Monday, April 12, 2010

"அங்காடி தெரு" வின் ஆயிரம் குறைகள்


அங்காடி தெரு , படம் வந்தாலும் வந்தது... அதை சிலர் ஒரேடியாக பாராட்ட, சிலர் ஒரேடியாக திட்ட ஆரம்பித்தனர்..
படம் பார்த்த நமக்கு, இதில் எல்லாம் படித்த பின், ஒரே குழப்பம்.. இப்போது யாரவது, அந்த படம் நல்ல படமா இல்லையா என கேட்டால், " தெ ரியலையே ஏஏ" என்றுதான் சொல்ல முடியும் போல...
எனினும் பொது நலன் கருதி, எல்லோரும் என சொல்கிறார்கள் என தொகுத்து தர வேண்டிய மாபெரும் பணியை, நானே செய்கிறேன்... வேறு வழி?

*************************
உண்மையில் படத்தில் ஆயிரம் தவறுகள் இருகின்ட்ன்றன... இசை சரி இல்லை... அப்படி சொல்வடஹி விட , படத்தோடு ஓட்ட வில்லை...

குறிப்பாக, நாயகனும் , நாயகியும், கடையில் டுயட் பாடுகிறார்களாம்.. அது விடியோவில் பதிவாகி விடுகிறதாம்.. ( பாட்டோடு !!! )

ஐயோ...ஐயோ...

இன்னும் சொல்லி கொண்டே போகலாம்... அனால், நம் மக்கள் அதை எல்லாம் விட்டு விட்டு , மாற்றி யோசித்து நம்மையும் குழப்பி, அவர்களையும் குழம்பி விட்டர்கள்...
சரி... இதோ குழப்பங்களும், விளக்கங்களும்

************************

ஏன் படம் முழுக்க அகார்களுக்கு கெட்டது மட்டுமே நடக்கிறது? இயல்பாக இல்லையே?

ஒரு சராசரி மனிதனுக்கு, நல்லது மட்டுமோ , கெட்டது மட்டுமோ , தொடர்ந்து நடந்து கொண்டிருக்காது... அனால், ஒரு சில பாவ பட்ட மனிதர்கள், தொடர்ந்து கஷ்டம் மட்டுமே படுகிறார்கள் அல்லவா? அவர்களில் சிலரை பற்றித்தான் படம்...

பணக்காரர்கள் என்றால் கேட்டவர்கலாகத்தான் இருப்பார்களா..

இல்லை... கெட்டவர்கள் எல்லா இடத்திலும் தான் இருப்பார்கள்... பணக்காரர்கள் நல்லவர்களாகவும் இருப்பதுண்டு... கெட்டவர்களாகவும் இருப்பதுண்டு... இந்த படத்தில், இருப்பவர் கெட்டவர்களில் ஒருவர்..அவ்வளவுதான்

அவ்வளவு கஷ்டபடுபவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லை... ஒருவர் கூடவா புரட்சி செய்ய மாட்டார் ?

புரட்சி செய்தால் நல்லதுதான்.. ஆனால் செய்ய முடிவதில்லை என்பதுதான நடைமுறை.... இதை விட இழிவுகளை தாங்கி கொண்டு, வாழ வேண்டிய நிலை பலருக்கு உள்ளது...

சாதாரண விமர்சனத்தை கூட எதிர்க்கும் நிலையில் பணி பிரியும் நம்மை போன்றவர்களுக்கு, அவர்கள் ஏன் எல்லாவற்றையும் சகித்து கொண்டு வாழ்கிறார்கள் என்பது புரியாதுதான் ( ஒரு முறை , ஒரு நிறுவன அதிகாரி என் தவறை சுட்டி காட்டிய போது, கோபத்துடன் ஒரு வாரம் லீவு போட்டேன்.. பிறகு அவர் வருத்தம் தெரிவித்ததும் பணிக்கு திரும்பினேன் - இத்தனைக்கும் தவறு என் மேல்தான் )

இந்தியாவில், ஏன் இதுவரை புரட்சி நடக்கவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன...

ஓகே... அட்லீஸ்ட் படத்திலாவது , யாரவது எதிர் குரல் கொடுப்பது போல காட்டி இருக்கலாம் அல்லவா ?

எப்படி சமுகம் இருக்கிறது என்பதை படைப்பது ஒரு வகை... எப்படி இருக்க வேண்டும் என படைப்பது இனொரு வகை... எப்படி இருக்க முடியும் என்று கூட சொல்லலாம் ... ( எதிலும் சேராத படங்களும்உண்டு )

எல்லா வகை படங்களும் வருவது நல்லதுதான்...

எதிர் குரல் கொடுப்பதை, சினிமாத்தனம் இல்லாமல் , ஆழ்ந்த சிந்தனையுடன் யாரவது எடுத்தால் , இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்ப்பு , அதற்க்கும் கிடைக்கும்...
**********************8

பொது நன்மை கருதி வெளியிடுவோர் : pichaikaaran.blogspot.com

5 comments:

  1. innoru paarvaiyaalanApril 12, 2010 at 2:27 AM

    //பொது நன்மை கருதி வெளியிடுவோர் : pichaikaaran.blogspot.com//

    adada adada :)))

    btw good post.

    ReplyDelete
  2. ஒரு பார்வையாளன் , தொல்லையே , தாங்க முடியல... இன்னொரு பார்வையாளனா ?///

    ReplyDelete
  3. சோகத்தையே திகட்ட திகட்ட காட்டியிருந்தனர்...
    எதிர்த்தால் கால் வேறு பொய் விடும் என்ற என்னத்தை ஏற்படுத்தும் கிளைமாக்ஸ்..
    ... பாராட்டை மட்டுமே பலரும் மனசாட்சியின்றி சொல்லிகொண்டிருக்க, உமது விமர்சனம்
    எனக்கு ஆறுதலாக இருந்தது..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா