ..நேரம் ஆச்சு "

*******************************

கடற்கரை அருகில் , சங்க கூட்டம் என சொல்லி இருந்தாலும், ர்ந்த இடத்தில் என கண்டு பிடிக்க முடியவில்லை....

படித்தவர் போல் தோன்றிய ஒருவரிடம் கேட்டோம்...

" சார்..இங்க பதிவர்கள் கூட்டம்.. எங்கே "

" இன்னிக்கு லீவு தம்பி... பத்திர பதிவு எழுத்தர்கள் இன்னிக்கு இருக்க மாட்டாங்க... நாளைக்கு , ஆபீஸ் போய்டுங்க... அங்கே ராமனுஜம் எனக்கு தெரிஞ்சவன் தான்... உயரமா, கண்ணாடி போட்டுண்டு இருப்பான் "

அரம்பமே சரி இல்லையே... சரி லோக்கல் ஆள் யார்கிட்டயாவது கேட்போம்...

" அய்யா... இந்த இன்டர்நெட்... "

" எனாது ? " எங்களை விநோதம்க பார்த்தார் லுங்கி....

" இந்த வலை பதிவில எழுது வாய்ங்கள்ள... அந்த கூட்டம் எங்கே நடக்குது ?' செந்தமிழில் கேட்டேன் நான்..

" அதுவா,,, நேர போங்க... " என்ருய் கை காட்டினார் அவர்..

காட்டிய திசையில் சென்றோம்... அங்கு பத்து பேர் மட்டுமே இருந்தனர்... என்னடா சங்கத்துல, பாத்து பேர்தானா .. இங்கேவ கூட்டம் நடக்குது "

என்னை நக்கலாக பார்த்தான் , மங்குனி..." அண்ணே.. இது மீன் பிடிகிற வலை , காய பூட்டு இருக்க்னக.. நாம நினைகிற வலை இல்ல "

அடங்கொய்யால. என நினிதபடி சுற்றி அலைந்தோம்..ஓரிடத்தில், காரசாரமாக சத்தம் கேட்டது... " அட இதுதான் சக கூட்டமா," உள்ளே சென்று அமர்ந்தோம்...

என்ன பேசுகிறார்கள்... எதை பற்றி ஒன்றும் புரியாமல் உட்கார்ந்து இருந்தோம்...

" உங்க கருத்தை தைரியமா சொல்லுங்க" ஒருவர் மன்குணியை கேட்க, அவன் திகைத்து போனான்.. அனால், சமாளித்து எழுந்தான்..

" ஒரு முடிவுக்கு வர்றதுக்கு முன்னாடி, யோசிக்கணும்... யோசிக்ரதுகு முன்னாடி பேசிக்க கூடாது, பெசிடதுகு அப்புறம் யோசிக்க கூடாது.... எனவே, சங்க முடிவை யாருக்காகவும் மாற்ற கூடாது... இந்த முடிவை, நாங்கள் , முழுமையா ஆதரிக்றோம் " என் சார்பாக அவனே பேசி அமர, எனக்கே அவனை பார்க்க சற்று பொறாமையாக இருந்தது...

கூட்டம் முடிந்தாலும், என்ன முடிவு எடுத்த்தார்கள் ..எதை நாம் ஆதாரித்தோம் என இருவருக்கும் புரியவில்லை...

முன்பே ஆதரித்து விட்டதால், யாரிடமும் கேட்கவும் கூச்சமாக இருந்தது...

எல்லோரும் போகும் வரை காத்து இருந்தோம்... ஒரே ஒருவர் , இருந்தார்.. அவரை தயங்கிய படி அணுகினோம்..

" சார், நீங்க சங்கத்துல இருக்கிங்கள ? " முதலில் அவர் யார் என தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் கேட்டோம்..

" நான் சங்கத்துல இருக்கேனா, இல்லையாங்கறது எப்ப பிரச்சினை இல்லை... சங்கம் இருக்கா .. இல்லையா ..அதுதான் கேள்வி ..அதுக்குத்தான் இன்னிக்கு கூட்டம் "

இருக்குதா , இல்லையா நகர சந்தேகத்துல, இருக்ற சங்கத்துக்கு கூட்டிகிட்டு வந்துட்டிஎட, நாயே என மன்குணியை மனதில் சபித்தவாறே, " அப்ப சங்கம்னு ஒன்னு இல்லியா " அப்பாவியா கேட்டேன்..

" சங்கம் இல்லைன்னு எப்ப சொன்னேன்..இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னேன் "

**************************************************

அறைக்கு செல்ல நேரமாகி விட்டதால், நானும் மன்குனியும் அன்று இரவு சாப்பிடாமல், பட்டினியாகத்தான் தூங்கினோம்

3 comments:

  1. எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே தமன்னா புராணம். அப்படி என்னா அந்த பெண்ணிடம் இருக்குன்னு நான் கேட்க மாட்டேன்......

    ReplyDelete
  2. கேட்டாலும் சொல்ல மாட்டேன்..ஹி ஹி

    ReplyDelete
  3. ஹி..ஹி..ஹி... கலக்குங்க..!!!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா