Friday, April 9, 2010

"ஜிட்டு" வை கொஞ்சம் தொட்டு பார்ப்போமா ?
உலகத்துலேயே கொடுத்து வச்சவர்ணா, அவரு நம்ம ஜிட்டு கிருஷ்ணமுர்த்திதான்...
அவர் சொல்றது, மேலோட்டமா படிச்சா புரியாது... அதை பயன் படுத்திக்கிட்டு, கடவுள் இருக்கிறர் என நம்புபவர்களும், இல்லை என நம்புபவர்களும், அவர் தங்கள் கட்சிதான் , என சாதிக்கின்றனர்..

பகுத்தறிவு மற்றும் ஆன்மீக அன்பர்களின் ஒருமித்த ஆதரவை பெற்ற ஒரே celebrity , உலகிலேயே இவர் மட்டும்தான்...

இவர் மதம் என்பதையும் ஏற்கவில்லை... கட்சி, இயக்கம் போன்றவற்றையும் ஏற்கவில்லை....

கடவுள் என்பதையும் ஏற்கவில்லை... தலைவன் , அவன் கொள்கை என்பதையும் ஏற்கவில்லை...

ஆனால், கடவுள், மதம் என்பதை ஏற்கும் ஆன்மிக நண்பர்கள், கட்சி, இயக்கம், கொள்கை என்பதை ஏற்கும் பகுத்தறிவு நபர்கள், இதை எல்லாம் மறந்து விட்டு, அவரை சொந்தம் கொண்டாடுவது, நல்ல நகைசுவை...

சரி... அவர் நூலில் இருந்து , ஒரு சுருக்கமான பகுதி... உங்கள் பார்வைக்கு... ( வரிக்கு வரி மொழி பெயர்ப்பு, என்ற பாணியில் இல்லை )இந்த சமுகத்தை மாற்றி அமைக்க போறேன்


" அரசியல் வாழ்க்கையில் எவ்வளவோ பார்த்து விட்டேன்.. இப்போது உண்மையிலயே இந்த சமுகத்துக்கு, நாட்டுக்கு நல்லது பண்ண விரும்புகிறேன் ... இதில் எந்த குறுக்கு புத்தியும் இல்லை... சமுகத்தில் இருந்து என்ன பெற்றேனோ அதில் கொஞ்சமாவது திருப்பி கொடுக்க நினைக்கிறன் "

" தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேட்குறேன் ... கொடுக்கல் வாங்கலை பத்தி ஏன் பேசுறீங்க? "


சமுகத்தில் இருந்து எனக்கு எவ்வளவோ கிடைச்சு இருக்கு.. அதை திருப்பி கொடுக்கணும் "

" சமுகத்துக்கு ,நாட்டுக்கு என்னவெல்லாம் கடன் பட்டு இருக்கீங்க "

என்னிடம் உள்ள எல்லாம் : வங்கி கணக்கு ..படிப்பு ,, நல்ல பெயர் --- அடேங்கப்பா..இன்னும் எவ்வளவோ

" உண்மையில் நீங்க சமூகத்திடம் இருந்து எதையும் எடுத்துக்கல... ஏன்னா , நீங்களும் சமுகத்தில் ஒருவர்தானே.. உங்களுக்கும் சமூகத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்து, நீங்க ஒரு தனி ஆளா இருந்த, நீங்க சமூகத்துக்கு எதாச்சும் கொடுக்கலாம்... ஆனா நீங்க இந்த சமுகத்தின் ஒரு பகுதி... யார் கிட்டயாச்சும் கடன் வாங்குனா, திருப்பி கொடுக்கலாம்..அனால், நீங்களே சேர்ந்து உருவாக்கி இருக்ற சமுகத்துக்கு என்ன கொடுக்க முடியும்
இந்த நாடுதான் சார், எனக்கு பணம் , உடை உணவு எல்லாம் கொடுத்துச்சு... நான் ய்டசும் திருப்பி செய்யணும்... இல்லைனா நான் நன்றி கெட்டவன் ஆயிடுவேன்.. நல்லது எதாச்சும் செய்யணும்.. எனக்கு பேர் வராட்டியும் பரவாயில்ல

நீங்க என்ன சொல்ல வர்ரிங்கனு புரியுது... ஆனா, நீங்க எல்லாத்தையும் கொடுத்தாலும், உங்க கடனை தீர்க்க முடியுமா.. ஏழைகளுக்கு உதவல்லாம்...நாட்டுக்கு நிதி வழங்கலாம்... ஆனாலும், உங்க கடமை முடியாது.... ஏன்னா , சமுகத்துக்கு பணம் கொடுத்தா, அது நீங்க உங்களுக்கே கொடுத்தா மாதிரிதான்... நீங்களும் சமுகத்தில் ஒரு பகுதிதானே.... அதாவது, நீங்களே கொடுத்து, நீங்களே வாங்கிகிரீங்க.சமுகம் என தனியா எதுவும் கிடையாது ... .

ஆமா..நானும் ஒரு பகுதிதான்..நான் சமுகத்தின் நல்லது , கேட்டதுக்கு காரனம இருக்கேன்...கேட்டதை நீக்கிட்டு நன்மையை நிலை நாடுவேன்

நல்லது நா என்ன... எல்லோரும் நல்லதுன்னு ஒத்துகிறது... மரியாதை தருவது ..சமுக அமைப்பில், அந்த உத்தமர் என்ற நிலையை அடிய விரும்புரின்ங்க .இல்லியா ?

மனிதனை சிறை வைத்துள்ள சமுக அமைப்பை மாற்றி அமைக்க விரும்புறேன்

சமுக அமைப்பை உருவாக்கியதே மனிதன்தானே... மனிதனும்,, சமுகம அமைப்பும் ஒன்றை ஒன்று சார்ந்தது...இந்த அமைப்புக்குள் மற்றம் என்பது, உண்மையில் மாற்றமே இல்ல.... நீங்க இந்த சமுகத்தை சார்ந்தவனாக இருக்கும் வரை, , இந்த சமுகம் மோசம் அவதற்குதான் நீங்கள் உதவ முடியும் சமுகத்தை மற்ற விரும்பினால், சமுகத்தில் இருந்து நிஇங்கள் வெளியே வர வேண்டும் ...சமுகம் என்பது என்ன... பொருள் சேர்ப்பது, முன்னேற விரும்புவது, சாதிக்க விரும்புவது , போட்டி, பொறமை .. இதில் இருந்து நீங்க விடுபட வேண்டும்...

அதாவது நான் துறவி ஆகணுமா

இல்ல..ஒரு துறவி மேம்போக்க பார்க்கும்போது உலகை துறந்தாலும், உள்ளுர அவரும் சமுகத்தின் ஒரு அங்கம் தான்... எதாவது சாதிக்கணும் , இன்னும் சிறந்தவர மாறனும் என்ற ஆசை அவர் கிட்டியும் இருக்கும்


அஆமாமா

அன்பு என்பதை உணர்ந்தால்தான் , வாழ்கையை முழுமையாக வாழ முடியும்...

ஆமா சார் ... நாம் நேசிப்பதில்லை..நம் மனம் அவ்வளவு எளிமையாக இல்லை...

ஏன் ? ஏன்னா. உங்க நோக்கம் எல்லாம், கடமைகள், மாற்றங்கள் , சமுகத்தில் ஒரு நல்ல பெயர், இன்னும சிறந்த நிலையை அடைவது போன்றவைதான்... இந்த உலகத்திற்கே நீங்கள்தான் மையம் என நினைத்து கொள்கிறீர்கள்...

ஒரு மரத்தை , ஒரு மலரை , ஓடும் நதியை பார்த்து ரசிக்க உங்களுக்கு நேரம் இல்லை.. அப்படியே பார்த்தாலும், அந்த பார்வையில் அன்போ அழகோ இருப்பதில்லை..உங்கள் மனதில் உள்ள குப்பைகளோடு அவற்றை பார்கிறீர்கள் "


ஆமா சார்... சரி, அப்ப நான் என்னதான் செய்றது...

மனசுல கள்ளம் கபடம் இல்லாம, சும்மா எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருங்க என்ன பண்றதுன்னு உங்களுக்கே தெரியும்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா