Wednesday, April 21, 2010

இன்னொனுதாங்க அது- டிரஜெடியில் முடிந்த ராஜீவ் பாதுகாப்பு காமடி



ஒரு படத்தில், கிணறு காணவில்லை என வடிவேலு செய்யும் அல்லபரையை பார்த்து சிரித்து இருக்கிறோம்... ( அரசு இயந்திரம் !!!! )

அனால், நமது அரசு இயந்திரம் இதை விட காமெடிகளை தினமும் அரங்கேற்றி வருகிறது.... ஒரு முக்கியமான கொலை வழக்கில் , இது போன்ற தவறுகள் எப்படி எல்லாம் டார்ச்சர செய்கின்றன என விளக்குகிறார் ஆசிரியர்..(ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்,)

முக்கிய பிரமுகர்களுக்கு மாலை அணிவிக்கும் நபர்களது, விபரங்களை , காவலர் குறிப்பேட்டில் , குறித்து வைக்க வேண்டும் என்பது நடை முறை..எதாவது பிரச்சினை என்றால், இதை refer செய்வர்ர்கள்...ராஜீவ் வழக்கிலும், அவருக்கு மாலை அணிவிப்பவர் பேரை அறிய, குறிப்பதை கேட்டு இருக்கிறார்கள்..அதில் உள்ள பெயரை வைத்து, மாலை அணிவிப்பறை கோழி அமுக்குவது போல அமுக்கி விடலாம் அல்லவா... அனால் வந்து சேர்ந்தது, குறிப்பேடு அல்ல, ஒரு குப்பை காகிதம்... ஒரு துண்டு சீட்டில், சும்மா கடமைக்காக, குப்பு சாமி,. கோவிந்தசாமி , சுப்பன் குப்பன் என்று கிறுக்கி இருந்தது... இதை வைத்து யாரை விசாரிப்பது....
கண் பார்வை பதிக்கபட்ட ஒருவருக்கு , ரெண்டு கண்ணும் சுப்பரா இருக்கு என சான்றிதழ் வழங்கி , ஓட்டுனர் உரிமம் கொடுத்து உள்ளனர்... சம்பந்த பட்ட நபர் , சிக்கலில் மாட்டும்போதுதான், இது தெரிய வந்தது.. ரெண்டு கண்ணும் நல்ல தெரியும் நு சான்றிதழ் கொடுத்து இருக்கேன்களே..ஒரு கண்ணுதானே தேர்யுது என்று கேட்டல், இன்னொரு கனுதங்க அது என்பது போல சமாளித்து இருக்கிறார் அந்த மருத்துவர்....
விசா இல்லாமல், நம் தலைவர் இலங்கைக்கு சென்றதை பற்றி விசாரிக்க முயன்றார்கள்... " அவிங்க யாருக்கு விசா கொடுத்தாயிங்க ...எப்பவும் சும்மா போறது தானே... இதை எல்லாம் பெருசு பன்னதீன்கண்ணே ..என்று வழக்கை ஊற்றி மூடினார்கள் நம் ஆட்கள்....
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வர தம்தம் ஆனது.. எப்போது வருவார் என காவலர்களுக்கு தெரியவில்லை... அனால், கொலையாளிகள் , சரியான நேரம் அறிந்து வைத்து இருந்தார்கள்
புலிகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என என்னிடம் சம்பளம் வாங்கும் புலி தலைவரே என்னிடம் ரகசியமாக சொல்லி விட்டார் என சிரிப்பு போலிஸ் போன்று பேசிய உயர் அதிகாரி...
என பல பொருபின்மைகளை கடந்து, குற்றவாளிகளை கண்டு பிடித்தது எப்படி என விரி விறுவிறுப்பாகவும், பெர்மித்தடனும் சொல்லி இருகிறார ஆசிரியர்...

புலிகளின் வியுகம் அசர வைகிறது.... வீ பீ சிங் கூட்டத்தில், practice ஆட்டம் அடியது வியக்க வைகிறது....

இடஹ்யும் மீறி , அமைப்பின் குறைபாடுகள் தான், கொலைக்கு காரணம் என்கிறார் நூல் ஆசிரியர்...
இதை தடுத்து இருந்தால், அது அப்போது புலிகளுக்கு தோல்வி தான்... அனால், நீண்ட கால பார்வையில், அது ( கொலை முயற்சியில் தோல்வி) அவர்களுக்கு அது நன்மைதான் செய்து இருக்குமோ என தோன்றிகிறது...

உண்மை , கற்பனையை விட விநோதமானது...

ஹரி பாபுவின் அன்னை தேனீர் சாப்பிடுகிறீர்களா என கேட்ட போது , இவர்கள் மறுத்து இருந்தால், வழக்கின் போக்கே திசை மாறி இருக்கலாம்..
மரகதம் சந்திர சேகர் மீது , ராஜீவுக்கு தனிப்பட்ட மரியாதையை, அன்பு இல்லை என்றால், வரலாறே மாறி இருக்க கூடும்...
ராஜீவ் , தன கட்சியினர் மேல் வைத்த அன்பு , ஒரு பெண் கொண்ட காதல், ஒரு போராளி குழு, புலி உறுபினர் மேல் வைத்த நம்பிக்கை- என எல்லா நல்ல பண்புகளும் , கெடுதலாக முடிவது மாபெரும் வினோதம்...
இதை அப்படியே சினிமாவாக எடுத்தல், படத்தில் லாஜிக் இல்லை என நம் பதிவர்கள் எழுதுவார்கள்.

" ஒரு விதத்தில், இவர் தாணு இடத்தில் இருந்து, இப்போது இல்லாமல் ஆகி இருக்க வேண்டியவர் " போன்று பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடி, நம்மை ரிலாக்ஸ் செய்கிறது...

வாழப்பாடி ராமமூர்த்தி அந்த ஊர் வேண்டாம், அங்கு தங்க வேண்டாம், வர வேண்டாம் என்றெலாம் கெஞ்சுவது, ராஜீவ் விமானம் தாமதம் ஆவது எல்லாம் மனதை நெகிழ வைகிறது....

இலங்கை மக்களின் இணை அற்ற வீரர் பத்மநாபா படு கொலையின் மர்மங்களும் விலகுவது, அழகாக விவரிக்க பட்டுள்ளது...

நம் அரசு இயந்திரம், சரியானவர் தலைமை அமைந்தால், திறமையாக செயல்படும் என்று நூல் ஆசிரியர் அவர்களை பெருமை படுத்த மறக்க வில்லை...

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்

நம் வேலையே நாமும் உருப்படியாக செய்ய வேண்டும் என்ற என்னத்தை, அரசு அதிகாரிகளுக்கு உன்றத்துகிறதோ இல்லையோ, நமக்கு அந்த எண்ணத்தை ஏற்படுத்துவது, நூலாசிரியரின் உழைப்புக்கு வெற்றி


book title : ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்,
ஆசிரியர் : ரகோத்தமன் (தலைமைப் புலனாய்வு அதிகாரி - சிபிஐ ஓய்வு)
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

2 comments:

  1. நானும் படித்தேன், சூப்பர் புக் , ஒவ்வொரு இடமும் அதிர வைத்து அந்த தலைவர் பரிதாபமாய் விழுந்து கிடந்ததை நினைக்க வைக்கிறது.

    ReplyDelete
  2. if that could have been avoided, entire history would have been different, I believe...

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா