Sunday, April 18, 2010

ஆரம்பம்- ஒரு தமிழன் கொலையில் .முடிவு- ஒரு தமிழன் கையில், - கண் முன் சோக வரலாறு



இன்னும் சில ஆண்டுகள் கழித்து , அப்போதுள்ள இளம் தலை முறை நம்மை இப்படி கேட்க கூடும்....

ஒரு வரலாற்று நாயகனின் தாய் , சிகிச்சைக்கு வந்த பொது, உங்கள அரசு அவரை திருப்பி அனுப்பியதாமே.. அபோது நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்..

தன மக்களுக்கு ஒரு தனி அரசு நடத்தும் அளவுக்கு வல்லமை பெற்ற ஒரு தலைவன் , சிக்கலில் இருந்தபோது , நீங்கள் யாரும் உதவவில்லியா?

அவர் நல்லவரா கெட்டவரா என்பது வேறு பிரச்சினை.. அனால் அவர் முக்கியமான சகாப்தம்..அவருக்கு உரிய முக்கியத்துவம் உங்க காலத்தில் ஏன் கொடுக்க படவில்லை..

.
தமிழ் நாட்டு தமிழர்கள் தான் இப்படி இருந்தீர்கள்... அவர் பிறந்த மண்ணில் பிறந்து, அங்கிருந்து வெளி நாடு செல்லும் வசதி படைத்த சிலர் கூட, அவரது முக்கிய போராட்டத்தின் போது, அதை கண்டு கொள்ளாமல்., நான் ஏன் கடவுளை நம்பவில்லை... கடவுள் இருக்கிறாரா .இல்லையா என்று நாத்திக பிரசாரங்களையும், எந்த சாமியை எப்படி கும்பிட வேண்டும், என்பது போன்ற ஆத்திக பிரச்சாரங்களையும் செய்து பொழு போக்கி வந்தாரகலாமே.. இதெல்லாம் முக்கியம் தான்.ஆனால் வாழ்வா சாவ என்று ஒருவர் போராடும் நிலையில் , இதெல்லாம் முக்கியமா...

இப்படி எல்லாம் வரலாறி காரி துப்பி விடுமோ, என்ற அச்சம் " பிரபாகரன் - வாழ்வும் மரணமும் " என்ற நூலை படித்து முடித்த போது ஏற்பட்டது...

பிரபாகரன் விடுதலை வீரர் அல்லது ராஜிவை கொன்றவர் என்ற எளிய அறிமுகம் தான் நம்மில் பலருக்கு இருக்கும்... ஒரு முழுமையான பார்வை இல்லாததுதான், இன்று அவர் தாய் திருப்பி அனுப்படும் துணிச்சலை, அரசுக்கு தந்துள்ளது என்றால் மிகை இல்லை...

இலங்கை தமிழர் முழு வரலாறு என்று இல்லாமல், பிரபாகரன் என்ற தனி மனிதனை புரிந்து கொள்ளும் நோக்கத்தில் எழுதப்பட்ட நூல்தான், பிரபாகரன் - வாழ்வும் , மரணமும்...

ஒரு தமிழரை கொல்வதில் ஆரம்பிக்கும் அவரது வரலாறு , ஒரு தமிழரால் காட்டி கொடுக்கப்பட்டு , முடியும் போது, விதியே- தமிழ் சாதியை என் செய்ய நினைத்தை என்று கலங்கத்தான் முடிகிறது...

எந்த நியாயங்களுக்கும் கட்டு படாத சிங்கள அரசு, கொடூரத்தின் உச்சியை சந்திக்கும் தமிழர்கள், ஆயுதம் தவிர வேறு வழியே இல்ல்லாத , துரதிர்ஷ்ட நிலை, பல போராளி குழுக்கள் போராட்டம், ஒவ்வொருவரும் தம் நிலைதான் சிறந்தது , அதை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற அபத்தமான எதிர்பார்ப்பு என சோகங்களை மட்டுமே தமிழ் இனம் சந்தித்து இருப்பதை உணர்த்துகிறார் நூல் ஆசிரியர்...

பிரபாகரனை தூற்றவ , போற்றவோ செய்யாமல், நடுநிலையாக எழுதப்பட்டு இருப்பது சிறப்பு...

பிரபாகரன் என்ற மனிதனுக்குள் எத்தனை உன்னத கனவுகள், தமிழ் ஈழ வங்கி, கப்பல் வணிகம், விமான படை , என்றெல்லாம் படிக்கும்போது, தமிழன் என்ற முறையில் பெரிமிதமாக இருக்கிறது... அவருக்குள் இருக்கும் காதல், குழந்தை தனம் என்பது புதிதாக இருக்கிறது....

அனால் எதுவும் பயன் பாடாமல் பொய் விட்டது தான் சோகம் .. இந்நிலைக்கும் அவரே காரணம் ஆகி விட்டாரா என்றும் தோன்றுகிறது...

சக போராளி காதலித்தபோது, சட்டம் பேசியவர், தான் காதலித்தபோது சட்டத்தை மறந்ததை, வராலறு சற்று கேலியாகத்தான் பார்க்கும் .. காதல் வேறு , பால் உணர்வு வேறு, காதலை எதிர்க்கவில்லை, திருமணத்தில் முடியாத காதலை எதிர்க்கிறேன் என்பதெல்லாம் தமிழ் நாடு அரசியல் வாதிகள் பேச்சு போல் உளது...

இந்த பிரச்சினை, பிரபாகரனுக்கு எல்லா விதத்தலும் நிகரான உமா மகேஸ்வரன் மரணத்தில் முடிந்தது, தமிழ் இனத்திற்கு ஒரு பேர் இழப்பு....

பிரபாகரன் மாவீரதன்...அனால் அவரை போன்ற பல மாவிரர்கள் இருந்தனர்... சக தமிழர்களாலேயே அழிகபட்டனர் என்பதுதான் சோகமான வரலாறு..

வென்றவர் வரலாற்றைத்தான், நாம் நம்புவோம்... அந்த அடிப்படையில் , மாவீரன் மாத்தையா , மரண தண்டில் இறந்தான் என்று தான் வரலாறு பதிவு செய்யும்... அவனுன் தன பாணியில், போராடினான் என்பது மறக்க படும்...

இது போன்ற விவகாரங்களில், நூலாசிரியர் பார்வை நடு நிலையாக இல்லை...
ஒவ்வொருவரும் , தம் இலக்கை அடைய, சில பொருந்தா கூட்டணிகள் அமைத்தனர்... இந்திய ராணுவத்துடன் கூட்டடணி அமைத்தது அப்படி இருக்க கூடும்...அவர்கள் தோற்றவர் கல் என்பதால் , துரோகிகள் என்று அர்த்தம் இல்லை.,..அவர்கள் பார்வையில், அவர்களும் மாவிரர்கல்தான்... ( உமா மகேஸ்வரனை கொன்றது விடுதலை புலிகள் அல்ல அன்பது எவ்வளவு தூரம் சரி என்று தெரியவில்லை )

அவ்வளவு ஏன், ஒரு கட்டத்தில், பிரபாகரன் கூட, பிரேமா தாசவுடன் கூட்டு சேர வில்லையா....

இதை தவிர்த்து விட்டு பார்த்தால், நூல் நடு நிலையாக உள்ளது....

அமைதி பூங்காவான இந்தியாவில் கூட, சில ராணுவ வீர்கள் , பெனகலிடம் அத்து மீறி நடந்து கொண்டு கைதாவது , வழக்கமான செய்திதான்... சாதாரண மக்களுக்கு அந்த சில ராணுவ வீர்களின் இயல்பு தெரியும.... பதட்டமான இலங்கையில், அப்பாவி தமிழ் பெண்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொண்டு இருப்பர்கள் என்பதை நம்மால் உணர முடிகிறது... இந்த விஷயத்தில் ராஜிவை யாரும் எச்சரிக்காதது ஒரு வரலாற்று சோகம்..
அவர் சற்று கவனத்துடன் இருந்து இருந்தால் , வரலாறே மாறி இருக்க கூடும்...

புரட்சி தலைவர் - கலைஞர் போட்டியில், பிரபாகரனுக்கு புரட்சி தலிவர் அருள் கிடைத்தது... அந்த அருள், உமா மகேஸ்வரனுக்கோ , மற்ற போராளி குழுகளுகோ கிடைத்து இருந்தால், பிரபாகரன் நிலைக்கு அவர்கள் வந்து இருக்க கூடும்... இலங்கை வரலாறே மாறி இருக்கலாம்.
புரட்சி தலைவி, கலைன்ஞர் போன்றவர்கள் கடைசி நேரத்தில் சற்று புத்தி சாலித்தனமா செயல் படு இருந்தால், தமிழ் இனம் பெருமை படும் அளவுக்கு முடிவு அமைந்திருக்க கொட்டும்..

இதெல்லாம் , வெறும் கற்பனைகள் தான்...

மாபெரும் வீரம், வல்லமை கொண்ட ஓர் இனம் , ஒற்றுமை இல்லாததால் பின்னடவை சந்தித்து உள்ளது என்பதே எதார்த்தம் என்பதை பளிச் என சொல்கிறது புத்தகம்...

இலங்கை தமிழர் போராட்டத்திற்கான காரன்கள் அப்படியே உள்ளன.. அவர்கள் வீழ்ச்சிக்கு காரணகளும் அப்படியே உள்ளன

**************************

ராகவன் அவர்கள் எழுத்தை, நடையை பொறுத்தவரை , சொல்ல புதிதாக ஒன்றும் இல்லை... எல்லோரும் அறிந்த விறு விறு விறு விருப்பான நடை.... இரவி பதினொன்றுக்கு, சும்மா படம் பார்க்க புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தேன்... படித்து முடித்து விட்டுதான் புத்தகத்தை கீழி வைத்தேன்...

ஓர் வரலாற்று நாயகனை புரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்... இளம் எழுத்தாளர்கள், எழுத்தை கற்று கொள்ளவும் படிக்கலாம்..

புத்தகம் : பிரபாகரன் - வாழ்வும் மரணமும்
ஆசிரியர் : பா ராகவன்
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

1 comment:

  1. piraabaharan muslimgalai sontha natai vittu viratiya seithiyai sollavilaaiya illangai arasu thamilarhal meethu nadathiya thakuthalukku satrum kuraivu illamal 80 ayiram muslimgalai vittai vittu ahathihalha aakiyathai pesavillaiyo

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா